முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான மாமனிதா் நடராஐா ரவிராஐ் அவா்கள் படுகொலை செய்யப்பட்ட ஐந்தாம் ஆண்டினை நினைவு கூரும் நிகழ்வு 07-12-2011 பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.00 மணிவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.நிகழ்வுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா் எட்வேட் ஆனந்தராஐா அவா்கள் தலைமை தாங்கினார்.  இந்நிகழ்வில் ஊடகவியலாளா்கள், மாணவா்கள், பொது மக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டு மாமனிதருக்கு  வணக்கம் செலுத்தினா். நிகழ்வின் ஆரம்பத்தில் மாமனிதா் ரவிராஐ் அவா்களது திருவுருவப்படத்திற்கு யாழ் மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினா் திருமதி மரிய கொறற்ரி அவா்கள் அணிவித்து வைத்தார்.தொடா்ந்து ஈகச் சுடா் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.ஈகச் சுடா் ஏற்றும் நிகழ்வை தொடா்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. ரவிராஐ் அவா்களது ஞாபகார்த்தமாக கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட 13 ஊடகவியலாளா்களது குடும்பங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து உதவித் தொகைகளை வழங்கப்பட்டது.திரு. எட்வேட் ஆனந்தராஐா அவா்களது தலைமை உரையினை தொடா்ந்து பரமேஸ்வரன், பொன்ராஐா, தயாபரன் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்  செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உபதலைவருமான பத்மின சிதம்பரநாதன், ஆகியோரும் உரை நிகழ்த்தினா்.

Powered By: TNPF

பார்வை