யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான சுப்பிரமணியம் தவபாலன் கருத்து தெரிவிக்கையில்.மோட்டார் சைக்கிளில் வந்து என்னை வழிமறித்த குழு ஒன்று தனி நாடு உனக்குத் தேவையா ? என்று கேட்டு இரும்புக் கம்பிகளால் தாக்கினர்கள் என்றார்.இச் சம்பவம் தொடர்பாக அயலில் உள்ளவர்கள் தெரிவிக்கையில். சுத்தத் தமிழால் தகாதவார்த்தைகளால் பேசியபடி மோட்டார் சைக்கில்களில் வந்து இறங்கிய கும்பல் ஒன்றுவீதியால் சென்றுகொண்டிருந்த இளைஞனை கடுமையாகத் தாக்கினர்.சம்பவம் நடைபெறுவதற்குமுதலே வந்து அருகில் உள்ள படை முகாமில் நின்று உரையாடிக் கொண்டு நின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.மேற்படி சம்பவ இடத்திற்கு முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திர குமார்,கஜேந்திர குமார் பென்னம்பலம் ஆகியோர் வருகை தந்து தாக்குதலுக்கு உள்ளான மாணவர் ஒன்றியத் தலைவரை வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றனர். பாரளுமன்ற உறுப்பினர்சிறிதரனும் தாக்குதலுக்கு உள்ளான மாணவனைப் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டார். சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்களின் தாக்குதல் இது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.குறித்த மாணவன் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தலைவராதற்கு முன்னர் இனந்தெரியாதவர்கள் அத்துறுத்தல் விடுத்ததும்இ மர்ம மனிதர் பிரச்சினைகளுக்கு எதிராக யாழ் பல்கலைக் கழகத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னின்றி நடாத்திய போது இவர் மீது இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல்கள் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.





Powered By: TNPF

பார்வை