சிறி லங்கா அரச தலைவர்கள் மீதான போர் குற்றசாட்டுக்களை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, தமிழர்க்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒபாமா நிர்வாகம் எடுத்து கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதே மாதிரியான அறிவுரையை தான் சில காலத்திற்கு முதல் ஒபாமா நிர்வாகம் பாலஸ்தீன நிர்வாகசபையின் தலைவர் திரு Mohamad Abbas க்கு தெரிவித்தது என்பதை இங்கு நாம் குறிப்பிடவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் தான் இதை உறுதிபடுத்தவேண்டும் ஆனால் இந்த வாரம் நடந்த நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை நாம் உண்ணிப்பாக கவனிக்க வேண்டும். இன்று பொதுநலவாய நாடுகள் மகாநாடு ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இந்த மகாநாட்டில் பிரித்தானிய பிரதம மந்திரி திரு David Cameron  சிறிலங்காவின் போர்குற்றங்கள் சுதந்திர விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.யாழ்ப்பானத்திட்கு இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகிந்த ராஜபச்கே இன் நண்பர் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் ஒரு சர்வதேச பாராளுமன்ற குழு சென்றுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அமெரிக்க அழைத்து முன்று நாட்களாகஅமெரிக்க ராஜாங்க திணைகளாக அதிகாரிகள், திரு ராபர்ட் பிளேக்யை சந்தித்துள்ளார்கள். சிறிலங்காஅரசின் அமைச்சர் மகிந்த சமரசிங்கா அமெரிக்க சென்றுள்ளார். இவையெல்லாம் இப்போது நடந்துகொண்டிருப்பவை?சிறிலங்கா அரசு செய்த போர்குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேசம் அதில் முக்கியமாக சர்வதேசத்தில் மிகமுக்கிய மனிதவுரிமை பாதுகாப்பு அமைப்புக்களான Humanrights watch, Amnesty Internation, International Crisis group ஆகிய அமைப்புகளின் அழுத்தங்கள்,Channel 4, Aljazeera ¸ Headlines TV¸ NDTV, Guardian¸ Times போன்ற ஊடகவியலாளர்கள் ,ஐக்கிய நாடுகள் சபையில் அமைந்துள்ள Inner City Press ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாக சர்வதேச நாடுகள் சிறி லங்கா அரசு சர்வதேச விசாரணைக்குள் உட்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதில்முக்கியாமாக செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் Channel 4 ன் சிறிலங்காவின் கொலைகலங்கள் என்று ஆவணப்பட ஒளிபரப்பப்பட்ட போது அந்து நிகழ்வில் பங்குபற்றிய Amnesty International  பிரதிநிதி சிறி லங்காவில் போரின் கடைசி 10 நாட்களில் நடந்தவை பற்றி மட்டும் விசாரணை நடாத்த கூடாது, அதற்கும் மேலாக சிறி லங்காவில் சிங்கள அரசுகளால் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவை முழுமையாக ஆராயப்படவேண்டும் என்று கூறினார்.இப்படி சிறிலங்கா அரசை சுற்றி பல நாடுகள் அழுத்தங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் இந்தவாரம் நடைபெறும் நிகழ்வுகளை நாம் மிக கவனமாகவும் அலசி ஆராய வேண்டும். தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வொசிங்டனில் சந்திப்புகளை நடாத்திக்கொண்டிருக்கும் போது மகிந்தசமரசிங்கா நியூ யோர்க்கில் ஐ. நா காரியதரிசி பான் கி மூன்வுடன் சந்தித்து பேசியுள்ளார், அதே நேரத்தில் அவர் ஐரோப்பியஒன்றியத்திடம், ஐ .நா விசாரணை குழுவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றுகூறியிருக்கிறார். அதே நேரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதினால் அமெரிக்க விஜயதிற்கு முன் அமெரிக்கஅரசு சிறிலங்காவில் இருந்து இறந்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு அளித்துவந்த விசேட வரிச்சலுகையை நீடித்துள்ளது. அதே நேரத்தில் சிறி லங்காவில் சீனா பல முதலீடுகளை இட்டு தனது ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது, அதே போலவே ஆபிரிக்காவிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது,சீனாவிற்கு எதிராக ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த கூடிய நாட்டின் பக்க பலம் அமெரிக்காவிற்கு தேவை, அந்த நாடு இந்திய!ஏற்கனவே இந்தியாவில் அமெரிக்க பல தொழில் நுட்ப உதவிகள், முதலீடுகள் செய்து இந்தியாவை ஒருபலமான பொருளாதார நாடாக மாற்றும் திட்டங்களை நடைமுறை படுத்தி கொண்டிருகிறது. இந்தியாவும் ஆபிரிக்காவில் தனது ஆதிக்கத்தை பொருளாதார முதலீடுகள் மூலமாக தனது வலுவை செளுத்திக்கொண்டிருகிறது இந்தநேரத்தில் சுதர்சன் நாச்சியப்பன் சர்வதேச நாடாளுமன்ற குழுவுடன் வட மாகாணத்தின் புனரமைப்பு என்றுகூறிக்கொண்டு ஒரு விஜயத்தை மேட்கொண்டிருக்கிறார்.அதே நேரத்தில் பொதுநலவாய நாடுகள் மகாநாடு, இந்த நாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நாடுகள் ஆகிய பிரித்தானிய, கனடா சிறி லங்கா ஒரு சர்வதேச விசாரணைக்குள் சிறி லங்கா உட்படுத்த வேண்டும் என்று பல தடவை கூறி இருக்கிறது, ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து போன்ற நாடுகள் என்ன சொல்லப்போகிறது?ஆஸ்திரேலியாவில் இன்று பல சாட்சியங்கள் முன்வந்து பல வழக்குகளை பதிவு செய்து ஆஸ்திரேலியாஅரசை இக்கட்டான நிலைகுள்ளும் சிறி லங்கா அரசை பொதுநலவாய நாடுகள் முன் குற்றவாளி நாடாக காட்டிநிற்கிறது.இந்த மகாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை அறியும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் பொதுநலவாய நாடுகள் ஜிம்பாவே நாட்டை இந்த கட்டமைப்பில் இருந்து விலத்தி வைத்ததுபோல், குற்ற நாடாகிய சிறி லங்காவிற்கு எதிராக என்ன செய்யும் நிலையில் பொதுநலவாயநாடுகள் இருக்கிறது?ஜிம்பாவே, பிஜி, பாகிஸ்தான், நிஜெரியா போன்ற நாடுகளை ஜனநாயகத்தை மதிக்காத காரணத்தால்வெளியேற்றப்பட்டன. ஜிம்பாவே இன்று வரை பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பில் மீண்டும் சேர்த்துகொள்ளப்படவில்லை.சிறி லங்கா தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மட்டுமா மதிக்கவில்லை, சிறி லங்கா சுதந்திரம் பெற்றகாலத்தில் இருந்து தமிழ் இன சுத்திகரிப்பை செய்து கொண்டு வந்ததும் அல்லாமல் ஒரு இனப்படுகொலையும்செய்து வந்திருக்கின்றது, அதன் உச்சகட்டமாக அர்மேனியா, யூத, கம்போட்சிய, ரவாண்ட நாடுகளின்படுகொலைகளுக்கு பிறகு 21 நூற்றாண்டில் இந்த நவீன உலகத்தில் எந்த மனிதநேய நேயமும் நினைத்தேபார்க்க முடியாத ஒரு இனப்படுகொலையை செய்து அந்த உடல்களின் மேல் நின்று வெற்றி விழாகொண்டாடியது, கொண்டாடிக் கொண்டிருகிறது. இப்படிப்பட்ட சிறி லங்காவில் இன்னும் இரண்டு வருடத்தில்அடுத்த பொதுநலவாய நாடுகளின் மகா நாடு நடக்க இருக்கிறதாம், ஆகேவே சிறி லங்கா தன் மேல் படிந்த கறைகளை துடைத்து விட்டு வர வேண்டும் என்று திரு David Cameronகூறுகிறார்.அமெரிக்க ராஜாங்கதிணைக்களத்தின் அதிகாரிகளோ போர்க் குற்றச்சாட்டு என்ற விடயத்தில் தமிழர் தரப்பு அழுங்குப்பிடியாக இல்லாமல் அதனைப் பயன்படுத்தி தமக்கான நலன்களை வென்றெடுப்பதில் அதிக கவனத்தைச் செலுத்தவேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் அதற்கே ஆதரவாகச் செயற்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள்தெரிவித்திருக்கின்றனர்.தென் சுடான், கிழக்கு திமோர் க்கு போன்ற நாடுகளில் எந்த மக்களின் விருப்புகளை கேட்டு அவர்களின்சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்கள் தனித்து வாழும் உரிமையை, அமெரிக்க, ஆஸ்திரேலியாபோன்ற நாடுகள் வழிவகை செய்தது போல் ஏன் ஈழ தமிழ் மக்களுக்கு முடியாது?, அவர்கள் ஏன் ஒருகொலைகாரன் பிடியில் நின்று வாழ்நாள் முழுவதும் போராடி அழிய வேண்டும்?இதை எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம்கூறினார்களா? இதை இவர்கள் தான் தெரிவிக்க வேண்டும். தமிழ் மக்கள் சிறி லங்கா என்ற நாட்டில் சகலஉரிமைகளுடன் வாழ முடியாது என்பதை அவர்கள் தெரிவித்தார்களா? தமிழ் மண் சிங்கள மயம் ஆக்கப்படுகிறது,தமிழ் மக்கள் கலாசார சீரழிவுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் இந்த அதிகாரிகளுக்குதெரிவித்தார்களா? இவற்றுக்கான பதிலை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தமிழ் மக்களிடமும், அமெரிக்கஅரசு கூறிய புலம்பெயர் மக்களிடமும் தெரிவிக்கவேண்டும்.ஆனால் இவற்ற்றுக்கான பின்னணி எங்கே இருக்கிறது என்பதை இந்த ஆய்வின் முன் சொன்னதில் இருந்துநீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.அமெரிக்க அரசுக்கு தென் ஆசியாவில் தன்னை பலமாக வைத்திருக்க தேவையான நாடு இந்திய, சிறிலங்கவிட்குஎதிராக போர்குற்றம் என்றால், அதற்கும் பின்னல் சிறி லங்கவுடன் சேர்ந்த போர் குற்றநாடுகள் ஒன்று இரண்டு இருக்கின்றன, அந்த நாடு எதுவென்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.இது இந்த வாரம் நடந்த நிகழ்வுகளை பார்த்து செய்யப்பட்ட ஆய்வு, சென்ற வாரம் 'தமிழ் தேசிய கூட்டமைப்பைஅமெரிக்க அழைத்தது எதற்காக? என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆய்வில் பாலஸ்தீன மக்களுக்கு என்ன நடந்ததுஎன்பதை பற்றி எழுதப்பட்டது, அது உண்மை ஆவது போல் அமெரிக்க ராஜாங்க அதிகாரிகள் கூறியதாக வந்தசெய்தி, ஊர்ஜீதப்படுத்துகிறது.அமெரிக்க அரசு மேலும் கூறிய இன்னொரு செய்தி தாயகத்தில் உள்ள தமிழர்களின் அசைக்கமுடியாத பிரதிநிதிகள் என்ற வகையில், தமிழர்களின் தலைமைத்துவத்தை ஈழத் தமிழர்கள் மத்தியிலும்புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் கூட்டமைப்பு பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப் பட்டுள்ளதாகவும் அறிய வந்தது.இதில் புலம்பெயர் மக்களுக்கு ஒரு செய்தி, ஈழத்தமிழருக்கு நியமான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால்,புலம்பெயர் மக்கள் பலமாக இருக்க வேண்டும். எமது பலம் தான் எமது தாயக மக்களுக்கு சரியான தீர்வை தேடிகொடுக்கும்இந்த ஆய்வு சரியாய் பிழையா என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழ் மக்களுக்கு கூறப்போகும்செய்தியில் அதன் பிறகு நடைபெறப்போகும் அரசியல் மாற்றங்களில் தான் தங்கி இருக்கிறது.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Powered By: TNPF

பார்வை