முச்சக்கர வண்டியினை விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பித்து செல்ல முற்பட்ட படையினரின் கவசவண்டியினை மக்கள் திரண்டு தடுத்துநிறுத்தியுள்ளார்கள் இந்தவிபத்தில் இருவர் காயம் அடைந்துள்ளார்கள்.அண்மைய நாட்களில் சிறீலங்காப்படையினரின் ஊர்திகளினால் ஏற்படும் விபத்துக்களை படையினர் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட ஊர்திக்கோ அல்லது மக்களுக்கோ நீதிகிடைக்காது தப்பித்துகொள்ளும் செயற்பாடுகள் வடபகுதியில் அதிகரித்துக்காணப்படுகின்றது. இன்னிலையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வின்சர் சந்தியை கடக்க முற்பட்ட வேளை ஸ்ரான்லி வீதியால் வந்துகொண்டிருந்த படையினரின் கவசவாகனம் மோதியதில் முச்சக்கரவண்டி தடம்புரட்டுள்ளதுசம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தந்தையும் மகனும் சிறு காயங்களுடன உயிர்தப்பியுள்ளர்கள்.தடம்புரண்ட முச்சக்கரவண்டி செதங்களுக்கு உள்ளானதை அடுத்து அங்கிருந்து தப்பித்து செல்ல முற்பட்ட படையினரின் கவச வாகனத்தினை மக்கன் ஒன்று கூடி தடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்துப் பிரிவினர் மக்களை சமாளித்து படையினரை காப்பாற்ற மேற்கொண்டமுயற்சியும் மக்களது நேரடி வாக்குமூலத்தையடுத்து முறியடிக்கப்பட்டது.அண்மையில் மன்னார் பகுதியில் உந்துருளியில் சென்ற மருத்துவரை மோதிவிட்டு சிறீலங்கா கடற்படையினர் தப்பிசென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Powered By: TNPF

பார்வை