உயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் முடக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீண்டும் இயங்க வைக்க திட்டம் வகுத்துள்ளக அரச வளங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.வேறு எந்த நிறுவனங்களோடும் கூட்டுச் சேராமல் அரசாங்கமே நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக 6 தொடக்கம் 7 பில்லியன் ருபா வரைச் செலவாகும் என்றும், இச் சீமெந்துச் தொழிற்சாலையில் 250 முதல் 500 மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்ய முடியும்.
சீமெந்து உற்பத்திற்காக புதிய இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலைக்காக சிங்களவர்களை உயர் பதவிகளில் நியமிக்கவும், அவர்களின் குடும்பங்களை குடியமர்த்தவும் ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழர் வளங்களும், தாயகப்பிரதேசமும் தி;ட்டமிட்டு அழிக்கப்படுவதாக யாழ் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.


Powered By: TNPF

பார்வை