தமிழ் பேசுகின்ற மாணவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாடுகளை மனிதாபிமான அடிப்படையில் வேண்டிக் கொள்கிறோம் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவத்துள்ளது.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் வைத்து மற்றுமொரு மாணவன் தாக்கப்பட்டுள்ளார் கலைப்பீடத்தினை சேர்ந்த 4ஆம் ஆண்டு மாணவன் கவிராஜன் கடந்த 22 ஆம் நாள் வீடுநோக்கி சென்றுகொண்டிருக்கையில் கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்அண்மையில் மாணவர் ஒன்றியத்தலைவர் தாக்கப்பட்டு வகுப்பபு புறக்கணிப்பில் மாணவர்கள் ஈடுபட்டவேளை இந்த மாணவன் தாக்கப்பட்டுள்ளான் பல்கலைக்கழக நிர்வாகத்தினைர் படைத்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி கால்வியினை தொடராலம் என்று யாழ்மாவட்ட படைத்தளபதி உறுதிமொழி வழங்கிய அடுத்தகணமே இந்தமாணவன் தாக்கப்பட்டள்ளான்.இந்த தாக்குதல் சந்தேகத்தையும் வேதனையினையும் தருகின்றது எனவேஇத்தாக்குதல்சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு பாதுகாப்புத்தரப்பினர் உறுதி மொழி வழங்கிய பின்னரும் இப்படியான உயிர் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்கின்ற நிலையில் எவ்வாறு எமது மாணவர்கள் தமது கல்வியை சுமூகமாகத் தொடர முடியும் என்ற கேள்வி எழுகின்றது.எனவே தமிழ் பேசுகின்ற மாணவர் களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வ தேச நாடுகளை மனிதாபிமான அடிப்படையில் வேண்டிக் கொள்கிறோம். என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

Powered By: TNPF

பார்வை