9:52 AM | Posted by
Tamil National Peoples Front
வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இங்கு தம்மை வாக்காளர்களாகப் பதிய விரும்பினால் தமது உறவினர்கள் ஊடாக கிராம சேவையாளர்களிடமோ அல்லது தேர்தல் திணைக்களத்திடமோ விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையின்படி வெளிநாட்டில் உள்ளவர்களும் தம்மை வாக்காளர்களாகப் பதிய முடியும்.குடும்பமாக வெளிநாட்டில் இருப்பவர்கள் தமது உறவினர்கள் ஊடாக இங்கே தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம். இதற்கான விசேட விண்ணப்பப் படிவங்கள் கிராம சேவையாளரிடம் வழங்கப்பட்டுள்ளன.இந்த விண்ணப்பத்தில் வெளிநாட்டில் உள்ளவர்களது பெயர்களைப் பதிவு செய்து கொடுக்கும்போது கட்டாயமாக அவர்களது கடவுச் சீட்டு இலக்கத்தை குறிப்பிடுதல் வேண்டும். இதேபோன்று குடும்பத்தில் ஏதாவது ஓர் அங்கத்தவர் வெளிநாட்டில் இருப்பின் அவரையும் இங்கு வாக்காளராகப் பதிய முடியும்.குறித்த விசேட விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9:52 AM | Posted by
Tamil National Peoples Front
உலகின் பழமைவாதம் தழுவிய ஆட்சியாளர்கள் சுதந்திரத்தின் பக்கம் திரும்புகின்றனர் என்பதைக் கண்டு கொண்டி ருக்கிறோம். வரலாறு மீண்டும் சுழன்று ஜனநாயகத்தின் பக்கம் வருகிறது. இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெகுவிரைவில் வரும் என்றார் அவர்.கனேடிய நாடாளுமன்றத்தில் மனிதவுரிமை கண்காணிப்பகத்துடன் இணைந்து சிறிலங்காவின் கொலைக் களம் விவரணத்தைத் திரையிட்டவர் பிரவுண். 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தர இவர் முயன்ற வேளை அவருக்கு விஸா தர கொழும்பு அரசு மறுத்துவிட்டது. கனடிய மனிதவுரிமை மையத்துடன் நடந்த சந்திப் பில், இலங்கை தொடர்பான தனது அனுபவங்களை பிரவுண் பகிர்ந்து கொண்டார். 2009இல் இலங் கைக்குப் பயணம் செய்ய நான் முயன்றதில் இருந்து கொழும்புவின் வரம்பு மீறிய அழுத்தத்தைச் சந்தித்து வருகிறேன். எனினும் இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அளவுக்கு இங்குள்ள இலங்கைத் தூதரகம் எனக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளது என்றார்.இலங்கை அரசு ஏதோ ஒன்றை மறைப்பதால் தான் இவ்வாறு தனக்கு மிரட்டல்களை விடுகிறது என்பதைத் தான் உணர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.தான் சார்ந்திருந்தும் கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்கா விவகாரத்தில் மிகவும் அழுத்தமான நடவடிக்கைகளை எடுப்பதையிட்டு தான் மிகவும் சந்தோசமடைவதாகவும், கனேடியப் பிரதமர் காப்பர்,"மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றம் காணாவிட்டால் 2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டு கொழும்பில் நடைபெற்றால் கலந்து கொள்ளப்போவதில்லை'' என்று தெரிவித்தது மிகவும் சக்திவாய்ந்த ஒரு எச்சரிக்கை என்று தான் கருதுகிறார் எனவும் பற்றிக் பிரவுண் தெரிவித்தார்.
9:51 AM | Posted by
Tamil National Peoples Front
போரின் நேரடி அனர்த்தங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம், அதன் மறைமுகமான விளைவுகளையும் அனுபவிக்கத் தொடங்கி விட்டோம். எங்கள் கூட்டுக் குடும்பக் கலாசார உறவு முதல் புலம்பெயர் உறவுகளின் பிரிவுவரை எல்லாமும் ஏதோவொரு வகையில் எங்கள் வாழ்வில் சோகத்தை தருவனவாகவே அமைந்துள்ளன. வெளிநாடுகளில் வாழும் எங்களவர்களின் உறவு நிலை என்பது நீடிக்கும் என்று எண்ணுகையில், காணிப் பதிவு என்ற புதிய திட்டம் வெளிநாட்டில் வாழும் எம் உறவுகளின் தொடர்பை வேரறுத்துவிட்டது.ஆம், காணி உரிமையை வலுவடையச் செய்தல் என்ற வகையில் காணிப்பதிவு இடம்பெறும் அதேநேரம், இப்பதிவு மூலம் வெளிநாட்டவர்களின் காணிகளை அரசு சுவீகரிக்கவுள்ளது என்ற தகவலால் வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் தங்கள் பெயரிலுள்ள காணிகளை வேகமாக விற்பனை செய்கின்றனர். எனது வீடு, எனது காணி யாழ்ப்பாணத்தில் இருக்கின்றது. நான் என் தாய்மண்ணுக்குப் போய்வருகிறேன். எனது யாழ்ப்பாணத்து வீட்டில் உறங்கினாலே எல்லாக் கவலையும்போம் என்ற நினைப்போடு வாழ்ந்த எங்கள் உறவுகளை வேரறுத்து; ஊர் உறவு பறித்து ;தாய்த் தேசத்திற்கு வராதே என்று தடுப்பதாகக் காணிப் பதிவு அமைந்துவிட்டது.சொந்த வீட்டை, பெருமையாய்ப் பேசிய தன் காணியை விற்ற பின் தாய் மண்ணுக்குப் போக வேண்டும் என்ற நினைப்பு வெறுப்புக்குரியதாகவே இருக்கும். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய யாழ்ப்பாண மண்ணின் பெருமையை லண்டனில், கனடாவில், சுவிஸில் பிறந்த என் பிள்ளைக்கு எப்படிச் சொல்வது என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதோ உன் அப்பாவின் வீடு, உன் அம்மாவின் காணி என்று,ள நாம் பிறந்த தாய் மண்- தமிழ் மண் எனச் சுட்டிக்காட்டி சுணை ஏற்றலாம் என்றால், அதற்கும் விடுவாரில்லை. ஓ! என் தமிழ்த் தேசமே! உன்னில் இருந்து என் ஆணி வேரை அறுத்து ஊர் உறவைப் பறிக்கிறார்; என் செய்வோம்!என் அப்பாவின் ஊர் யாழ்ப்பாணமாம் என்று என் பிள்ளை சொல்லுமேயன்றி, நல்லூர்க் கந்தனின் திருவிழா பார்க்கப் போகிறோம் என்றா சொல்லும்? முருகா! உன்னைத் தொலைக்காட்சியில் பார்த்து அரோகரா என்பேன்.என் பிள்ளை அதனை ஒருவிதமாகப் பார்க்கும். எல்லாம் விற்றாகிவிட்டது. என் தமிழ் உணர்வைத் தவிர. இதுவே எங்கள் புலம்பெயர் உறவுகளின் தற்போதைய மனநிலை.
9:32 AM | Posted by
Tamil National Peoples Front
தமிழ்த் தேசியத்தினை வலுப்படுத்துவதற்காகவும் இன ஒருமைப்பாட்டை பேணுவதற்காகவும் செயற்படுகின்ற கட்சி மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியாகும். இக்கட்சிக்கு கூட்டாக வாக்களிப்பதன் மூலம் மட்டுமே கொழும்புத் தமிழ் மக்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த முடியும். மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரட்ணஆகியோர் தமிழ்த் தேசம் தனித்துவமான இறைமை கொண்டது என்பதையும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ண உரிமை உண்டு என்பதனையும் வெளிப்படையாக ஆதரிக்கும் துணிச்சலான அரசியல் தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்தவொரு பேரினவாதக் கட்சிகளின் செல்வாக்கிற்கும் உட்படாத நேர்மையான தலைவர்கள். இவர்களுடைய ஆழமான தர்க்கரீதியான, துணிச்சலான கருத்துக்களும் அவை தொடர்பான செயற்பாடுகளும் தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்துவதற்கு அதிகளவில் உதவியிருக்கின்றன. ஆபத்துக்கள் தம்மை நோக்கி வந்த காலத்திலும் துணிச்சல்களை வெளிக்காட்ட அவர்கள் தயங்கியதில்லை. துணிச்சலான இந்த அரசியல் தலைவர்களையும் அவர்களது கட்சியையும் பலப்படுத்த வேண்டியது எம் எல்லோரினதும் கடமையாகும். கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இரண்டு இலட்சம் வரையான தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஒருங்கிணைந்து வாக்களிப்பார்களேயானால் அது வழங்கும் செய்தி தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்பதைக் கொழும்புத் தமிழ் மக்கள் மறக்கக்கூடாது. ஏனெனில் இத் தேர்தலை வெறும் மாநகரசபைத் தேர்தலாக சர்வதேச சமூகம் பார்க்கவில்லை. மாறாகத் தமிழ்த் தேசியத்தோடு கொழும்புத் தமிழ் மக்கள் இருக்கின்றார்களா? என்பதை அளவிடும் ஒரு கருத்துக்கணிப்பாகவே நோக்குவார்கள்.இத்தேர்தலில் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களது ஒற்றுமையை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசத்தின் பேரம்பேசும் சக்தி யை வலுப்படுத்த வேண்டும் எனக் கோருகின்றோம் என்றுள்ளது.
9:45 PM | Posted by
Tamil National Peoples Front
ஒரு சமூக சேவகர், மனிதர்கள் பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பது பற்றி உதாரணங்களுடன் வெகு அழகாக விளக்கிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி உட்பட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே இனிப் பிறர் பொருளுக்க ஆசைப்படுவதில்லை என முடிவெடுக்கும் அளவுக்குப் பிரசங்கம் வெகு சிறப்பாக அமைந்திருந்தது.வீட்டுக்குச் சென்ற பின்பு ஏற்கனவே களவாகப் பிடித்து அடைத்து வைத்திருந்த அடுத்த வீட்டுச் சேவலை மனைவியிடம் கொடுத்துக் கறி சமைக்கும் படி அதே பிரசங்கி கூறினாராம். மனைவி ஆச்சரியத்துடன் பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என அவர் போதனை செய்ததைப் பற்றிக் கேள்வி எழுப்பினா ளாம். அவர் மெல்லச் சிரித்தவாறே "மண்டு! ஊருக் கல்லோடி உபதேசம்; உனக்கும் எனக்கும் இல்லையடி'' என்று சொன்னாராம்.
மஹிந்தவின் உரை எப்படியிருந்தது?
இது சில வேஷதாரிகளை நையாண்டி செய்வதற்குத் தமிழ் மக்கள் மத்தியில் கூறப்படும் ஒரு பழங்கதை. அண்மை யில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ உரையாற்றிய போது இந்தக் கதை ஞாபகத்துக்கு வந்து நின்றது.அவரது நீண்ட உரையின்போது அவர் குறிப்பிட்ட சில விடயங்கள் ஊருக்கு மட்டும் உபதேசம் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந் திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
"ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்து வமான சமூக, மத மற்றும் கலாசார அடையாளங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. மனித உரிமைகள் என்ற பேரில் நாடுகளின் தனித்துவமான அடையாளங்களில் தலையீடு செய்வதோ மற்றும் மத கலா சார விவகாரங்களில் தலையீடு செய் வதோ ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல'' என்று தெரிவித்த இலங்கை ஜனாதிபதி, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீ கரிக்க வேண்டும் எனவும் அங்கு வலியுறுத்தியிருந்தார்.வடக்குக் கிழக்கில் தான் பாலாக மழை பொழிய வைத்தது போல வும் அங்குள்ள ஆறுகள், குளங்கள், கிணறு கள் எல்லாவற்றிலும், தான் தேன் ஊற வைத்தது போலவும் வடக்கு, கிழக்கு மக்கள் உபரிகைகளில் நின்று சுகந்தம் வீசும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பது போலவும் அங்குள்ள குறைந்தளவு படையினர் மக்களுக்கு கைகட்டிப் பணிபுரிகின்றனர் என்பது போலவும் ஜனாதிபதி தனது உரையில் ஒரு தோற்றப் பாட்டை வெளிக் காட்டியமை பற்றி நாம் இங்கு விமர்சிக்க முயலவில்லை. எப்போ துமே அவர் சர்வதேச மேடைகளில் உண்மை யிலிருந்து வெகு தொலைவில் நின்றே உரையாற்றுவதை நாமும் அறிவோம்; உலகமும் இதனை நன்கு அறியும்.
உண்மைகளை வெளியே கொண்டு வருவோர் நிலை
அவரது கூற்று மாறாக யாராவது உண்மைகளை ஆதாரபூர்வமாக வெளிக் கொண்டு வந்து விட்டால் அவர்கள் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பிரசாரம் செய்கிறார் கள் எனக் குற்றம் சாட்டப்படுவதையும் உலகம் அறியும்.ஆனால் நாம் இங்கு கவனத்தில் எடுப்பது ஒரு நாட்டின் சமூக, மத, கலாசார விழுமியங்கள் மீதான அந்நியத் தலையீடுகள் தொடர்பான அவரின் எதிர்ப்புக்குரல் தொடர்பான நியாயத்தன்மையைப் பற்றிய விடயங்களாகும்.இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதும் அவர்களுக்கெனத் தனித்துவமான சமூக, மத, கலாசார அடையாளங்கள் உண்டு என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இலங்கையில் தமிழ் மக்கள் கிறிஸ்துவுக்கு முன்பு ஐந்தாம் நூற்றாண்டிலேயே நாகரிகம் உள்ள ஒரு சமூகமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை அண்மைக் காலத்தில் கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நகரங்கள் கட்டி அமைக்கப்பட்டமை, கடல் வணிகம் மேலோங்கியிருந்தமை போன்றவற்றுக்கான தொன்மை ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இராமாயணம் என்ற தொன்மை வாய்ந்த இலக்கியம் இலங்கையில் திராவிட சமூகத்தினர் மத்தியில் முன்னேறிய நகரஅமைப்புகள் உருவாக்கப்பட்டமையும் அடிமை, ஆண்டான் சமூக அமைப்பு உருவாகுமளவுக்கு முன்னேறியிருந்தமையையும் அந்தப் படையெடுப்புப் பற்றியும் தெளிவுபடுத்துகிறது.
நியாயமான கோரிக்கை
சிங்கள இனத்தின் சமூக, மத, கலாசார விழுமியங்களுக்குக் குந்தகம் ஏற்படுத்தக் கூடாது என்ற ஐ.நா. கூட்டத் தொடரில் அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுமையிலும் நியாயமானது. அதைத் தவறு என எவருமே கூறிவிட முடியாது. ஆனால் அவர் மனித உரிமைகளின் பெயரால் நாட்டினதோ, இனத்தினதோ தனித்துவமான அம்சங்கள் மேல் தலையீடு செய்வதை அனுமதிக்க முடியாது என அவர் கூறியதை எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.அதாவது மனித உரி மைகள் என்பன சிங்கள மக்களின் இன, சமூக, மத, கலாசார விழுமி யங்களுக்கு விரோதமானவையா என்ற கேள்வியையே அவரின் கருத்துகள் எழுப்புகின்றன. உண்மையிலேயே தமிழ் மக்களின் சமூக, மத கலாசாரங்கள் மீது சிங்கள மேலாதிக்க சக்திகளால் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தி லிருந்தே ஒரு போர் தொடுக்கப்பட்டு வந்தது. எனவே தமிழ் மக்கள் முதலில் தமது அடையாளங்களைப் பாதுகாக்க சாத்வீக வழியில் போராடினர். அந்தப் போராட்டங்கள் ஆயுத வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டன. ஆயுதத்தைத் தொட்டுக் கூடப் பார்க்காத பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பலி கொள்ளப்பட்டனர்.எனவே பிரிந்து போவதை விட வேறு வழி இல்லையென்ற முடிவுக்கு வரவேண்டிய நிலை தோற்றுவிக்கப் பட்டது. அடக்குமுறை ஆயுதவன் முறைக்கு எதிராக விடுதலை ஆயுத வன்முறை வெடித்தது.அதாவது ஆயுதப் போராட்டம் என்பது திடீரென வெடித்த ஒரு பூகம்ப மல்ல. எமது இன, மத, கலா சார விழுமியங்களை அழிவிலிருந்து பாதுகாக்க நாம் நடத்திய போராட் டங்களின் பரிணாம வளர்ச்சி. அது ஆனால் அந்த உரிமைப் போராட்டம் பயங்கரவாத நாமம் சூட்டப்பட்டு சர்வதேச ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டது.இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளைத் துடைத்தழிப்பதிலும் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்கு வதிலும் வேறு எந்த ஒரு சிங்களத் தலைவர்களையும்விட தீவிரமாகச் செயற்பட்டவர். சாதாரண தமிழ் மக்க ளின் உயிரழிவைப் பற்றிக் கவலையின்றி மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துப் போரை வெற்றி கண்டவர்.போர் முடிந்த பின்பும் தமிழ் மக்களின் சமூக, மத, கலாசார விழுமியங்கள் மேல் தொடர்ச்சியான போரை நடத்தி தமிழ் மக்களின் இனத் தனித்துவத்தை அழிக்க முனைப்புடன் செயற்பட்டு வருகிறார்.
பறிக்கப்பட்டுள்ள தமிழர் பிரதேசங்கள்
தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பல பிரதேசங்கள் இராணுவ முகாம் களாகவும் உயர் பாதுகாப்பு வலயங் களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. இவற் றில் இன்றுவரை அவர்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அகதி முகாம்களிலும் உறவி னர் வீடுகளிலுமே தொடர்ந்து பல இன் னல்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்ற னர். இவற்றில் முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களைச் சொந்தக் கிராமங்களாகக் கொண்டவர் கள் கூட வேறு பிரதேசங்களில் குடியேற்றப்படுகின்றனர். விவசாயம் செய்யப்பட்ட வளமான நிலங்கள், மீன்பிடித் தொழிலில் செழிப் புற்றிருந்த கடற்கரைக் கிரா மங்கள் எனப் பல பகுதிகள் தமிழ் மக்களிடமிருந்து நிரந்தரமாகவே பறிக்கப்படுகின்றன. அனல் மின் நிலையம் என்ற பெயரில் சம்பூர் மக்களின் பரம்பரை பூமி பறிக்கப்பட்டு விட்டது.
சுற்றுலா அபிவிருத்தி என்ற பேரில் குச்சவெளி நிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், தனிக்கல்லு, பட்டிக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் சிங்கள வர்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கப்பட்டு விட்டது. இவ்வாறே கொக்கிளாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கரைவலை மீன்பிடி உரிமை தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.
மஹிந்த அரசின் கொடூரத் தலையீடுகள்
அதாவது தமிழ் மக்களின் குடியிருப்பு, பொருளாதார, வாழ்வியல் எனப்படும் சமூக விழுமியங்கள் மீது மஹிந்த அரசின் பூரண அனுசரணையுடன் கொடூரமான தலையீடு மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதாவது பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த சமூக விழுமியங்கள் அழிக்கப்படுகின்றன.இவ்வாறே வடக்கு, கிழக்கில் ஒரு புத்த மதத்தவன்கூட வாழாத இடங்களில் கூட பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் உருவாக்கப்படுகின்றன. எமது சொந்த வழிபாட்டு முறைகளான இந்து, கிறிஸ்தவ முறைகளுக்கு அப்பால் பௌத்த மதம் எம்மேல் திணிக்கப்படுகிறது.இதேவேளை, எமது பாரம்பரிய வழிபாட்டு முறைகள் மீது செய்யப்படும் தலையீடுகள் எமது மத விழுமியங் களையே அழிக்குமளவுக்கு விஸ்வரூ பம் எடுத்துவிட்டன. அண்மையில் சிலாபம் பத்திரகாளி அம்மன் கோயிலில் மிருகபலி மேற்கொள்ளப்படவிருந்த சமயத்தில் அங்கு வந்த அமைச்சர் மேர்வின் சில்வா அங்கிருந்த மிருகங்களை அள்ளிச் சென்றுவிட்டார்.அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்ற வகையில் மேர்வின் சில்வாவின் நடத்தைக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கும் உண்டு. அதுமட்டுமன்றி அனுராதபுரத்தில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு முஸ்லிம் தர்க்கா புத்த பிக்குகள் தலைமையில் வந்த ஒரு கூட்டத்தால் இடித்து அழிக்கப்பட்டது. சுற்றுலா அபிவிருத்தி என்ற பேரில் வடக்கு, கிழக்கின் பகுதிகளிலும் முளைத்து வரும் சுற்றுலா விடுதிகளும் களியாட்டு மையங்களும் எமது பாரம்பரிய கலாசாரத்தின் மீது பெரும் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்துள்ளன. தென்னி லங்கையிலிருந்து பாலியல் தொழி லுக்கெனப் பெண்கள் இங்கு கொண்டு வரப்படும் ஒரு கேவலமான நிலைகூட உருவாகி வருகிறது. அதாவது நாம் பாரம்பரியமாகப் பேணிவந்த எமது கலாசார விழுமியங்களைச் சிதைக்கத் திட்டமிட்ட வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கலாசார விழுமியங்களை சிதைக்கும் நடவடிக்கை
ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு நாட்டின் சமூக, மத மற்றும் கலாசார விழுமியங்கள் மீது தலையீடு இருக்கக் கூடாது என உரத்துக் குரலெழுப்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்நாட்டில் வாழும் தமிழ் , முஸ்லிம் மக்களின் சமூக, மத, கலாசார விழுமியங்கள் மீது தலையீடு செய்வது மட்டுமன்றி அவற் றைச் சிதைக்கும் கொடுமையிலும் ஈடுபட்டு வருகிறார்.அதாவது ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை என்ற வகையிலேயே அவர் செயற்பட்டு வருகிறார். ஆனால் சர்வதேசம், சிங்கள மக்களின் சமூக, மத,கலாசார விடயங்களில் தலையீடு செய்வதாக எவ்வித தகவலும் இல்லை. ஆனால் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் சமூக, மத, கலாசார அம்சங்களுக்கு எதிராகச் செயற்படுவதை மனித உரிமைகளின் பெயரால் கண்டனம் செய்து வருகின்றது. அநியாயங்களைத் தொடர்ந்து மேற் கொண்டுவரும் எவரும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதை விரும்புவதில்லை என்பது உண்மை தான். அந்த வகையில் ஜனாதிபதி ஓர் இனத்தின் மீதான மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறை பற்றிப் பேசுவதுகூட ஒரு தலையீடு எனக் கூக்குரலிடுகிறார்.மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான கண்டனங்கள் ஒரு நாட் டின் அடிப்படை விடயங்களில் தலையீடு செய்யும் தவறு என்றால் அந்த நாட்டின் மனித உரிமை மீறலும் இனங்கள் மீதான ஒடுக்குமுறையும் அங்கீகரிக்கப்பட்டவை என்பதுதான் அர்த்தமல்லவா?இந்த நிலையில் தமிழ் மக்களின் சாதாரண அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கும், அப்படி வழங் கப்படும் கோரிக்கைகளைப் பயங்கர வாதம் என்றோ அந்நியத் தலையீடு என்றோ குற்றம் சாட்டும் மஹிந்த ராஜபக்ஷ பாலஸ்தீன மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
எல்லாம் ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை என்பதன் வெளிப்பாடுதான்.
9:39 PM | Posted by
Tamil National Peoples Front
நாடு மற்றுமொரு கட்ட உள்ளுராட்ச்சித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எனினும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐக்கியதேசியக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் கொழும்பு மாநகர சபைக்கு நடைபெறப்போகும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று கோட்டையில் கொடியேற்றுமா அல்லது கோட்டையைக் கோட்டை விடுமா என்பதே அனைவரதும் இன்றைய கேள்வியாக உள்ளது.இந்த இடத்தில் மனோகணேசன் அவர்கள் வகிக்கப் போகும் பாத்திரம்; ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும். தமிழ் மக்கள் இலங்கை முழுவதும் பரந்து வாழ்கின்ற போதும் வடகிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களிலேயே செறிந்து வாழ்கின்றனர். அண்மைய காலங்களில் இடம் பெற்ற அனைத்து தேர்தல்களிலும் வடகிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் மலையகத் தமிழ் மக்கள் மலைகத்தமிழ் கட்சிகளுக்கும் தமது வாக்குகளை கூடுதலாக அளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பேட்டியிட்ட பிரபா கணேசனுக்குக் கிடைத்த வாக்கு என்பது கொழும்புத் தமிழ் மக்கள் மனோகணேசன் அவர்களுக்கு அளித்த வாக்கேயொழிய அது பிரபா கணேசனுக்குரிய வாக்கல்ல என்பது அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்படும்.
ஆகவே கொழும்பில் மனோ கணேசன் அவர்களின் பலம் என்பது அசைக்க முடியாததாக இருக்கின்ற போதிலும் அவரை ஏன் மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதே இன்று தமிழ் மக்களின் முன்னாலுள்ள கேள்வியாகும். தலைநகரில் தமிழர்கள் வர்த்தகத்துறையில் மிகவும் பலம்பொருந்திய நிலையில் காணப்படுவதானது பலருக்கு தமிழர்களின் நிகழ்ச்சித்திட்டங்கள் மறைமுகமாக வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் எமது அரசியல் பலம் மூலமே நாம் அதனைத்தடுக்க முடியும். அதிகாரமற்ற மனோ கணேசனால் தமிழ் மக்களுக்கு எதிரான சதித்திட்டங்களை முறியடிக்க முடியாது.ஐ.நா சபையின் முன்னாள் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆபர் அம்மையார் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்தபோது காணாமல் போனார்கள் பற்றிய பிரச்சினைகளை உலகறியச் செய்வதற்கு ஐநா அலுவலகத்திற்கு முன்னால் மனோ கணேசன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட ஆர்பாட்டமானது வயிற்றெரிச்சலை வர்த்தகப்பலத்தினையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
வாக்குப்பலத்தினையும் தலைநகரில் சிதறடிப்பதற்கு வாழும் பலமான பெரும் வெற்றியினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. தாமே தழிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று மார்தட்டும் பல அரசியல் வாதிகள் வடகிழக்கிலேயே ஒரு சிறு மக்கள் போராட்டத்தினை நடத்தமுடியாத வங்குரோத்து நிலையில் இருக்கும் போது தலைநகரில் துணிச்சலுடன் போராடும் தலைவனாகிய மனோ கணேசன் அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? வாக்களிக்கக் கூடாதா? வாக்களிக்காவிட்டால் பாதிக்கப்படப்போவது யார்? விடை பாதிக்கப்படப்போகும் தமிழ் மக்கள் மனோ கணேசன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதாகும். 02.10.2011 வெளியாகிய சன்டே ரைம்ஸ் பத்திரிரிகையில் தமது ஆதரவாளர்கள் தாம் விரும்பியவாறு வாக்களிக்கலாம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளளது. இவ்வாறு கூறுவதற்கு சம்மந்தன் அவர்களுக்கு உரிமை உள்ளதெனினும் வரலாற்றினை சற்றுத் திரும்பிப் பார்த்தல் மிகவும் அவசியமானதாகும். தமிழ் மக்களுக்காகப் போராடும், தமிழ் மக்களின் மிகுந்த அபிமானத்தினை பெற்றுள்ள கடந்த உள்ளுராட்ச்சித் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்காக வடகிழக்கில் துணிச்சலுடன் பிரச்சாரம் செய்த மனோ கணேசன் அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக்கேட்பதில் சங்கடங்களை எதிர் நோக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் அவர்கள் எந்த தார்மீகம் மற்றும் மனச்சாட்சியின் அடிப்படையில் கடந்த ஜனாதிப்பதித் தேர்தலில் யுத்தத்தினை வழிநடத்தி தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் அழிவினை ஏற்படுத்திய முன்னாள் இராணுவத் தளபதியாகிய சரத் பொன்சேகா அவர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் மட்டுமல்லாது நேரடியாவும் சென்று வாக்குக் கேட்டார்? தமிழ் மக்களுக்கு எப்போது என்ன ஆற்றல் இல்லாத போதும் மனிதாபிமானம் நன்றியுணர்வு என்பனவும் இவர்களிடம் கிடையாதா?உண்மையில் சம்மந்தன் அவாக்ள் யாருடைய கைப்பொம்மையாக இருக்கின்றார் என்பதனை இன்றுதமிழ் மக்கள் சரிவரப் புரிந்து கொண்டுள்ளமையினால் சம்மந்தன் அவர்களின் சொல்லைக் கேட்டு வாக்களிக்கும் நிலையில் குறிப்பாக கொழும்பு வாழ் தமிழ் மக்கள் இல்லை என்பதை நடைபெறப் போகும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மனோ கணேசன் அவர்கள் பெறப்போகும் வெற்றி குறிப்பாக சம்மந்தன் அவர்களுக்கும் பொதுவாக அவரோடு சேர்ந்து துதிபாடும் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நிரூபித்துக் காட்டும்.ஏனெனில் தமிழ் மக்களுக்கு யாரும் அரசியல் சொல்லித்தரத் தேவையில்லை. தலைவர்கள்என்று சொல்லப்படுவோர்களுக்கு தமிழ் மக்கள் கடந்த காலங்களில் இடம் பெற்ற அனைத்துத் வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத தேர்தல்களிலும் நன்றாகப் பாடம் புகட்டியுள்ளார்கள்.இன்னொரு நெருடலான விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும். இலங்கை அரசியலானது நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இனத்துவம் சாhந்ததாகவே உள்ளது. இதற்கு பதவிறேற அனைத்து அரசாங்கங்களினாலும் அமுல்படுத்தப்பட்ட சட்டங்களும் திட்டங்களுமே காரணமாகும். இலங்கையில் முஸ்லிம் மக்கள்; முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் சிங்கள மக்கள் சிங்கள வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை அளித்து தமது இனத்தவர்களை தெரிவு செய்கையில் தமிழ்மக்களில் ஒரு சாரார் மட்டும் தமது வாக்குகளை இனரீதியாக அல்லாமல் எல்லோருக்கும் பிரித்துஅளிக்கின்றனர்.இதனால் தமிழ் பிரநிதித்துவம் வீழ்ச்சியடைவதுடன் வெற்றி பெறும் மற்றைய இனத்தோர் அதன் பின் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி வாய்திறப்பதில்லை. கலாநிதி விக்கிரமாபாகு அவர்களின் அரசியில் இதற்கு வதிவிலக்காதாகும். ஆவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயப்படுத்துகின்றார். சிங்கள மக்களுக்கு எதிராக அவர் ஒரு போதும் பேசியது கிடையாது ஆனால் அவர் எவ்வளவு தூரம் சிங்கள மக்களிள் வாக்குகளைப் பெற்றார் என்பது கேள்விக்குரியதாகும். ஆகவே அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.பிரபா பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி ஆளுந்தரப்புக்குத் தாவிய பின்னர் சில தமிழ் மக்கள்மனக்கசப்பு அடைந்துள்ளமை தெளிவாகப் புரிகின்றது. ஆனால் தமிழ் மக்கள் மனோ கணேசன் மீது மனக்கசப்பு அடைந்து தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு அளிக்காவிட்டால் நமது இனத்தின் அரசியல் பயணம் மேலும் இடர்களைச் சந்திக்க வேண்டி வரும்.மனோ கணேசன் அவர்கள் தன்னுடன் சேர்த்து ஊடகவியலாளர் தியாகராஜா நிரோ, உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த பல இளைஞர்களையும் தமிழ் மக்கள் பால் பற்றுக் கொண்ட சேவை செய்யக்கூடிய ஒரு செயலணியினையும் களமிறக்கியுள்ளார். 1977 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் பிரதேசத்தில் தேர்தல் தாரக மந்திரமாகப் பாவிக்கப்பட்ட வசனம்; “ஆண்டது நீலக்கட்சி ஆளப்போவது பச்சைக்கட்சி இன்றும் கூட நாம் மனோகணேசன் அவர்களின் கரத்தினைப் பலப்படுத்தினால் மட்டுமே ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து தமிழ் மக்களுக்கு மிகப்பெரும்பலமாக விளங்குவார். ஏனெனில் அவர் சம்மந்தன் மற்றும் தமிழ்தேசியச்கூட்டமைப்பின் ஏனைய சில தலைவர்கள் கணேசன் மனோ கணேசன் அவர்களின் வாக்குகளைப் பெற்று இரண்டும் சேர்ந்து தமிழனுக்கு நெருப்புக்குச்சி” என்பதாகும்.நீலக்கட்சியும் பச்சைக்கட்சியும் தமிழருக்கு நெருப்புக்குச்சிதான். எனவே போன்று இந்தியாவின் கிடுக்குப் பிடிக்குள் இருக்கவில்லை. தான் நினைத்ததைச் செய்யும் சுதந்திரத்துடன் அவர் இருக்கின்றார்.
9:25 PM | Posted by
Tamil National Peoples Front
கிளிநொச்சியின் கனகாம்பிகைகுளபகுதி மற்றும் சாந்தபுரம் பகுதிகளில் உள்ள பெருமளவான காணிகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டு படையினரின் ஆயுதக்களஞ்சியமாக மாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட பகுதியில் தோட்டங்காளகவும் மற்றும் வெறும் காணிகளாக காணப்பட்ட இடங்களை சுற்றி முட்கம்பிவேலிகள் போடப்பட்டு படையினரின் பாவனைக்கு உட்படுத்துவம் வகையில் பாதுகாப்பு கம்பிவேலி அமைக்கப்பட்டுவருகின்றதுதமிழ்மக்களின் காணிகளை கையகப்படுத்தும் சிறீலங்காப்படையினர் காணியின் உரியவர்கள் இல்லாத இடத்து அவை படையினரின் இருப்பிடங்களா மாறிவருகின்றது குறிப்பிட்ட பகுதியில் போரின் போது படையினர் பாவித்த கனராக ஊர்கிகள் மற்றும் ஆயுத தளபாடங்களை வைத்திருக்கும் பகுதியாக மாற்றப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
9:23 PM | Posted by
Tamil National Peoples Front
தமிழனின் பழமையைப்பேசி அரசியல் நடத்துபவர்கள் அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு முன்வருவதில்லை என்று யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குற்றம் சாட்டியுள்ளார்.புராதன பண்பாட்டுச் சின்னங்களையும் அவை அமைந்துள்ள இடங்களையும் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ். நகரில் இடம்பெற்றது. நீராவியடியில் உள்ள சைவபரிபாலன சபை மண்டபத்தில், தமிழர் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடக்கின் புத்திஜீவிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் புராதன சின்னங்களாக 22 இடங்களைத் தொல்பொருள் திணைக்களம் பிரகடனப்படுத்தி உள்ளது. அவற்றைப் புனரமைப்பதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் இந்த வருடம் ஆரம்பிக்கப்படும். எங்கள் வரலாற்றுப் பெருமையைக் காக்க வேண்டும் என்பதில் அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை. எங்களுடைய பிள்ளைகள் படிக்கும் வரலாற்றுப் புத்தகத்தில் எங்களுடைய வரலாறு இல்லை. எமது மக்களின் பழமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் புஷ்பரத்தினம் தெரிவித்தார்.நாம் எமது பழமை மற்றும் பண்பாட்டை இழந்தால் மீள உருவாக்க முடியாது என்று கலந்துரையாடலில் தனது ஆதங்கங்களைத் தெரிவித்தார் பேராசிரியர் புஸ்பரட்ணம்.பழைய பூங்காவு அழிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் யாழ். மாவட்டத்தில் உள்ள ஏனைய புராதன சின்னங்களைப் பாதுகாப்பதற்குக் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறைப்பட்டார்.குறிப்பாக 200 வருடங்களுக்கு மேற்பட்ட சிவன் கோயில் சாவகச்சேரியில் மீட்கப்பட்டபோது இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றார் பேராசிரியர். எனவே மக்களிடம் இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். பழமையப் பேணிக்காப்பதற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதன் மூலமாக நாம் பண்பாட்டை நிலைநிறுத்த முடியும் என்றார் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்.
9:21 PM | Posted by
Tamil National Peoples Front
யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காணிப்பதிவு நடவடிக்கையினால் பொதுமக்கள் பலர் கதிகலங்கி உள்ளதுடன் பெரும் சிரமங்களையும் எதிர் நோக்கியுள்ளனர். எந்த விதமான அறிவித்தலுமின்றி கிராம சேவையாளர் ஊடாக விநியோகிக்கப்படும் படிவங்களைப் பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் அதனை நிரப்பிக் கொடுப்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர்.காரணமின்றி மேற்கொள்ளப்படும் இந்தப் பதிவுகள் தொடர்பாக பொதுமக்கள் கிராம சேவையாளரிடம் விளக்கம் கேட்கும் போது அவர்களும் உரிய முறையில் பதில் அளிப்பது கிடையாது. காரணம் கிராம சேவகர்களுக்கும் இதற்கான பூரணவிளக்கம் உயர் அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்பதே ஆகும். விண்ணப்பப் படிவங்களை நிரப்பி கையளிக்கும் போது காணியின் உறுதி மற்றும் விளக்கப்படங்களையும் சேர்த்து வழங்குமாறு மக்களிடம் கேட்கப்படுகின்றது. இதன்படியே விண்ணப்பப் படிவங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.இதனால் யாழ். மாவட்டத்தில் காணியுள்ள பலர் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வசித்து வருவதனால் இவர்களின் உறுதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இந்தப் பதிவுகளை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் பல முறை வலியுறுத்திய போதும் அரசு அதனை உதாசீனம் செய்து பதிவுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற தென்பது குறிப்பிடத்தக்கது
9:19 PM | Posted by
Tamil National Peoples Front
சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனுவொன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜிம் மக்டொனால்ட் என்பவரே இந்த மனுவை அனுப்பி வைத்துள்ளார்.சிறிலங்காவில் போரின் போது விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசபடையினரும் போர்க்குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருப்பதாகவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.தமது படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு போரின் போது இருதரப்பினரும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அனைத்துலக விசாரணைகளுக்கு வெளிப்படையான ஆதரவை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், அதன்மூலம் சிறிலங்காவில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் மீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான நகர்வில் முதலடியை எடுத்து வைக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.ஒக்ரோபர் 29ம் நாளுக்கு முன்னர் ஐயாயிரம் பேரின் கையொப்பங்களுடன் இந்த மனுவை கையளித்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெள்ளைமாளிகை தமக்கு அறிவித்துள்ளதாகவும் ஜிம் மக் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
கையெழுத்திட விரும்புவோர் கீழுள்ள இணைப்பில் அழுத்தவும்:
https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg
https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg
9:17 PM | Posted by
Tamil National Peoples Front
யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு கிழமை நாட்களில் சிங்கள மொழி வகுப்புக்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்குள் நடைபெற்றுவருகிறது.வழமையாக நடைபெறும் சிங்கள மொழி கற்பிற்கும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தமிழ் பெண் பொலிஸாருடன் பாலியல்ரீதியில் துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண் பொலிஸார் தனது பெற்றோரிடம் மேலதிகாரியின் பாலியல் நடத்தை சம்பந்தமாக தெரியப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெண் பொலிஸாரின் பெற்றோர் யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீல்தலுவத்தயிடம் முறையிட்டதை அடுத்து குறித்த பொலிஸ் உயரதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிகாரியின் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்ட பெண் பொலிஸார் தற்பொது பொலிஸ் உத்தியோகத்தை விட்டு விலகியள்ளர்.
9:14 PM | Posted by
Tamil National Peoples Front
மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் பெற்றோலிய அகழ் வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா எனும் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.ஓகஸ்ட் மாத முற்பகுதியில் கிணறொன்றை தாம் அகழ்ந்ததாகவும் கடந்த வாரம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.மன்னார் கடற்படுகையில் எஸ்.எல்.2007-01-001 எனக் குறிப்பிடப்பட்ட பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவத்றகான உரிமை கெய்ர்ன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான கெய்ர்ன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் எனும் நிறுவனம் மன்னார் பகுதியில் மேற்படி ஆய்வில் ஈடுபட்டுள்ளது.'சிக்யு' எனும் அகழ்வுக் கப்பலை பயன்படுத்தி அப்பகுதியில் 3 கிணறுகளை கெய்ர்ன் நிறுவனம் தோண்டவுள்ளது. இதற்கான செலவு 110 மில்லியன் டொலர்களாகும். கடற்படுகையில் 4442 அடி ஆழத்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தத் தக்கதா இல்லையா என்பதை அறிய மேலும் அகழ்வு வேலைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கெயின் நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.
9:03 PM | Posted by
Tamil National Peoples Front
யாழ்.ஆடியபாதம் வீதியில் பாவனையில்லாத வளவொன்றினுள் இருந்து அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பிரதேச மக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.குறித்த முதியவர் திருநெல்வேலி பகுதியில் செருப்புத் தைக்கும் தொழிலை மேற்கொள்வதாகவும், கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைச் சேர்ந்த கணபதி வேலுப்பிள்ளை (வயது70) ஆறு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் நேற்றைய தினம் தொழிலுக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். எனினும் மாலை வீடு திரும்பவில்லை. அது குறித்து வீட்டில் இருந்தவர்களும் அசட்டை செய்யாத நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.இதேவேளை குறித்த முதியவரை நேற்று மாலை 2மணி மற்றும் 5மணி ஆகிய நேரங்களில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மேலும் இரண்டு நபர்களுடன் இருந்ததை அப்பகுதியில் உள்ள சிலர் கண்டுள்ளனர்.சடலம் ஒன்று காணப்படுவதாக 119 என்ற அவசர தொடர்பு எண்ணுக்கு தெரியப்படுத்தப் பட்டதை அடுத்து கொழும்பி லிருந்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கோப்பாய் பொலிஸார் சம்பவஇடத்துக்கு விரைந்தனர்.யாழ். நீதிமன்ற மேலதிக நீதிவான் அ.பிறேம்சங்கர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை நடத்தியதுடன் உடற் கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப் படைக்குமாறு உத்தரவிட்டார்.சடலம் மீட்கப்பட்ட இடத்தின் அருகில் பயன்படுத்தப்பட்ட மதுப்போத்தல்கள் இரண்டு, குறைபீடி சடலத்தில் காயங்கள் சிலவும், மதிலில் இரத்தமும் காணப்படுகிறது.என்பன காணப்பட்டன எனப் பொலிஸார் கூறினர். சுருட்டுடன் சைக்கிளும் அங்கிருந்து மீட்கப்பட்டன.உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையின்படி கழுத்து நெரிக்கப்பட்டதால் வேலுப்பிள்ளையின் இறப்பு நிகழ்ந்துள்ளது. கையில் அணிந்திருந்த மோதிரங்கள் கழற்றப்பட்டதற்கான அடையாளங்களும், உடலில் பரவலான சிறுகீறல் காயங்களும் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
8:59 PM | Posted by
Tamil National Peoples Front
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் பிபிசி தமிழோசை தயாரிப்பாளருமான ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களின் கணவர் சிவசாமி சூரியபிரகாசம் லண்டனில் காலமானார். உடல்நலம் குன்றிய நிலையில் தெற்கு லண்டன் சென்.ஜோன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 02.10.2011 நண்பகல் காலமானார்.லண்டன் நிலக்கீழ் தொடரூந்து நிறுவனத்தில் கணணித்துறையில் நீண்டகாலம் பணியாற்றி வந்த சூரியபிரகாசம் ஓய்வு பெற்றபின் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்தார்.சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்திற்கு நிதி உதவி உட்பட பல வழிகளில் அவர் உதவி புரிந்து வந்தார். அவரின் பிரிவால் துயருறும் அவரின் மனைவி மகள் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவிப்பதோடு அன்னார் ஆத்ம சாந்திக்கு அனைவரும் பிரார்த்திப்போமாக.
8:55 PM | Posted by
Tamil National Peoples Front
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை இலங்கையில் உள்ள ஊடகங்கள் உட்பட 100 ஊடகங்களில் வெளியிட உள்ளதாக அமெரிக்காவின் அரசமைப்பு சட்டத்தரணி புரூஸ் பெய்ன் அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அழைப்பாணை ஜனாதிபதியைச் சென்றடைந்தமை உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.செப்ரெம்பர் 30ஆம் திகதி குறித்த நீதிமன்ற ஆவணம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று கூறி ஜனாதிபதி மீது அமெரிக்காவில் சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. படையினரால் படுகொலை செய்யப்பட்ட மூவரின் சார்பில் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து 30 மில்லியன் டொலர் நட்டஈடு கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குத் தொடர்பான அழைப்பாணை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஜனாதிபதி மாளிகையோ வெளிவிவகாரத்துறை அமைச்சோ நீதி அமைச்சோ அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.இதையடுத்தே ஊடகங்களின் மூலம் அழைப்பாணையை ஜனாதிபதிக்கு எட்டச் செய்ய அனுமதிக்குமாறு புரூஸ் பெய்ன் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார். இந்த அழைப்பாணையை இலங்கை ஜனாதிபதி நீண்டகாலத்துக்குப் புறக்கணிக்க முடியாது என்றும், ஜனாதிபதியிடம் அழைப்பாணை சமர்ப்பிக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று தாம் நம்புகின்றனர் எனவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடருக்கா நியூயோர்க் சென்றிருந்த சமயம் அங்குள்ள குயின்ஸ்சில் புத்த விகாரைக்குச் சென்றபோது அழைப்பாணையை கையளிக்க அமெரிக்க அதிகாரிகள் முனைந்தனர் எனவும், ஆனால் அவரது பாதுகாவலர்கள் அந்த ஆவணத்தை கையளிக்க முடியாமல் தடுத்து விட்டதாகவும் சட்டத்தரணி மேலும் கூறியுள்ளார்.அழைப்பாணை பெறுவதை அவர் தவிர்ப்பது தெளிவாகியுள்ளதால், நீதிபதிகள் மகிழ்ச் சியடையவில்லை. எனவே இந்த அழைப்பாணையை பரிமாற ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அழைப்பாணையை முழுமையாக வெளியிட முன்வருமாறு உலகிலுள்ள ஊடகங்களுக்கு குறிப்பாக இலங்கையில் உள்ள ஊடகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
10:27 PM | Posted by
Tamil National Peoples Front
ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சிறீலங்கா மீதான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்ற தமிழர் தரப்பின் எதிர் பார்ப்புக்கள் குறைவடைந்துள்ளன. எனினும் தம்மீதான நம்பிக்கைகளை தமிழ் மக்கள் இழந்துவிடாதவாறு மேற்குலகம் சில நடவடிக்கைகளைத் தக்கவைத்துள்ளது.சிறீலங்கா அரச தலைவரின் நியூயோர்க் பயணத்தை அமெரிக்க அதிபர் புறக்கணித்ததும், சிறீலங்கா அரச தரப்பு எதிர்பார்க்காத தருணத்தில் சிறீலங்கா இராணுவத்தின் பிரதம போர்க்குற்றவாளியும், ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீது தொடுக்கப்பட்ட வழக்கும், மேற்குலக கூட்டணி நாடு ஒன்றின் ஊடாக சிறீலங்கா அரசு மீது தீர்மானத்தை கொண்டுவர எடுத்த முயற்சியையும் நாம் இங்கு குறிப்பிடலாம்.ஐ.நாவிற்கான சிறீலங்காவின் பிரதிப் பிரதிநிதியாக உள்ள ஒருவருக்கு அவரின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் நீதிமன்ற அழைப்பாணை செல்லுபடியற்றது. எனவே தம்மீது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்ற இறுமாப்பில் மிதந்த சிறீலங்கா அரச தரப்புக்கு அமெரிக்காவின் நீதிமன்ற விதிகளில் உள்ள நுட்பங்களை ஆய்வு செய்து. சவீந்திர சில்வாவின் தனிப்பட்ட வதிவிடத்திற்கு அழைப்பாணையை அனுப்பி, அதனை மத்திய கிழக்கை சேர்ந்த அல்ஜசீரா தொலைக்காட்சி மூலம் உறுதிப்படுத்திய தமிழர் தரப்பின் மதிநுட்பம் மிகவும் வியக்கத்தக்க விடயம்.அதனைப்போலவே சிறீலங்கா இராணுவத்தின் 57 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியும், ஜேர்மனி, சுவிற்சலாந்து மற்றும் வத்திக்கானுக்கான துதுவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீண்டும் சுவிற்சலாந்து வந்தால் அவர் மீதான போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுவிஸ் நீதி ஆணையாளர் அறிவித்துள்ளதும் சிறீலங்கா அரசுக்கு பலத்த அடியாகும்.இரண்டாவது உலகப்போரின் போது சுவிற்சலாந்து மீது ஹிட்லர் தனது படைகளை ஏவவில்லை, ஏனெனில் போரில் வெற்றிபெற்ற பின்னர் தான் ஓய்வெடுக்கப்போகும் அழகிய தேசத்தை சிதைத்து அழித்துவிட அவர் விரும்பவில்லை. ஆனால் அன்று போர் நிறைவடைந்தபோது ஹிட்லர் ஓய்வெடுத்தது சுவிஸில் அல்ல கல்லறையில் தான். எனினும் முள்ளிவாய்க்காவில் 40,000 தமிழ் மக்களை, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என்ற வேறுபாடு இன்றி படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத்தின் போர்க்குற்றவாளிகளான படை அணிகளின் தளபதிகளை சிறீலங்கா அரசு திட்டமிட்டே சுவிஸ்இற்கும், நியூயோர்க்கிற்கும் ஓய்வெடுக்க அனுப்பியிருந்தது.இது தமிழ் மக்களையும், சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்துவரும் மேற்குலகத்தையும் அவமதித்த செயலுமாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மாற்றமடைந்த உலக விதிகளை தனக்கு சாதகமாக சிறீலங்கா அரசு பயன்படுத்திய போதும், அதில் உள்ள சில நுட்பமான சரத்துக்களை தமிழர் தரப்பும் பயன்படுத்தி சிறீலங்கா அரசின் இனவாதத்தையும், இறுமாப்பையும் சிதறடித்துள்ளது.ஐ.நாவின் 66 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்த கருத்தும் சிறீலங்காவின் சர்வாதிகார அரசாட்சிக்கு அனுகூலமானதல்ல. வட ஆபிரிக்காவிலும், வளைகுடா நாடுகளிலும் தோற்றம் பெற்றுள்ள எழுச்சிகள் மற்றும் போராட்டங்கள் என்பன அங்கு ஆட்சியில் உள்ள கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு(Autocratic rulers) எதிரானது என அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் என்பதுடன், சிறீலங்காவில் ஜனநாயக விதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அமெரிக்கா தனது ஒவ்வொரு அறிக்கையிலும் வலியுறுத்தி வருகின்றது.ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசு மீது ஒரு தீ£மானம் கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழுந்திருந்தன. ஆனால் சிறீலங்கா அரசின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என இந்தியா தெரிவித்த கருத்தை தொடர்ந்து சிறீலங்கா அரசு மீதான தீ£மானம் தற்போது நடைபெறும் 18 ஆவது கூட்டத்தொடருக்கு ஒத்திவைக்கப்பட்டது.எனினும் செப்ரம்பர் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் தமக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்பதை அறிந்துகொண்ட சிறீலங்கா அரசு, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நவம்பர் மாதம் சமாப்பிக்கப்படும் என்ற புரளியை கிளப்பி தனக்கு ஒரு கால அவகாசத்தை கேட்டிருந்தது. ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை சிறீலங்கா அரசு திட்டமிட்டு நவம்பர் மாதத்திற்கு பிற்போட்டிருந்தது.ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடருக்கு ஐ.நா செயலாளர் நாகயம் பான் கீ மூன் தனது நிபுணர் குழுவின் அறிக்கையை அனுப்பியதுடன், தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். வடஅமெரிக்க நாடு ஒன்றின் ஊடாக சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை முன்வைக்கும் பாவனையையும் மேற்குலகம் ஏற்படுத்தியிருந்தது.கடந்த வியாழக்கிழமை (22) மதியம் ஒரு மணிக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அறிந்த சிறீலங்கா அரசு கொழும்பு திரும்பிய தனது அமைச்சர் மகிந்தா சமரசிங்காவை அவசரமாக மீண்டும் ஜெனீவாவுக்கு அனுப்பிய போதும், சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு காலஅவகாம் வழங்கும் நோக்கத்துடன் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் நாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பதற்கு அப்பால் சிறீலங்கா அரசின் ராஜபக்ச கூட்டணி கடுமையாக மிரட்டப்பட்டுள்ளது என்பதும் உண்மையானது.கொழும்பு வந்து சென்ற அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கும் சிறீலங்கா அரசின் நவம்பர் மாதக் காலக்கெடுவை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியே சென்றுள்ளார். எனவே எதிர்வரும் நவம்பர் மாதமும், அடுத்துவரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரும் சிறீலங்கா அரசுக்கு அனுகூலமாக இருக்கமாட்டாது. அதனை உறுதிப்படுத்த வேண்டிய கடமை புலம்பெயர் தமிழ் மக்களுக்கே உண்டு.அனைத்துலக மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒருங்கிணையும் தமிழ் மக்களின் பலமும் அதற்கு வழியை ஏற்படுத்தும். இஸ்ரேல், பாலஸ்த்தீனம் என்ற இரு தேசங்கள் ஐ.நாவின் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பாலஸ்த்தீன அதிபர் மகமூட் அபாஸ் இன் கோரிக்கையும் தமிழர் தரப்புக்கு சில தகவல்களை எடுத்துரைத்துள்ளது.63 வருடங்களாக பாலஸ்த்தீன மக்கள் சந்தித்த துன்பங்களும், இழப்புக்கள் போதும் என்ற அவரின் வாதம் ஐ.நா வட்டாரத்தை அனுதாபத்திற்குள் தள்ளியுள்ளது. 1967 ஆம் ஆண்டு காணப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் இரு நாடுகள் என்ற கொள்கைகள் செயற்படுத்தப்படும் என கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் தெரிவித்தபோதும், கடந்த வாரம் இடம்பெற்ற அவரின் பேச்சில் அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தக்கூடும் என்ற கணிப்புக்கள் எழுந்துள்ளபோதும், மத்தியகிழக்கில் அமைதியை உருவாக்குவதற்கு பாலஸ்தீன மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதே முதலாவது படியாகும் என்பதையும் அமெரிக்கா நன்கு அறியும்.சோவியத்தின் உடைவு, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுவரும் ஆட்சி மாற்றங்கள், ஈராக், ஆப்கானிஸ்த்தான் போர், லிபியாவில் து£க்கி எறியப்பட்டுள்ள கேணல் கடாபியின் ஆட்சி என்பன ஒன்றை உணர்த்தியுள்ளன. அதாவது எதிர்காலத்தில் இஸ்ரேல் என்ற நாட்டின் உதவி அமெரிக்காவுக்கு தேவையா என்பதே அதுவாகும். பசுபிக் பிராந்தியத்தில் இருந்து, இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்துள்ள பூகோள அரசியலும் அதற்கு வலுச்சேர்த்துள்ளது.விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டோம், தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது என்ற சிறீலங்கா அரசின் கற்பனைகள் எல்லாம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை சிறீலங்கா அரசு எவ்வாறு கையாளப்போகின்றது என்பதில் தான் தங்கியுள்ளது. ஏனெனில் ஒரு நாட்டில் உள்நாட்டு போரை சில மணிநேரத்திற்குள் உருவாக்குவது எவ்வாறு என்பதற்கு லிபியா மீதான நேட்டோ படையின் தாக்குதல் மிகச்சிறந்த உதாரணம். எதிர்க்கட்சிகள் அற்ற நிலையில், எந்த ஒரு ஆயுதக்குழுக்களும் அற்ற நிலையில் 42 வருடங்களாக கடாபியின் ஆட்சியில் இருந்த லிபியாவில் சில மணி நேரத்திற்குள் ஒரு உள்நாட்டு போர் ஏற்படுமாக இருந்தால் சிறீலங்காவில் அதனை உருவாக்குவது மிகவும் சுலபமானது.அதனை உணர்ந்துதானோ என்னவோ சிறீலங்கா அரசு வடக்கு கிழக்கில் தனது படை வளத்தை அதிகரித்து வருகின்றது. ஆனால் மூன்றாவது நாடு ஒன்றின் துணையுடன் மேற்கொள்ளும் படை நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிலையில் சிறீலங்கா படைத்தரப்பு உள்ளதா என்பதே தற்போதைய கேள்வி. லிபியாவின் வான்படை மற்றும் பீரங்கிப்படைகள் முடக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற போரை தமிழர் தரப்பு நன்கு நினைவில் கொண்டுள்ளது. அம்பாந்தோட்டையை அடைமானம் வைத்து தமிழர்களின் தாயகப்பகுதிகளை சிறீலங்கா அரசு கைப்பற்றுவது சாத்தியமானதாக இருந்தால், திருமலை துறைமுகத்தையோ அல்லது காங்கேசன்துறை துறைமுகத்தையே அடைமானம் வைத்து இழந்த பகுதிகளை தமிழர் தரப்பு மீட்டுக்கொள்வதும் சாத்தியமானது ஒன்றே.
10:10 PM | Posted by
Tamil National Peoples Front
இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்படுவதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்திருந்த, 1800 பேர் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் வைபவரீதியாக விடுதலை செய்யய்பட்டிருந்தார்கள். இருப்பினும், விடுதலை செய்யப்பட்ட எவரையுமே பெற்றோர்களுடன் வீடுகளுக்குச் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதியிடமிருந்து தமது பிள்ளை களைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக, வவுனியாவில் இருந்து இந்த வைபவத்திற்கென கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த 30 பெற்றோர்கள் இதனால் பெரும் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள். கொழும்பில் நடைபெற்ற வைபவத்தில் 1800 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும், விடுதலை செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்ட அனைவரும் ஒக்டோபர் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் வைத்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் படுவார்கள் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மூத்த ஆலோசகர் சிவலிங்கம் சதீஸ்குமார் தெரிவித்தார்.புனர்வாழ்வு நிலையங்களில் பயற்சி பெற்றுள்ளவர்களுக்கு சட்ட ஆவணங்களாக மருத்துவ சான்றிதழ் உட்பட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும், அடுத்த இரண்டு தினங்களில் இந்தச் சான்றிதழ்கள் உரிய அதிகாரிகளினால் தயார் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட வுள்ளவர்களுக்கு வழங்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்திலும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் நியுயோர்க்கில் நடத்திய சந்திப்புகளின் போதும், சிறிலங்கா அரசு கடும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.போர்க்குற்ற விசாரணைகள் குறித்த அனைத்துலக அழுத்தங்களை சமாளிப்பதற்கும், இந்தமாத இறுதியில் பேர்த் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை தவிர்ப்பதற்குமே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பிய கையோடு அனைத்துலக இராஜதந்திரிகளின் முன்னிலையில் பெருமளவு முன்னாள் போராளிகளை விடுதலை செய்துள்ளதாகவும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கருத்து வெளியிட்டுள்ளன.
10:07 PM | Posted by
Tamil National Peoples Front
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந்த உரிமைக்குச் சுயநிர்ணய உரிமை (Right Of Self – Determination) என்று பெயரிடப்பட்டுள்ளது.தேசிய இனங்கள் இந்த உரிமையின் அடிப்படையில் தெரிவு செய்வதற்குரிய அரசியல் வடிவம் பற்றிச் சர்வதேச சட்டம் குறிப்பிடவில்லை. இந்த உரிமை முழு அளவு இறைமையுள்ள தனி நாட்டையா அல்லது பிரிந்து போகும் உரித்து உள்ளடங்கிய சமஷ்டி ஆட்சியையா வழங்குகிறது என்ற விடயம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அதே சமயத்தில் தேசிய இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்று கூறும் சர்வதேச சட்டம் எந்த இனத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்தில் இந்த உரிமை வழங்கப்படுகிறது என்பதையும் கூறுவதற்குத் தவறியுள்ளது.இந்தரகக் குறைபாடுகளால் இந்தக் கோட்பாட்டின் அமலாக்கம் நடைமுறைச் சிக்கல்களையும் வல்லரசுகள் போடும் தடைகளையும் சந்திக்க நேரிடுகிறது. தனி நாடாகும் தறுவாயில் இருக்கும் இனங்களைத் தடுப்பதில் வல்லரசுகள் காட்டும் ஈடுபாடு கோட்பாட்டின் பெறுமதியைக் குறைத்துள்ளது.ஐரோப்பியத் தேசிய இனங்களுக்குப் பாரிய சாம்ராச்சியங்களில் இருந்து விடுபட்டுத் தனிநாடாகும் சுய நிர்ணய உரித்து உண்டென்ற கோட்பாட்டை முதலாம் உலகப் போர் முடிவில் அமெரிக்க அதிபர் வூட்றோ வில்சன் (Woodrow Wilson) அறிமுகஞ் செய்தார்.நவம்பர் 1917ல் ருஷ்யாவில் கொமியூனிச பொல்செவிக் (Bolshevik) ஆட்சி தோன்றியது. காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட நாடுகள் உள்டங்கலாக அனைத்து இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டென்று அவர்கள் பிரகடனஞ் செய்தனர்.அதற்குப் பிறகு வூட்றோ வில்சன் தனது புகழ்பூத்த பதினான்கு அம்சப் (14 Point) பிரகடனத்தை வெளிப்படுத்தி சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை மேலும் விரிவு படுத்தினார்.சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சாசனம் 1918ல் வெளியிடப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருக்கும் குடியரசுகள் அனைத்திற்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் பிரிந்து போகும் உரித்து உண்டென்று இந்த அரசியல் சாசனம் கூறுகிறது.இரண்டாம் உலகப் போரை நடத்திய நட்பு நாடுகள் 1941ல் அத்திலாந்திக் சாசனத்தில் (Atlantic Charter) ஒப்பமிட்டனர். ஐநா உருவாக்கத்திற்கு முன்னோடியான இந்தச் சாசனத்தில் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 1942ல் இருபத்தியாறு நாடுகள் ஒன்றிணைந்து கைச்சாத்திட்ட பிரகடனத்தில் மீண்டும் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐநாவின் அரசியல் சாசனம் 1945ல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு சுயநிர்ணய உரிமை சர்வதேசச் சட்டம், சர்வதேச இராசதந்திரம் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது. இன்றுவரை இந்த நிலவரம் தொடர்கிறது.
ஐநா சாசனத்தின் அத்தியாம1; சரத்து1 பகுதி2 பின்வருமாறு குறிப்பிடுகிறது. இந்தச் சாசனத்தின் நோக்கம் ‘சம உரிமை, மக்களின் சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படையில் நாடுகளுக்கிடையில் நட்புறவை வளர்த்தலும் சர்வதேச அமைதியைப் பலப்படுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தலுமாகும்”
ஐநாவின் (1)சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கை (International Covenant on Civil And Political Rights-ICCPR)
(2)சர்வதேச பொருளாதார சமூகப் பண்பாட்டு உரிமைகளுக்கான உடன்படிக்கை (International Covenant on Economic,Social and Cultural rights-ICESCR) ஆகியவற்றின் முதலாம் சரத்து (Article 1) இவ்வாறு கூறுகிறது.
‘எல்லா மக்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்கள் அரசியல் அந்தஸ்தை தீர்மானிக்கவும் தங்கள் பொருளாதார, சமூகப் பண்பாட்டு மேம்பாட்டை சுதந்திரமாக மேற்கொள்ளவும் உரித்து உண்டு”
ஐநாவின் 1948ம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் சரத்து 15 ஒவ்வொருவருக்கும் தேசிய உரிமை இருக்கிறதென்றும், ஒருவருடைய தேசிய உரிமையை வலுக்கட்டாயமாகப் பறிக்க முடியாதென்றும், அதை சுயமாக மாற்;றும் உரிமையை மறுக்க முடியாதென்றும் கூறுகிறது.
சுதந்திரப் பிரகடனம் செய்து தனி நாட்டு அந்தஸ்தைப் பெறும் உரித்துப் பற்றியோ அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியோ, தேசிய இனங்களுக்கு இந்த உரிமையைப் பெற உதவும் முறை பற்றியோ ஒரு இடத்திலாவது சொல்லப்படவில்லை.
சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை மேற்கூறிய குறைபாடுகள் வலுவிழக்கச் செயகின்றன. எனினும் சுய நிர்ணய உரிமை சர்வதேச் சட்டத்தின் முக்கிய பகுதியாகவும் தேசிய இனங்களின் தனி நாட்டுக் கோரிக்கையை வலுவாக்கும் ஆதாரமாகவும் இடம் பெறுவதை மறுக்க முடியாது.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழீழ மக்கள் நடத்திய விடுதலைப் போர் சுய நிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்டது. அதை வெறும் ஏட்டுச் சுரைக் காயாகக் கருதாமல் தமது போருக்கு வலுவூட்டும் சாசனமாகக் கருதினர்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் உரைகளில் தனது இனத்திற்கு சுயநிர்ணய உரிமை முழு அளவில் உண்டென்று உறுதியாகக் கூறினார். இந்த உரிமைக் கோரிக்கைக்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.
இலங்கை சுதந்திரம்பெற முன்பே மலையகச் சிங்கள இனத்தவர்கள் தம்மை கண்டிச் சிங்களவர்கள் என்று கூறியபடி இந்தத் தீவை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றனர். கரையோரச் சிங்களவர்களுக்கான பகுதி, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பகுதி, கண்டிச் சிங்களவர் பகுதி என்பன அந்த மூன்று பிரிவுகளாகும்.
இலங்கை கொமியூனிஸ்ற் கட்சி 1944ல் தமிழர்களுக்குப் பிரிந்து போக வகை செய்யும் சுய நிர்ணய உரிமை உண்டென்று கூறியது.
இலங்கை தமிழரசுக் கட்சி 1951ம் ஆண்டின் திருகோணமலைத் தேசிய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை வலுயுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மே 14, 1976ம் ஆண்டு பண்ணாகம் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றிய தீர்மானத்தில்,
‘இந்த நாட்டில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு தேசத்திற்கும் உரியதான சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழ தேசத்தின் மீள்கட்டுமானமும் மீள்உருவாக்கமும் தவிர்க்க முடியாததாகிவிட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
திம்பு நகரில் 1985ம் ஆண்டில் இந்தியா தலைமையில் நடந்த இருதரப்புப் பேச்சுக்களிலும், 2002ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்திலும் தமிழீழத்தின் இருப்பும் சுய நிர்ணய உரித்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய விடுதலைப் போருக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானமும், மே 1977ல் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய அங்கீகாரமும் ஆதாரமாக அமைகின்றன. இன்னும் போர் முடியவில்லை போராட்டம் தொடர்கிறது. உரிமைகள் வெல்லப்படாமல் அமைதி ஏற்படவாய்ப்பில்லை.
சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலான தமிழீழ தேசம் மாத்திரம் தமிழீழ மக்களின் உண்மையான இலட்சியமாகும். புலம் பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் கூக்குரல் என்று இந்தக் கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியாது.தமிழீழ தேசத்தை சர்வதேச நாடுகளின் அனுசரணையோடு நிறுவும் நோக்குடன் எழுப்பப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு என்ற தான்தோன்றி அமைப்பு மெல்லச் செத்துவிட்டது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தமிழீழ தாயகத்தை மையமாகவும் தேசியத் தலைவரை இயங்கு சக்தியாகவும் கொண்டதாகும்.
ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு சர்வதேசப் பெறுமானம் உண்டு. இந்தக் கோரிக்கையின் உயிர்ப்பை தீர்மானிப்பவர்களாகவும் அதன் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாகவும் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இடைக்காலப் பின்னடைவுகள் அதை மழுங்கடிக்கப் போதுமானவையல்ல.
9:41 AM | Posted by
Tamil National Peoples Front
1950 ஆம் ஆண்டில் கல்லோயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு கந்தளாய் திட்டம் உருவாக்கப்பட்டுத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் சில பிரிவுகள் இன விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டன அதன் மூலம் தமிழ் தலைமைகளின் எதிர்ப்புகள் முறியடிக் கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இனமோதல்கள் மூலம் அந்தப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட அவை முற்றுமுழுதாகச் சிங்கள மயப்படுத்தப்பட்டன.இவை திட்டமிடப்பட்டு சட்டப்படி தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்பட்ட கதையாகும். ஆனால் இந்த நிலப்பறிப்புக்கு இன்னுமொரு வலுவான பக்கம் இருந்து வந்துள்ளமையை எமது முன்னைய தலைமைகள் கண்டு கொள்ளத் தவறின. ஆனால் இன்று எமது மண்ணின் பெரும் பகுதி பறிபோய் விட்டது.
கஞ்சா தோட்டம் குடியிருப்பாகிய கதை...
1953 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பியோடிய பயங்கரக் கொள்ளைக்காரனாகிய யக்கடேயா தனது தலைமறைவு வாழ்க்கைக்கு மூதூர் வெருசல் பிரதான வீதிக்கு மேற்காக அமைந்துள்ள தற்போது "அலிஒலுவ" என அழைக்கப்படும் அரிப்புச் சந்தியை அண்மித்த காட்டுப் பகுதியைத் தெரிந்தெடுத்தான். மகா வலி ஆற்றங்கரையை அண்டிய இவ் வளமான பிரதேசத்தில் யாழ்ப்பாணம் கம்பர்மலையைச் சேர்ந்த விவசாயிகள் வருடா வருடம் சென்று வெங்காயம், மிளகாய்க்குரிய பருவகாலங்களில் விவ சாயம் செய்து திரும்புவதுண்டு. தலை மறைவாக வாழ்ந்த "யக்கடேயா' அங்கு பெருமளவில் கஞ்சா பயிர் செய்கையை ஆரம்பித்தான்.மெல்ல மெல்ல அவனது நண்பர்களும் உறவினர்களும் அங்கு காடுகளை வெட்டிக் குடியேறி கஞ்சாச் செய்கையுடன் விவசாய முயற்சிகளையும் மேற்கொண்டனர். இதனால் அந்தப் பகுதி ஒரு பெரும் கஞ்சா உற்பத்தி மையமாகவே விளங்கியது.அதையடுத்து அங்கு ஒரு பௌத்த விகாரை அமைக்கப்பட்டு அது ஒரு தொன்மை வாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமாக ஒரு காலத்தில் விளங்கியது எனவும் கூறப்பட்டது. அந்த விகாரையில் பிக்குவின் அனுசரணையுடன் பல சிங்களக் குடியிருப்புகள் "சேருவில" என்ற பேரில் உருவாகின.
சேருவிலவின் வரலாறு...
இப்படியாக சேருவில, மஹிந்தபுர, சயயபுர, தெஹியோவத்தை, மாவிலாறு சிங்களப் பகுதி எனப் பல குடியேற்றங் கள் புற்றுநோய் போல் எங்கும் துரிதமாக உருவாகின. சட்டவிரோதமாக ஆரம்பிக்கப் பட்ட இந்தக் குடியேற்றங்கள் சிங்கள அரசியல்வாதிகளின் முயற்சி காரணமாக குடியேற்றத் திட்டங்களாக அங்கீகரிக் கப்பட்டுச் சகல அரச உதவிகளும் வழங்கப்பட்டன.சேருவாவில என்ற புதிய அரச அதிபர் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. அது மட்டுமன்றி தமிழர்களுக்கும் முஸ்லிம் களுக்கும் என இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மூதூர் பிரிக்கப் பட்டு மூதூர், சேருவில என இரு தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இன்று திருமலை மாவட்டத்தில் சேருவில ஒரு சிங்களத் தேர்தல் தொகுதியாக விளங்குகிறது.தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைந்த போது வவுனியா தொகுதி யாருக்கு என்ற பிரச்சினையில் வவுனியா மாவட்டத்தை வவுனியா, முல்லைத்தீவுஎன இரண்டாகப் பிரித்து பங்கு போடுவதற்காக மூதூரை இரண்டாகப் பிரிக்க தமிழ்த் தலைமைகள் ஆதரவு கொடுத்த வெட்கம் கெட்ட செயலையும் நாம் மறந்து விட முடியாது.எப்படியிருந்த போதிலும் திருகோணமலை மாவட்டத்தில் கல்லோயா, கந்தளாய், சேருவில போன்ற பெரும் பகுதிகள் சிங்கள ஆதிக்கத்தால் விழுங்கப்பட்டுவிட்டன என்பது உண்மையாகும்.
முஸ்லிம்களின் நிலம் பறிப்பு...
இவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்தில் சீனித் தொழிற்சாலையில் பணிபுரியவும் கரும்பு உற்பத்தியில் ஈடுபடவும் எனப் பெருமளவு சிங்களவர் குடியேற்றப்பட்டனர். முஸ்லிம்களின் ஏராளமான விளை நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.இன்று அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினராக்கப்பட அம்பாறை என்ற ஒரு சிங்கள மாவட்டமே உருவாகிவிட்டது."திருமாவெலிய" புனித பிரதேசத் திட்டம் போன்றவற்றால் மேலும் மேலும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.அதாவது மட்டக் களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியும் விழுங்கப் பட்டுவிட்டது. இது ஏற் கனவே எமது தாயகப் பகுதி விழுங்கப்பட்ட கதை மட்டுமன்றி எமது தாயகப் பகுதியின் நிலத் தொடர்ச்சி துண்டிக்கப்பட்ட கதையையும் சொல்லும் வரலாறாகும். போர் முடிந்த பின்பு இந்தக் கொடிய ஆக்கிரமிப்புக் கரங்கள் வடக்கு நோக்கி விரிய ஆரம்பித்துவிட்டன.
வடக்கு நோக்கிவிரியும் ஆக்கிரமிப்பு...
ஏற்கனவே எமது மக்கள் நீண்டகால மாகவே வாழ்ந்து வந்த பகுதிகள் அப கரிக்கப்பட்டும், எமது நீர்ப்பாசனக் குளங்களின் நீரேந்தும் பகுதிகளாக இருக்கும் காடுகள் அழிக்கப்பட்டும் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது எமது சனத்தொகை விகிதாசாரத்தில் சிங்களவர்களின் தொகையை அதிகரித்து எமது இன தனித்துவத்தைச் சீரழிக்கும் நீண்ட நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகும். எவ்வாறு கல்லோயா, கந்தளாய், சேருவில போன்ற குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் தாயகத் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதோ அவ் வாறு வெலிஓயா என்ற பெரும் திட்டத் தின் மூலம் வடக்குக்கும் கிழக்குக்குமான நிலத்தொடர்பைத் துண்டிக்க பெரிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
முல்லையில் ஆபத்து...
தமிழ் மக்களின் இதயபூமியான மணலாற்றில் தனிக்கல்லு, கென்ற்பாம், டொலர்பாம், ஜனகபுர ஆகிய பகுதிகளில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் 1984 இல் மகாவலி அபிவிருத்திச்சட்டம் மூலம் வெளியேற்றப்பட்டு அங்கு சகல வசதிகளுடனும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுவிட்டனர்.இந்தப் பகுதிகளுடன் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக் கேணி, புலிபாஞ்சகல், அளம்பில், குமுழமுனை ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு ஒரு புதிய உதவிஅரசஅதிபர் பிரிவு "வெலிஓயா" என்ற பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அனுராதபுர மாவட்டத்தில் சில பகுதிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளும் இணைக்கப்பட்டு வெலிஓயா என்ற பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.இது முல்லை மாவட்டத்தை அபகரிக்கும் சதி முயற்சிக்கும் வடக்கு, கிழக்குக்குமிடையேயான நிலத் தொடர்பைத் துண்டிக்கும் முயற்சிக்கும் ஒரு சட்டபூர்வ வலிமை வழங்கப்பட்ட பிரகடனமாகும். இந்த ஆக்கிரமிப்பின் இரண்டாவது கட்டம் இப்போது கொக்கிளாயில் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1960 இற்கு முன்புகுடியிருந்தவர்கள் எனக் கூறப்பட்டு 37 சிங்களக் குடும்பங்கள் கொக்கிளாய் முகத்து வாரம் பகுதியில் குடியேற்றப்பட்டுவிட்டன. அதையடுத்து மேலும் 45 குடும்பங்கள் சகல வசதிகளுடனும் குடியேற்றப்படுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளன. அதாவது இவர்கள் கொக்கிளாயைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனவும் அவர்கள் இடம்பெயர்ந்து தென்னி லங்கையில் வாழ்ந்தவர்கள் எனவும் கூறப் படுகிறது. போர் காரணமாக இடம்பெயர்ந்த வர்களுக்கு வெளிநாடுகள் வழங்கும் சகல உதவிகளும் முழுமையாக வழங்கப்பட்டுக் கொக்கிளாயில் குடியேற்றப்படுகின்றனர்.1960 ஆம் ஆண்டை அடுத்த காலப் பகுதியில் நீர்கொழும்பைச் சேர்ந்த சம்மாட்டி ஒருவர் கொக்கிளாயில் கரைவலை மீன்பிடித் தொழிலுக்காக வந்திறங்கினார். அங்கு ஏற்கனவே கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவுவரை முல்லைத்தீவு அளம்பில் பகுதிகளைச் சேர்ந்த சம்மாட்டிகளே கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
மீன்பிடியில் ஆரம்பம்...
இது பரந்த கடற் படுகையாதலால் முல்லைத்தீவு மீனவர்களும் அவர்களை எதிர்க்கவில்லை. சில வருடங்களில் மேலும் இரு சம்மாட்டிகள் அங்கு வந்து தொழில் தொடங்கவே அந்த மூன்றுபாடுகளும் அவர்கள் பருவகாலத் தொழில் செய்யும் இடங்களாகின. ஆனால் பருவகாலம் தொடங்கும் போது அவர்கள் படகுகள், வலைகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தேவைகளுடனும் வருவதும் பருவகாலம் முடிய அனைவரும் திரும்பிச் செல்வதும் வழமையாக இடம்பெற்றன.காலப்போக்கில் கரைவலைத் தொழிலில் கூலித் தொழிலாளிகளாக வருபவர்கள் முகத்துவாரம் பகுதியில் குடிசைகள் அமைத்துக் குடியிருக்க ஆரம்பித்தனர். பருவகாலம் முடிந்த பின்பு இவர்கள் கொக்கிளாய் ஏரியில் மீன்பிடித்துத் தொழில் செய்தனர். சில வருடங்களில் இவர்களுக்கு மீனவர் குடியிருப்புகள் என்ற பேரில் வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டன.இவ்வாறு 1982ஆம் ஆண்டில் 21 குடும்பங்கள் இங்கு நிரந்தமாகக் குடியிருந்தன. கொக்கிளாயில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் இவர்களுக்குமிடையே சுமுகமான உறவு நிலவி வந்தது. எனினும் இவர்களில் சிலர் சிறிபுரவில் உள்ள சிங்களக் காடையர்களுன் சேர்ந்து கொக்கிளாய்த் தமிழ் மக்களின் மாடுகளைக் கடத்தி இறைச்சிக்காகக் கொழும்புக்கு ஏற்றும் களவுத் தொழி லில் இறங்கிய பின்பு இரு சாராருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இப்படியான சந்தர்ப்பங்களில் கொக்கிளாய் இராணுவமுகாமைச் சேர்ந்த படையினர் தமிழ் இளைஞர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். இதனால் பல இளைஞர்கள் தலைமறைவாகக் காடுகளில் ஒளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
தமிழர் வெளியேற்றம்...
1984 ஆம் ஆண்டில் மகாவலி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், தென்னைமர வாடி, கருநாட்டுக்கேணி, புலிபாய்ஞ் சகல், முந்திரிகைக் குளம், மருதோடை, ஊஞ்சல்கட்டி, ஒதியமலை, மண் கிண்டி, பெருங்குளம், தனிக்கல் போன்ற தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த கிராமங்களை விட்டு 24 மணிநேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்டனர். இந்த நாள்களிலேயே பெருங்கொடூரமான ஒதியமலைப் படுகொலைகள் இடம்பெற்றன.இப்போது சில மாதங்களின் முன்பு தான் இந்தப் பகுதியின் தமிழ் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அக்கிராமங்களில் சில இருந்த சுவடே இல்லாமற் காணாமற் போய் விட்டன. பல சிங்களக் குடியேற்றங் களால் பெயர் மாற்றம் பெற்று வேறு உருவம் எடுத்து விட்டன. மீளக்குடி மர்ந்த மக்களோ போதிய வசதிகள் இன்மையால் மீண்டும் அந்தக் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளனர். தமிழ் மக்களின் இதயபூர்வ மான மண லாறு கூட "வெலிஓயா" ஆகிவிட்டது.இந்த நிலையில் தான் 1960 இற்கு முன் நிரந்தரமாகக் குடியிருந்தவர்கள் என்ற பேரில் சகல வசதிகளுடனும் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்.
ஆக்கிரமிப்பு விரியும்...
கொக்கிளாயின் ஏனைய பகுதிகள் கருநாட்டுக் கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய பகுதிகளுக்கும் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை விரிவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஒரு பெரும் ஆபத்து கொக்கிளாய் குடியேற்ற உருவத்தில் பல்முக நோக்குடன் எம்மை நோக்கி வருகிறது.இங்குதான் நாங்களும் எங்கள் தமிழ் தலைமைகளும் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. ஒரு நாடாளுமன்றப் பதவிக்காகவும் எமக்குள் எழுந்த சிக்கலை எமக்குள்ளே தீர்க்க வழியற்று வேறு வழிகளை நாடியதன் மூலமும் எமது முன்னைய தலைமைகள் சேருவில என்ற தொகுதி உருவாகவும் திருமலை மாவட்டத்தின் நிலத்தொடர்பை அறுக்கவும் வழி வெட்டிக் கொடுத்தோம்?இப்போ வடக்கையும் கிழக்கையும் நிலத்தொடர்பால் துண்டிக்கவும் வடக்கை விழுங்கவும் கொக்கிளாயில் தொடங்கும் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் என்ன செய்யப் போகிறோம்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைந்து பயனுள்ள நடவடிக்கை எடுக்கத் தவறினால் காலத்தைத் தவறவிட்டுக் கடமையைச் செய்ய மறுத்த குற்றம் இவர்களைச் சாரும். அதுமட்டுமன்றி இவர்களை ஒதுக்கி விட்டு மக்கள் நேரடியாக நடவடிக்கைகளில் இறங்கும் நிலையும் ஏற்படலாம்.
Subscribe to:
Posts (Atom)
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
October
(21)
- வெளிநாடுகளில் உள்ளோரும் வாக்காளர்களாகப்பதியலாம் !
- இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெக...
- ஆணி வேரறுத்து ஊர் உறவு பறித்து என் தாய்த் தேசத்தை ...
- கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு தாம் தமிழ்த் தேசியத...
- ஓங்கி ஒலிக்கும் ஊருக்கு உபதேசம் !!!
- மனோகணேசனின் கரங்களை ஏன் தமிழ் மக்கள் பலப்படுத்த வே...
- கானகாம்பிகை குளம் சாந்தபுரம் பகுதி காணிகளை உள்ளடக்...
- தமிழ் அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை- குற்றம் சாட...
- யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ...
- சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தரு...
- யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொ...
- மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்ப...
- யாழ்.ஆடியபாதம் வீதியில் பாவனையில்லாத வளவொன்றினுள் ...
- சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், ம...
- ஊடகங்கள் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்...
- தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது ...
- புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதி...
- தமிழீழ தேசத்தின் உரிமைக் குரல் !
- விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும் !
- போர்க்குற்ற ஆதாரம் ஐ.நாவிடம் இருந்தது !
- இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு நடத்திய படுகொலைகள் த...
-
▼
October
(21)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?