9:37 AM | Posted by
Tamil National Peoples Front
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு
27,28 செப்டெம்பர் 2011
27,28 செப்டெம்பர் 2011
ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம்பர் 27,28ஆம் நாட்களில் இலங்கைத்தீவில் நடைபெற்ற யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களிற்கு, அனைத்துலக நாடுகளின் நடவடிக்கை குறித்தும் இலங்கைத் தீவில் இறுதி யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்கள்படும் இன்னல்கள் குறித்தும் பிரான்சு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குகளில் இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகளிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இராஜவரோதயம் சம்பந்தன், திரு. மாவை சேனாதிராஜா, திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. சிவசக்தி ஆனந்தன், திரு. சிவஞானம் சிறீதரன், திரு. பா.அரியநேந்திரன், திரு. யோகேஸ்வரன் சீனித்தம்பி ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திரு. பொன்னம்பலம் கஜேந்திரகுமார், திரு. செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சிவஞானம் சிறீதரன், திரு.யோகேஸ்வரன் சீனித்தம்பி ஆகியோருடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திரு.பொன்னம்பலம் கஜேந்திரகுமார், திரு.செல்வராசா கஜேந்திரனும் பங்கு பற்றியிருந்தனர்.இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களிற்கு இழைக்ப்பட்ட கொடுமைகளையும் அநீதிகளையும் ஸ்ராஸ்பூர்க் நகரபிதா மற்றும் பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் திரு Armand JUNG ஆகியோர் சார்பில் உதவி நகரபிதா திரு Eric ELKOUBY, சில்ரிகாய்ம் நகரபிதா Raphaël NISAND, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிற்குத் தெளிவு படுத்தியது மட்டுமல்லாது வடக்கு, கிழக்குப் பகுதிகளின் இறுதி யுத்தத்தின் பின் நடக்கும் நில ஆக்ரமிப்பு, கைது, காணாமற் போதல் என்பவற்றிற்கு மத்தியில், மக்கள் பீதியில் வாழும் நிலை பற்றியும், யுத்த களத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை இன்னமும் சிறீலங்கா அரசு வெளியிடப்படாதமை போன்ற விடயங்கள் எடுத்துக் கூறப்பட்டது. அத்துடன் மறுநாள் 28ஆம் நாள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யபட்ட கூட்டத்தில் தெற்காசிய விபரங்களிற்குப் பொறுப்பான Jean LAMBERT, மனித உரிமைகளிற்கான ஆணைக்குழுவின் தலைவி Barbara LOCHBIHLER, சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பை ஐரோப்பியப் பாராளுமன்றில் பதிவு செய்த Karima DELLI அவர்களும் கலந்து கொண்டு, இலங்கையிலிருந்து வருகை தந்த தமிழ்ப் பிரதிநிதிகளிடம் அங்கு நடாத்தப்படும் இன்னல்கள், கொடுமைகள், அநீதிகள் பற்றியும் கேட்டறிந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் செய்யவேண்டிய உடனடி உதவிகள் பற்றியும், இலங்கையில் நடைபெறும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பாகவும் உரையாடப்பட்டது. இன்று இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் விருப்பங்களை வெளிப்படுத்த முடியாதுள்ள சூழலில் தமிழ் மக்களின் உரிமைகளை அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் பெற்றுகொள்ளக் கூடிய வகையில் இப்படிப்பட்ட சந்திப்புக்கள், மாநாடுகள் தொடர்ந்தும் நடாத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
October
(21)
- வெளிநாடுகளில் உள்ளோரும் வாக்காளர்களாகப்பதியலாம் !
- இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெக...
- ஆணி வேரறுத்து ஊர் உறவு பறித்து என் தாய்த் தேசத்தை ...
- கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு தாம் தமிழ்த் தேசியத...
- ஓங்கி ஒலிக்கும் ஊருக்கு உபதேசம் !!!
- மனோகணேசனின் கரங்களை ஏன் தமிழ் மக்கள் பலப்படுத்த வே...
- கானகாம்பிகை குளம் சாந்தபுரம் பகுதி காணிகளை உள்ளடக்...
- தமிழ் அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை- குற்றம் சாட...
- யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ...
- சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தரு...
- யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொ...
- மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்ப...
- யாழ்.ஆடியபாதம் வீதியில் பாவனையில்லாத வளவொன்றினுள் ...
- சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், ம...
- ஊடகங்கள் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்...
- தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது ...
- புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதி...
- தமிழீழ தேசத்தின் உரிமைக் குரல் !
- விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும் !
- போர்க்குற்ற ஆதாரம் ஐ.நாவிடம் இருந்தது !
- இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு நடத்திய படுகொலைகள் த...
-
▼
October
(21)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?
