யாழ்.ஆடியபாதம் வீதியில் பாவனையில்லாத வளவொன்றினுள் இருந்து அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பிரதேச மக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.குறித்த முதியவர் திருநெல்வேலி பகுதியில் செருப்புத் தைக்கும் தொழிலை மேற்கொள்வதாகவும், கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைச் சேர்ந்த கணபதி வேலுப்பிள்ளை (வயது70) ஆறு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் நேற்றைய தினம் தொழிலுக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். எனினும் மாலை வீடு திரும்பவில்லை. அது குறித்து வீட்டில் இருந்தவர்களும் அசட்டை செய்யாத நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.இதேவேளை குறித்த முதியவரை நேற்று மாலை 2மணி மற்றும் 5மணி ஆகிய நேரங்களில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மேலும் இரண்டு நபர்களுடன் இருந்ததை அப்பகுதியில் உள்ள சிலர் கண்டுள்ளனர்.சடலம் ஒன்று காணப்படுவதாக 119 என்ற அவசர தொடர்பு எண்ணுக்கு தெரியப்படுத்தப் பட்டதை அடுத்து கொழும்பி லிருந்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கோப்பாய் பொலிஸார் சம்பவஇடத்துக்கு விரைந்தனர்.யாழ். நீதிமன்ற மேலதிக நீதிவான் அ.பிறேம்சங்கர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை நடத்தியதுடன் உடற் கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப் படைக்குமாறு உத்தரவிட்டார்.சடலம் மீட்கப்பட்ட இடத்தின் அருகில் பயன்படுத்தப்பட்ட மதுப்போத்தல்கள் இரண்டு, குறைபீடி சடலத்தில் காயங்கள் சிலவும், மதிலில் இரத்தமும் காணப்படுகிறது.என்பன காணப்பட்டன எனப் பொலிஸார் கூறினர். சுருட்டுடன் சைக்கிளும் அங்கிருந்து மீட்கப்பட்டன.உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையின்படி கழுத்து நெரிக்கப்பட்டதால் வேலுப்பிள்ளையின் இறப்பு நிகழ்ந்துள்ளது. கையில் அணிந்திருந்த மோதிரங்கள் கழற்றப்பட்டதற்கான அடையாளங்களும், உடலில் பரவலான சிறுகீறல் காயங்களும் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.


Powered By: TNPF

பார்வை