மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் பெற்றோலிய அகழ் வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா எனும் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.ஓகஸ்ட் மாத முற்பகுதியில் கிணறொன்றை தாம் அகழ்ந்ததாகவும் கடந்த வாரம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.மன்னார் கடற்படுகையில் எஸ்.எல்.2007-01-001 எனக் குறிப்பிடப்பட்ட பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவத்றகான உரிமை கெய்ர்ன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான கெய்ர்ன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் எனும் நிறுவனம் மன்னார் பகுதியில் மேற்படி ஆய்வில் ஈடுபட்டுள்ளது.'சிக்யு' எனும் அகழ்வுக் கப்பலை பயன்படுத்தி அப்பகுதியில் 3 கிணறுகளை கெய்ர்ன் நிறுவனம் தோண்டவுள்ளது. இதற்கான செலவு 110 மில்லியன் டொலர்களாகும். கடற்படுகையில் 4442 அடி ஆழத்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தத் தக்கதா இல்லையா என்பதை அறிய மேலும் அகழ்வு வேலைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கெயின் நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.


Powered By: TNPF

பார்வை