உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 11வது சர்வதேச மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறுதி நேரத்தில் அம் மகாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்.இது குறித்த அவரது ஆதரவாளர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் வினாவியதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 11வது சர்வதேச மகாநாடானது கே.பி. குழுவினரின் பின்னணியில் நடப்பதாக பலத்த சந்தேகம் உள்ளது.ஆகவேதான் இதில் கலந்து கொள்ளவிரும்பவில்லை என்றும் ஆனாலும் பிரான்ஸில் இடம்பெறவுள்ள தியாகி தீலிபனின் நினைவுதின கூட்டத்தில் தான் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச மகாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்ததையடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்த ஆயிரக்கணக்கானோர் அரச படையினரிடம் சரணடைந்தனர்.விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்களும் மற்றவர்களும் என பெரும் எண்ணிக்கையானவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட போதிலும், இவர்களில் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவோ அல்லது அவர்கள் விடுதலை செய்யப்படவோ இல்லையென்று தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும், மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்களும் கூறுகின்றனர்.
சிறுநீரக பாதிப்புக்குள்ளான தமிழ் கைதி இராசரத்தினம் ஜெகதீஸ்வரன்...
இந்த நிலையில், கொழும்பு வெலிக்கடை மறியல் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப் பட்டிருந்த ஒருவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்.33 வயதான இராசரத்தினம் ஜெகதீஸ்வரன் என்ற இந்த தமிழ் அரசியல் கைதியின் விடுதலைக்கும், அவருக்கான வைத்தியத்திற்கும் உதவி புரியுமாறு அவரது குடும்பத்தினர் கோரியிருக்கின்றார்கள்.மன்னார் திருக்கேதீஸ் வரத்தைச் சேர்ந்த இவர் தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவி ரனிதா ஜெகதீஸ்வரன் கூறினார்.இறுதி யுத்தத்தின்போது முள்ளியவளையில் இருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றிருந்தபோது, துப்பாக்கிச் சூட்டுக்காயத்திற்கு இலக்காகியிருந்த இவர் கப்பல் மூலமாக புல்மோட்டைக்குச் சென்று திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் இவர், 2009 ஆம் ஆண்டு பிற்பகுதியில் படையினரால் கைது செய்யப்பட்டு பூஸா முகாமுக்குக் கெர்ணடு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.தனது கணவனுக்கு எதிராக இன்னும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவோ வழக்குத் தாக்கல் செய்யப்படவோ இல்லை என்று அவரது மனைவி ரனிதா ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்து முதுகில் காயமடைந்த பின்னர் அந்த அமைப்பில் இருந்து விலகிய தன்னை ஜெகதீஸ்வரன் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக ரனிதா கூறினார்.சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இவருக்கு சிறைக் கைதியாக இருக்கும் நிலையில் சிகிச்சையளிப்பதும், சிறுநீரக மாற்றம் செய்வதும் கடினமான காரியம் என வைத்தியர்கள் தெரிவித்திருப்பதாக கூறும் ரனிதா, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.

வட-கிழக்கு மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வுக்கென மூன்று மில்லியன் நிதியுதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வருமானத்துக்கான வழியொன்றைத் தேடிக்கொள்வதற்குமான செயற்பாடுகளை மேற்கொள்ளவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 1200 மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பிறப்பிலேயே உடல் குறைபாடுகளைக் கொண்டிருந்தவர்கள் ஆவர்.அதற்கு மேலதிகமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்தவர்கள் குறித்த சரியானதொரு கணக்கெடுப்பு இதுவரை மேற்கொள்ளப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போதைய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் நடவடிக்கைகள் ஐந்து உள்ளுர் அமைப்புகளின் துணையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அணுசரணையாகவே அமெரிக்கா மூன்று மில்லியன் நிதியுதவியை வழங்கியுள்ளது.
பேச்சுவார்த்தை பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கக்கூடாது” என்று தமிழ் புத்திஜீவிகளும் அரசியல் விமர்சகர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கை கடந்த வீரகேசரி வார வெளியீட்டின் தலைப்புச் செய்தியாகப் பிரசுக்கப்பட்டிருந்தது.இந்தச் செய்தி பற்றி மறுநாள் ஒரு பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு புத்திஜீவிகள் யார் என்று தெரியாததால் எப்படிப் பதிலளிப்பதென கூட்டமைப்பு முக்கியஸ்தர் ஒருவர் பதிலளித்துள்ளார். தேர்தல் காலங்களில் இதே தமிழ்ப் புத்திஜீவிகள் தான் தமிழத் தேசியத்தின் பெயரால் கூட்டமைப்பினரின் வெற்றிக்காகப் பாடுபட்டவர் கள் என்பதைக் கூட்டமைப்பினர் அறியாதிருக்க முடியாது. அவ்வேளையில் மௌனமாக இருந்து தமிழ்த் புத்திஜீவிகளை அங்கீகரித்து நின்றவர்கள் நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்ந்த பின் தமிழ்த் தேசியத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அதே புத்திஜீவிகள் கூட்டமைப்பினரிடம் கோரிக்கையை முன்வைக்கும் போது அவர்களை இனம் காண முடியாது போனமை விசித்திரமாக இருக்கின்றது. அது மாத்திரமல்ல, இன்னுமொரு கூட்டமைப்பு முக்கியஸ்தர்“கூட்டமைப்பு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது’ என சூளுரைத்துள்ளார்.தமிழ் மக்கள் வரவேற்கின்றனர்.ஆனால் அதனை நிறைவேற்றிக் காட்டுவார்களா? அல்லது அரசாங்கம் எம்மை ஏமாற்றிவிட்டது என்ற பழைய பல்லவியைத் தான் பாடுவார்களா? என்ற தமிழ் மக்களின் அச்சத்தை கூட்டமைப்பினரின் முன் வைக்கின்றோம்.2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. இந்த ஒப்பந்தம் பற்றி பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆயுதங்களுக்கு ஓய்வு, சமாதானம் பிறந்து விட்டது என்று அளவுக்கு மீறிய நம்பிக்கை ஒளி பாய்ச்சப்பட்டது. தமிழ் மக்கள் பெரும் மாயைக்குள் தள்ளப்பட்டனர் என்பதை போர் நிறுத்த முறிவும் முள்ளிவாய்க்கால் போரும் தமிழ் மக்களுக்கு நன்றாகவே உணர்த்தி விட்டுமுள்ளன.எனினும் 2002 ஆம் ஆண்டு உடன்படிக்கை கைச்சாத்தாகியதையடுத்து இந்த உடன்படிக்கை சமாதானப் பொறியாக” மாறிவிடக்கூடாது என்று அன்று என் முன்னால் எழுதப்பட்டதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். உண்மையில் 2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை தமிழ் மக்களின் போராட்டத்திற்கு முன்வைக்கப்பட்ட “சமாதானப் பொறி” என்பதை பின்னைய நிகழ்வுகள் சான்றுபகரும்.இலங்கையும் இந்தியா உட் பட பல வல்லரசு நாடுகளும் அணி திரண்டு இந்தோனேஷியா ஆஷ்ஷே பாணியில் சமாதான உடன்படிக்கையை சமாதானப் பொறியாக மாற்றி காரியங்களை மிகக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டுள்ளன.உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது போராட்டம் இலங்கை மண்ணில் இருந்து துடைத் தெறியப்பட்டதாகக் கூறப்பட்ட போதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளின் நீதியை நியாயத்தை சர்வதேச சமூகம் மிக ஆழமாக உணர வைத்ததுடன் இன விவகாரத்துக்கான தீர்வைக் காண வேண்டுமென்ற கருத்துருவாக்கத்திற்கு சர்வதேச சமூகத்தை அணிதிரள வைத்துள்ளனர். இதற்கும் அப்பால் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த ஆயிரமாயிரம் அப்பாவிகளின் உயிர்கள் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கி நீதி கேட்க வைத்துள்ளன.இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் பெயரிலான தேர்தல் வெற்றிகளை வழங்கி தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த தாற்பரியத்தை கூட்டமைப்பினர் உணர்ந்துகொண்டாக வேண்டும்.அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்ற பாணியில் காயமாற்ற வேண்டுமென்று எந்த ஒரு தமிழ் புத்திஜீவியோ அல்லது தமிழ் மக்களோ எதிர்பார்க்கவும் இல்லை.பேச்சுவார்த்தை பொறிக்குள் சிக்கமாட்டோமென கூட்டமைப்பினர் சூளுரைக்கலாம். ஆனால் போரில் மாத்திரமல்ல, பேச்சுவார்த்தையிலும் தமிழர் தரப்பு தோற்றுப் போனதே வரலாறாக உள்ளது. கடந்த 60 வருடங்களாகத் தமிழர் தரப்பில் எத்தனையோ சட்ட மேதைகள், அரசியல் சாணக்கியர்கள், நிபுணர்கள் சிங்களத் தரப்புடன் பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்துள்ளனர்.ஆனால் இறுதியில் தமிழர் தரப்பு தோற்றுப்போனதே வரலாறு. அவ்வாறு மீண்டும் ஒரு சம்பவம் இடம்பெற்று விடக் கூடாது என்பது தான் தமிழ் மக்களின் ஆதங்கமாக உள்ளது. கடந்த முறை நடைபெற்ற ஐ.நா. கூட்டத் தொடருக்குப் போகுமுன் ஜனாதிபதி கூட்டமைப்பு தலைவரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அரச தரப்புக்கும் கூட்டமைப்பிற்குமிடையில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்தார்.அதனை அடுத்து ஐ.நா. சென்ற ஜனாதிபதி அரச தரப்பு கூட்ட மைப்பு பேச்சுவார்த்தையைக் காட்டி இன விவகார தீர்வு நோக்கி தாம் நகர்வதாக சர்வதேசத்திற்கு அறிவித்தார்.கூட்டமைப்பிற்கும் அரச தரப்பிற்கும் இடையில் “10 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இறுதியில் கூட்டமைப்பினர் அதிருப்தியுடன் வெளியேறியதைத் தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை. தற்போதும் ஜனாதிபதி ஐ.நா. செல்வதற்கு முன்பாக கூட்டமைப்பின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அரச தரப்பு கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்து விட்டு ஐ.நா. சென்றுள்ளார்.இவ்வாறு அரசாங்கத்தின் “பேச்சுத் துணை ’ நிகழ்ச்சி நிரல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போவதானது இன விவகாரத் தீர்வு நோக்கிய சர்வதேச சமூகத்தின் நகர்வுகளுக்கு முட்டுக் கட்டை போடுவதாகவே அமையும் என தமிழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.தெற்காசிய வெளிவிவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் துணைச் செயலர் ரொபட் ஓ பிளேக் 2010 ஆம் ஆண்டு ஜுலையில் ஜனாதிபதியைச் சந்தித்த பொது அரசியல் தீர்வு குறித்து வினவியதாகவும் இந்த விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்றும் கூட்டமைப்புடன் பேசி தீர்வு காண்பதாகவும் ஜனாதிபதி  தெரிவித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பத்திரிகை ஆசியர்களின் சந்திப்பின் போது தெரிவித்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.அதேவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னர் அரசியல் தீர்வு குறித்த விவகாரத்தை சர்வதேச சமூகத்தின் முன்வைத்துள்ளனர். அதன் பிரதிபலிப்பே ஒஸ்லோ உடன்பாடு. ஆனால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக் கூடான அரசியல் தீர்வை சர்வதேச அரங்கிலிருந்து இழுத்தெடுத்து இலங்கைக்குள்  முடக்கிவிட முனைகின்றது.எனவேதான் பேச்சுவார்த்தை பொறிக்குள் சிக்காதிருக்க தீர்வுப் பொதியுடன் பேச்சுவார்த்தைக்குப் போகுமாறு தமிழ்ப் புத்திஜீவிகளும் தமிழ் மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். இல்லையேல் பொறிக்குள் சிக்குவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்காது; தமிழ் மக்களாகவே இருப்பர் என்ற அச்சமே தமிழ்ப் புத்திஜீவிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ளது என்பதையும் கூட்டமைப்பினரின் முன் வைக்க விரும்புகின்றோம்.அதேவேளையில் மனித உரிமை மீறல் போன்ற பல விடயங்களில் பொறுப்புக்கூறும் கடமைப்பாட்டை இலங்கை அரசாங்கத்திடமிருந்து சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருப்பது போல் தமிழ் மக்கள் தேர்தலில் வெற்றிக் கனியைச் சுவைக்க வைத்த கூட்டமைப்பினடமிருந்தும் தமிழ் மக்களுக்கான பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டையும் எதிர்பார்க்கின்றனர். என்பது தான் உண்மையாகும்.
கடந்த செப்டம்பர் 19 நாளன்று சேவ் தமிழ் இயக்கம் சார்பில், ”போர்குற்ற வரலாற்றில் இராஜீவும் ராஜபக்சேவும் என்னும் தலைப்பில் ஒரு அரங்கக் கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது. சுமார் 250 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தை திரு.இளங்கோ வரவேற்புரையாற்றி தொகுத்து வழங்கினார்.
சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள்பேசியது :
அதிபர் ஜெயவர்த்தனே என்னும் சிங்கள ராஜதந்திரியின் சதிவலையில் விழுந்த ராஜீவ், இந்திய பாராளுமன்றத்தின் தீர்மானமும், ஒப்புதலும் இல்லாமல் அடுத்த நாட்டின் பிரச்சினைக்கு தனது நாட்டு ராணுவத்தை அனுப்பினார். இது இந்திய வெளியுறவுத் துறை செய்த மிகப்பெரிய தவறு.ஆனால், இலங்கை சென்ற இரண்டு மாதங்களுக் குள்ளேயே இந்திய அமைதிப்படை தமிழர்களுக்கெதிரான தனது தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தமிழர்களுக்கெதிரான பல்முனைத்தாக்குதல் 87, 88, 89 என மூன்று வருடங்கள் நடந்தது.போரின் பின்பு யழ்ப்பாணம் சென்றிருந்த நான் 12 வயது சிறுமியிடம் பேசினேன்."அண்ணா,சிங்கள ராணுவம் பற்றி எங்களுக்குத் தெரியும், ஆனால் இந்திய ராணுவம் வந்தவுடன் சுதந்திரம் (பாதுகாப்பு) கிடைத்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்திய ராணுவமும் எங்களுக்கு கொடுமைகள் தான் புரிந்தது”என்றாள்.இது இந்திய ஈழத்தமிழருக்கு செய்த சரித்திர துரோகம். ஈழத்தமிழருக்கு இந்தியாவுடன் பல்லாயிரமாண்டுகால உறவு உள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வெளியுறவு கொள்கையை இந்தியா இலங்கையில் கடைபிடிக்கவில்லை.வடகிழக்கு, காஷ்மீர், மத்திய மலைவாழ் மக்கள் என எங்குமே இந்தியா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால், தமிழகம் எப்படி அவர்களுக்காக போராடாமல் ஒதுங்கியது என்பதுதான் ஆச்சரியம். 2009-ல் ஏற்பட்ட இழப்புக்கு 1987-ல் இந்தியா வித்திட்டது- 1987-ல் ஜெயவர்த்தனே ஜே.வி.பி. கூட்டத்தில் பேசினார். “நாம் செய்ய வேண்டியதை இந்திய ராணுவம் செய்யும்” என்று அவர் திட்டமிட்டு இந்தியாவையும், புலிகளையும் மோத வைத்தார்.ஈழம் என்பது பல்லாயிரமாண்டு கால சரித்திர உண்மை. அது 1940-களுக்கு பிறகு சிங்கள இனவாதிகளின் அடக்குமுறையால் வலுப்பெற்றது. அந்த இன அடக்குமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது தீவிரவாதம் ஆகாது. ஆனால், அரசாங்கம் தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் நாம் நமது அகிம்சையான பேராட்டங்களை கூட விட்டு விட்டு ஒதுங்கினோம்.இந்தியாவுக்கு எப்போதும் சிங்களரிடம் இருந்து பிரித்து தமிழர்களுக்கு உரிமை பெற்று தருவதில் விருப்பம் இல்லை. ஆனால், நமது எண்ணம் மாறுபட்டது. மனித உரிமைகள் எங்கு  ஒடுக்கப்பட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். அதுவும் ஒடுக்குவது இந்தியா எனும்போது நாம் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும். நமக்கு அந்த உரிமையுண்டு.2500 சிங்கள ராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்தின் விடுதலைப்புலிகளின் முற்றுகைக்குள் சிக்கியபோது இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி சிங்கள ராணுவ வீரர்களை விடுவித்தது. அதே இந்தியாவிற்கு தங்களின் செயற்கைகோள் படங்களில் 3 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், மருந்துகள் இல்லாமல் தாக்கப்பட்டது தெரியாதா? ஏன் அவர்களை காப்பாற்ற இந்திய நடவடிக்கை எடுக்கவில்லை? சேவ் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் "போர்குற்ற வரலாற்றில் இராசீவும் இராசபக்சேவும்" குறித்து இன்று பேசுவதற்கான காரணங்களை விளக்கினார்.நான்காம் கட்ட ஈழப் போரில் சிங்களப் பேரினவாத அரசு புரிந்த இனக்கொலை குற்றத்திற்காக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டு தமிழர்களும் போராட்டங்களைத் தீவிரப் படுத்திக் கொண்டிருந்தோம். 2009 இலிருந்து இரண்டாண்டுகளைக் கடந்தும் ஆறாத காயங்களுடன், அடங்காத சினத்துடன் தமிழக அரசியல் வெளியைத் தமிழீழ ஆதரவு குரல் நிரப்பியிருந்தது. இனி இது ஈழத் தமிழர் பிரச்சனை அல்ல; இது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்குமான பிரச்சனை என்று வளர்ந்துக் கொண்டிருந்தது ஈழ ஆதரவு இயக்கம். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இனக்கொலை குறித்த விவாதம் நடப்பதற்குப் பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.இந்த சூழலில் தான் இந்திய அரசு பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் தூக்கு தண்டனைக்கு நாள் குறித்தது. மூன்று தமிழர்களின் உயிரைப் பணையம் வைத்து இனக்கொலை விசாரணை கோருவதைவிட்டு தமிழகத்தை விலகச்  செய்தது மட்டுமின்றி இராசீவ் கொலையை மீண்டும் தமிழக மக்களின் நினைவுக்கு கொண்டுவந்து குற்றவுணர்ச்சியைத் தூண்டி வெற்றி கண்டுள்ளது.மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் எந்த ஒரு மூலையிலும் போர்குற்ற விசாரணை என்ற ஒன்று நிகழாது தடுத்து நிறுத்த இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. 1971 வங்காளதேச விடுதலை அடைந்த போது நிகழ்ந்த போர்குற்றங்கள் ஆகட்டும், 1987களில் இந்திய அமைதிப்படை ஈழமண்ணில் நிகழ்த்திய போர்குற்றங்கள் ஆகட்டும்,தற்போது அண்மையில் காசுமீரில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 மனித புதைகுழிகள் குறித்த விசாரணை ஆகட்டும் இந்தியாவின் பங்கு குறித்த விசாரணை எதுவும் நடைபெறாமல் தடுக்கப்பட்டு வருகிறது.ஆக இலங்கையை காப்பாற்ற மட்டுமின்றி தன் சொந்த நலனுக்காகவும் தெற்காசிய பிராந்தியத்தில் எந்த ஒரு தேசிய இனத்திற்கு எதிராக நடந்து வரும் போர்குற்றங்கள் குறித்த விசாரணையை இல்லாது செய்து வருகிறது இந்தியா. இன்று தமிழக மக்களிடம் இலங்கைக்கு எதிரான போர்குற்ற விசாரணை தேவை என்ற முழக்கங்கள் தீவிரமடைந்திருப்பதை நன்கு உணர்ந்த இந்தியா, மக்களை போர்குற்ற விசாரணையில் இருந்து திசைதிருப்பும் நோக்கோடு மூவரின் தூக்குதண்டனைக்கான நாள் குறித்தது.போரை நிறுத்த கெஞ்சி நின்றது போல் மூன்று தமிழர் உயிர் காக்க  மீண்டும் ஒரு முறை மன்றாடும் அரசியல் போக்குக்கு மாறினோம். மூன்று தமிழர் உயிரை மீட்பதென்பதைத் தமிழகம் தன்னுடைய மானப் பிரச்சனையாக உணர்ந்தது. இந்த முறை போராட்ட சுழற்சி வேகமாக நடந்தது. முதல் சுற்றின் இறுதியில் போராட்டம் செங்கொடி தீக்குளிப்போடு ஒரு உயிரைப் இழந்து நின்று கொண்டுள்ளது.மக்கள் போராட்டத்தின் ஒரு பயனாக தமிழக சட்டசபை ’தூக்கை நிறுத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. உண்மையில் சட்டப் போராட்டத்தின் மூலம் தூக்கு இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சிங்கள அரசுகள் அனைத்துலக அரங்கில் தங்களை இனக்கொலை குற்றத்திலிருந்து காத்துக் கொள்வதற்கான  அரச தந்திர கைவரிசைகளைக் கவலையின்றி செய்து கொண்டிருக்கின்றன. இரண்டாவது சுற்றுக்குள் நாம் நுழைகின்றோம்.ஒன்றரை இலட்சம் உயிர்கள் இந்திய அரசின் உதவியுடன் கொல்லப்பட்டபின்பே தமிழக மக்கள் ’இராசீவ் கொலை’ என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து மீளத் துணிந்துள்ளனர். ஆனால் 2011 ல் நின்று கொண்டிருந்த நம்மை மீண்டும் 1991 க்கு தள்ளிவிட்டது இந்திய அரசு. மூன்று தமிழர் உயிர் என்றோம். பகைவர்கள் ’இராசீவோடு உயிரிழந்த 18 தமிழர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்று நம் பக்கமே திருப்பி விடுகின்றார்கள். நாம் அரசியல் நியாயமற்றவர்கள் போல சித்தரிக்கப்படுகின்றோம். ஆனால் அதுவா உண்மை?இராசீவ் கொலை என்பது இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்க்கு எதிராக செய்த அட்டூழியங்களின் எதிர்வினையாகவே நடந்தது என்ற உண்மை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இராசபக்சேவை இனக்கொலை குற்றத்திலிருந்து காத்து தமிழீழ விடுதலைக்கு தடை போடத் தானே இந்திய அரசு நினைக்கின்றது. இராசபக்சே மட்டுமல்ல இராசீவ் காந்தியும் போர்க்குற்றவாளியே என்ற உண்மையைப் போட்டுடைப்போம்.அது உண்மையில் மூன்று தமிழர் உயிர் காக்கும் மக்கள் போராட்டங்களை விரிவாக்கும். சிங்கள இராணுவம் இலட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது என்றால் இராசீவின் இந்திய இராணுவமும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது. சிங்கள இராணுவத்தைப் போலவே இந்திய இராணுவமும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைக் கொடுமைகளை நிகழ்த்தியது. இராசபக்சே, வெள்ளை கொடி ஏந்தி வந்தவர்களைக் கொல்ல சொன்னது போல் இராசீவும் சமாதானம் பேசப் போன பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார்.‘என் இராணுவம் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டது’ என்று இராசபக்சே சொன்னது போல் ‘இந்திய இராணுத்தினர் ஒரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு ஒற்றை கையால் கவனமாக சண்டைப் போடுகின்றன்ர்’ என்று இராசீவும் அன்று சொன்னார். இராசபக்சே போல இராசீவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைத்தார். ஈழத் தமிழர்தம் தமிழீழ தாயக வேட்கை உலகத் தமிழர்களின் தாகமாக மாறும் என்று இராசபக்சே கருதியிருக்க வில்லை. அது போல் அன்று புலிகளின் தாகம் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் தாகமாக மாறி போராட்டம் புது வேகம் எடுக்கும் என்று இராசீவும் நினைக்க வில்லை.எனவே, இராசீவும் இராசபக்சேவும் வரலாற்றின் அடுத்த அடுத்தப் பக்கங்களிலேயே நின்று கொண்டிருக்கின்றார்கள். இருபது ஆண்டுகளாக இருட்டடிக்கப்பட்ட உண்மைகளை ஊருக்கு உரக்க சொல்வதற்கு இது தான் தருணம். இதை நாம் முன்பே செய்திருக்க வேண்டும். இப்போதும் செய்யாமல் விட்டால் தான் அது பிழை. இன்று போர்க்குற்றங்கள் பற்றிய பரவலான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கின்றது. இப்போதாவது இந்திய அமைதி படையின் அட்டூழியங்களை அம்பலமாக்குவோம். நமக்கு வலியைக் கொடுக்க நினைக்கும் இந்திய அரசுக்கே வலியைத் திருப்பி தருவோம்.20 ஆண்டுகளுக்கு முன் நடந்த இராசீவ் கொலை என்ற அரசியல் பிழையை  திருத்தி எழுத நமக்கு இருக்கும் ஒற்றை வழி இராசீவின் பிம்பத்தைத் தகர்த்தெறிவதே. இராசீவ் போர்க்குற்றவாளி ! இராசபக்சே இனக்கொலையாளி !





தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களின் உரை :
இன்று ராஜபக்சே, நடத்திய இனப்படுகொலைகளுக்கு ‘முன்னோடி’ இந்திய ராணுவம் தான் என்பதை ஒப்பிட்டுக் காட்டுவதற்காக சில நிகழ்வுகளை மட்டும்  கூறுவது பொருத்தமாக இருக்கும்.‘சாட்சிகளற்ற இனப் படுகொலைகளை’ நடத்தியது சிறீலங்கா அரசு. அதற்காக முதலில் ஆட்சிக்கு எதிராக எழுதிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத் தான் இந்திய ராணுவமும் ஈழத்தில் நடத்தியது.1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நகரத்துக்குள் நுழைந்த இந்திய ராணுவம், தமிழர்களின் குரலாக ஒலித்து வந்த ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ என்ற இரண்டு நாளேட்டின் அலுவலகர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தது; அதுமட்டுமல்ல அச்சு எந்திரத்தையும், அலுவலகத்தையும் வெடி வைத்து தகர்த்தனர். அதே நாளில் கொக்குவில் என்ற இடத்திலிருந்த விடுதலைப் புலிகள் தொலைக்காட்சி சேவையான நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தில் இந்திய ராணுவம் புகுந்து, ஒளிபரப்புக் கருவிகளை பறித்துச் சென்று விட்டது. ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ நாளேடுகள் இலங்கை அரசு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழ் நாளேடுகள்; முதலில் மக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் ஊடகங்களை முற்றாக நசுக்கிய பிறகு, இந்திய ராணுவம் மக்களுக்கு எதிரான ராணுவ வேட்டையில் இறங்கியது. இதைத்தான் ராஜபக்சேவும், இறுதி கட்டப் போரில் செய்தார்•மருத்துவமனைகளை ராஜபக்சேயின் ராணுவம் குண்டு வீசித் தாக்கி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளையும் மறுத்த ரத்தக் கண்ணீர் வரவழைக்கும் அதிர்ச்சித் தகவல்களை இப்போது அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை கூறுகிறது. அதைத் தான் இந்திய ராணுவமும் செய்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் இறங்கிய இந்திய ராணுவம் 1987 அக்டோபர் 21 அன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையைக் குறி வைத்தது. இதுபற்றி ‘நியூ சேட்டர் டே ரெவியூ’ என்ற கொழும்பு ஏடு வெளியிட்ட விரிவான செய்தி இது. (1987, நவம்பர் 7) “அக். 21 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய ராணுவம் கைப்பற்றியது. அன்று தீபாவளி நாள். ராணுவத்தினர் உடனடியாக 50 நோயாளிகளை சுட்டுக் கொன்றனர். அவரது உடல்கள் அங்கேயே எரிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே தரையில் வீசப்பட்டன. அடுத்த இரண்டு நாளில் அக்.23 ஆம் தேதி 83 நோயாளிகள் - ஊழியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார் இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரார். எல்லா நடவடிக்கைகளையும் யாழப்பாண கோட்டை தலைமை ராணுவ முகாமிலிருந்து கண்காணித்தவர் கேப்டன் பிஸ்ட். அவருக்கு (இந்தப் படுகொலைகளில்) உதவியாக செயல்பட்டவர்கள் டாக்டர் கனகராஜா, டாக்டர் பன்சாரி. இவர்களும் இந்திய “அமைதிப்படை” அதிகாரிகள்தான். கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்த உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் செய்யப்படவில்லை; விசாரணைகளும் நடத்தப்படவில்லை.இறந்தவர்களில் 20 பேர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள். மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றவர்கள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் உடல் அழுகிய நிலையில் சவக்கிடங்கில் கிடந்தது. 12 பேர் உடல், அடையாளங்களை காண முடியில்லை. மருத்துவமனை ஊழியர்கள் 20 பேரின் சடலங்கள் ஏனைய ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டன. 11 பேர் உடல்கள், அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து அடையாளம் காணப்பட்டன. மருத்துவ மனையில் மின்சாரத்தை ராணுவத்தினர் துண்டித்ததால், மூச்சு சுவாசத்துக்கான ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நோயாளிகளும் தீவிர மருத்துவ கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 நோயாளிகளும் இறந்தனர். யாழ்ப்பாண மருத்துவமனை முற்றிலும் நாசமடைந்தது. மின்சாரமோ தண்ணீரோ இல்லை. சவக்கிடங்கு நிரம்பி வழிந்தது. ஒரு வயதிலிருந்து 85 வயது வரையுள்ள 85 சடலங்கள் 3 நாட்களில் குவிந்து கிடந்தன. ‘நர்சு’களின் குடியிருப்புகள் ஷெல் வீச்சுக்கு உள்ளாயின.நெல்லிப்பாளையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவமனையும் மூடப்பட்டது. மணிப்பாய் என்ற இடத்தில் இருந்த ‘கிரீன் மெமோரியன்’ என்ற தனியார் மருத்துவமனையையும், ராணுவம் மிரட்டி மூடச் சொல்லி விட்டது” என்று செய்தி வெளியிட்ட அந்த ஏடு, இறந்தவர்களின் நீண்ட பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டது. எந்த ஒரு யுத்தத்திலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ‘போர்க் குற்றம்’ என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் - ஷெல் வீசியது மட்டுமல்ல; எவரும் சிகிச்சை பெறவும் கூடாது என்று செயல்பட்ட வேறு மருத்துவமனைகளையும் மிரட்டி மூடி விட்டார்கள். காந்தி தேசமான இந்தியாவிலிருந்து ராஜீவ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்ட ‘அமைதிப்படை’ இந்தப் போர்க் குற்றங்களைத்தான் செய்தது.
 சர்வதேச உதவி அமைப்புகளை போர்ப் பகுதியிலிருந்து ராஜபக்சே வெளியேற்றியதுகூட இந்தியா காட்டிய வழியில்தான் ! 
இந்திய ராணுவம் சர்வதேச மனித உரிமை அமைப்புகளான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச சட்டவியலாளர்கள் குழு போன்ற அமைப்புகள் தமிழ் ஈழப் பகுதிக்குள் நுழைவதற்கு ‘இந்திய அமைதிப் படை’ அனுமதி மறுத்தது. ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள், இதைக் கண்டித்தன.
ராணுவத் தாக்குதல் நடக்கும்போது மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை கிடைக்காமல் செய்துவிட வேண்டும் என்ற ‘போர்க் குற்றத்தை’ இலங்கை ராணுவத்துக்கு கற்றுக் கொடுத்ததும் இந்திய ராணுவம் தான்.
“வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு, உணவு, மருந்து, பற்றாக்குறை கடுமையாகிவிட்டது. கடைகளில் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்காமல் போய்விட்டது. செஞ்சிலுவை சங்கம் உடனே தலையிட்டு தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்; தமிழ் மக்கள் மீது இந்திய ராணுவம் ஷெல் வீசிக் கொல்வதை உடன் நிறுத்த வேண்டும்” என்று தொலைபேசி வழியாக அவசர வேண்டுகோள் விடுத்தார் வடக்கு மாவட்ட ஆட்சித் தலைவர். 

மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் என்றெல்லாம் அய்.நா. குற்றச்சாட்டுகளைக் கூறினாலும் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற அணுகுமுறையை இலங்கைக்கு கற்றுக் கொடுத்ததும் இந்தியா தான்! இந்திய ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி அய்.நா.வில் மனித உரிமை குழுவில் கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 1987, பிப்.1 மதல் மார்ச் 11 வரை ஜெனிவாவில் நடந்த அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் பேசிய பல பிரதிநிதிகள் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிக் கண்டித்தனர். அந்தக் கண்டனங்களை ‘தமிழ் இன்டர்நேஷனல்’ விரிவாகப் பதிவு செய்தது; அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை இந்திய அமைதிப் படை!

விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ, சமாதானப் பிரிவு பொறுப்பாளர் புலித்தேவன், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுடன் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது சிங்கள ராணுவம் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக சுட்டுக் கொன்றது நமக்குத் தெரியும். “வெள்ளைக் கொடியுடன் வந்தாலும் கவலைப்படாதே; சுட்டுத் தள்ளலாம்” என்று இலங்கை ராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய அமைதிப் படைதான். வெள்ளைக் கொடிகளை ரத்தச் சிவப்பாக்கிய பல படுகொலைகளை இந்திய ராணுவம் செய்தது. உதாரணமாக 9.11.1987 அன்று சண்டிலிப்பாய் எனுமிடத்தில் இந்திய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொது மக்களை காரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். காரில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்திய ராணுவம் நாவலாய் என்ற இடத்தில் காரை நோக்கி சுட்டது. காரில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர் - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அய்.நா. பொதுச் செயலாளருக்கு 1987 நவம்பரில் எழுதிய கடிதத்தில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே போல் போர் நிறுத்தம் அமுலில் இருந்த போது இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த ஹர்கிரத் சிங்கை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார். அப்படி ‘வெள்ளைக் கொடி’யுடன் பிரபாகரன் பேசவரும்போது அவரை சுட்டுக் கொன்று விடுமாறு இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த தீட்சத் என்பவர் ஹர்கிரந்த் சிங்கிடம் கூற, அதற்கு, அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இது டெல்லியிலிருந்து மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று தீட்சத் கூறினார். அப்போதும் அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இதை ஹர்சிரத் சிங் அவர்களே பணி ஓய்வு பெற்ற பிறகு தான் எழுதிய நூலிலும் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் கூறியுள்ளார்.

(Harkirat Singh : Once he (Dixit) said, shoot Prabaharan. I said, Sorry, I don’t do that. When he came to meet me at 120 Clock at night for some work, he said “shoot him. General, I have told you what I have (been) ordered”. I said, I don’t take your orders. And we are meeting under a white flag, you don’t shoot people under white flag”).
‘போரில்லாத பகுதி’ என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் சுடலாம். ‘போர் நிறுத்தம்’ செய்யப்பட்ட காலத்திலும் மக்களை சுடலாம் என்று இலங்கை ராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய ராணுவம் தான்.
21.11.1987 அன்று இந்திய ராணுவம் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. அந்த 48 மணி நேரத்தில் திரிகோண மலையில் 7 அப்பாவித் தமிழர்களை இந்திய ராணுவம் சுட்டது. இதில் இரண்டு பேர் பிணமானார்கள்.
ராஜபக்சே - ராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதிப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர், உலகத் தமிழினத்தின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது.
ராஜீவ் காந்தி தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான முரசொலி மாறனிடம், தரையை நோக்கி தனது காலைக் காட்டி இங்கு பிரபாகரன் தலை கொண்டுவரப்படும் வரை இந்திய ராணுவத்தின் இலங்கை தாக்குதல் தொடரும் என்று திமிருடன் கூறினார்.
தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தோழர் தியாகு அவர்கள் பேசியது :
ஐ.நா. சட்ட திட்டங்களின்படி இந்தியாவும், இலங்கையும் இனப்படுகொலை புரிந்துள்ளன. இனப்படுகொலை என்பது வெறும் எண்ணிக்கை சம்பந்தப்பட்டதல்ல, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு இனத்தவரை கொலை செய்தாலோ, அவர்கள் வாழ்வதற்கான சூழலை தடை செய்தாலோ அது இனப்படுகொலைதான்.1987-ல் ராஜீவ் அனுப்பிய இந்திய அமைதிப்படை 8000 பேரை கொன்றது. சில ஆயிரம் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதென்றால் அவர்கள் சிங்களப்படைபோல் லட்சம் பேரை அழிக்கமாட்டார்கள் என்பதல்ல, அவர்கள் அதனைச் செய்ய விடாமல் புலிகள் தடுத்தனர்.ஆனால், இப்போது 2009-ல் உலக வல்லரசுகளின் ஆதரவும் மற்றும் ஆயுதங்களுடன், தீவிரவாதிகள் என்ற வாதத்தால் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை ஈழத்தில் கொன்று குவித்தது சிங்களப்படை.1991-ல் ராஜீவ் இறப்பினால் இழப்பு ஈழப்போராட்டத்திற்குதான் அதிக இழப்பு. இதைத்தான் அப்போதே கிட்டு கூறினார். “ராஜீவ் கொலை பற்றி உணர்வு ரீதியாக கவலை இல்லை.ஆனால் அரசியல் ரீதியான விளைவுகள் வலைஅளிக்கின்றன” என்றார். ராஜபட்ஷே மேற்கொண்ட போர் ராணுவ மயப்படுத்தலை மட்டுமே கொண்டது. அரசியல் ரீதியாக உலகை எதிர்கொள்ளும் வேலையை இலைங்கைக்காக இந்தியா செய்தது. போர் தொடங்கும் முன்பு இந்தியாவால் இந்தப் போருக்காக மூன்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
1. விடுதலைப்புலிகள் கை ஓங்கினால் இந்தியா தலையிடுவது
2. உலக நாடுகளிடையே எழும்பும் எதிர்ப்பை இந்தியா சமாளிப்பது
3. தமிழகத்தின் எழுச்சியை மடை மாற்றுவது
இந்த மூன்றாவது கோரிக்கையான தமிழகத்தின் எதிர்ப்பை கையாளுவதற்கு கருணாநிதி பயன்பட்டார்.ஆனால், முத்துகுமாரின் மரணம் மற்றும் தொடர் போராட்டங்களை இன்று ஈழத்தின் நியாயம் பரவலாக பேசப்படுகிறது. இதை நாம் 87 ஈழ படுகொலைகளின் போதே பேசியிருந்தால் இந்தியா தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். இலங்கைக்கு இவ்வளவு உதவிகள் செய்து இருக்காது. 2009-ல் ஏற்பட்ட ஈழப் படுகொலைகளை அடுத்து தமிழகத்தின் எழுச்சியை அடக்கத்தான் இந்த மூவர் தூக்கு மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. நமது பேராட்ட முறைகளை எதிரியும் சேர்ந்தே தேர்வு செய்கிறான்.அவர்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ராஜீவ் பிணத்தை தோண்டி வந்து அரசியல் செய்கின்றனர். எனவே, நாம் ராஜீவ் ஈழ மக்களுக்கு செய்த கொடுமைகளை, துரோகத்தை அம்பலப்படுத்தி ராஜீவின் அரசியல் பிம்பத்தை வீழ்த்த வேண்டும்.










அன்பான எம் புலம்பெயர் தமிழீழ நெங்சங்களே, எம் உறவுகளின் அவல நிலையைப் பாருங்கள் ! திங்கள் ஒன்றில் நாம் பருகும் தேனீருக்கும், கோப்பிக்கும் செலவிடும் பணத்தில் மண்ணில் ஒரு குடும்பமே வாழும் என்பதை நீங்கள் அறிவீர்களா ?ஸ்ரீலங்கா அரங்கேற்றிய கொடூர யுத்தத்திற்கு பலியாகிய எம் உறவுகள் ஒரு பக்கம், தமது உறவுகளை மட்டுமன்றி அவையவங்களையும் இழந்து அனாதைகளாக பரிதவிக்கும் உறவுகளின் பரிதாபங்கள் மறுபுறம்.இவர்களை யார் வாழ வைப்பார்கள் என்ற கேள்விக்கு விடை பகருகின்றார்கள் எம் புலம் பெயர் உறவுகள்.கனடா வாழ் எம் தமிழீழ உறவுகள் தொடர்ந்தும் தாயக உறவுகளுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி வரும் வகையில், அண்மையில் “கனடா வாழ வைப்போம்” மனித நேய அமைப்பினூடாக  எம் உறவுகளிற்காக ஒரு தொகைப் பணத்தினை அனுப்பி வைத்தனர்.இதனூடாக பதினொரு உறவுகள் தலா பத்தாயிரம் ரூபாவைப் பெற்று பயனடைந்துள்ளனர்.கடந்த 10 நாட்களுக்கு முன்னரும் “கனடா வாழ வைப்போம்” மனித நேய அமைப்பினர், கியூபெக் தமிழ் சமூகத்தின் ஒலிம்பிக் மெய்வல்லுனர் போட்டியூடாக திரட்டிய 1000 வெள்ளிகளையும் தாயகத்திற்கு அனுப்பி 11 உறவுகள் பயனடையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது மக்களின் விடுதலைக்கு தமிழீழம் என்னும் உன்னத இலட்சியத்திலிருந்து நாம் என்றுமே பின்னிற்கப் போவதில்லை. இதற்கு இன்றைய காலகட்டத்தில் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் இல்லையேல் நாம் இந்த இலட்சியத்தை வென்றெடுக்க தொடர்ந்து போராடுவோம்.இதற்கு பக்கபலமாக எமது புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டுமென ஜெனிவாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் ஆங்காங்கே சில நிகழ்வுகள் நடைபெற்றாலும் இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் அனைத்து நாடுகளையும் சேர்ந்த மக்கள் ஒன்றுதிரண்டு இருப்பதைப் பார்க்கும்போது நான் சந்தோசமடைகின்றேன்.எமது மக்கள் வீழ்ந்து கிடக்கவில்லை, சோர்ந்துபோகவில்லை அவர்கள் எழுந்து நிற்கின்றார்கள் என்பதை இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட இப்பெருந்திரளான மக்களாகிய உங்களைக் காணும்போது நான் உணர்கின்றேன். தமிழன் என்றுமே வீழ்ந்ததில்லை அவன் வீழ்ந்தாலும் மீண்டும் எழுவான் என்பதை இது காட்டுகின்றது.முள்ளிவாய்க்கால் என்பது எமது போராட்டத்தில் முடிந்த கதையல்ல. அது ஒரு அத்தியாயம். தமிழீழப் போராட்டம் என்பது எமது இலட்சியத்தை அடையும்வரை அதை எட்டும்வரை முடியப்போவதில்லை. போராட்டத்தின் தன்மைகள் மாறலாம் ஆனால் இலட்சியம் என்றுமே மாறப்போவதில்லை.எமது இலட்சியமான தமிழீழம் என்பதை நாம் அடைந்தே தீருவோம். எமது இனத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் சில உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் துணையுடன் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது. எமது மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளனர். ஆண்டாண்டு காலமாக இது நடைபெற்றது.இறுதியாக முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் இனப்படுகொலை நடந்துள்ளது. இன்றும் அது தொடர்ந்து வருகின்றது. எமது மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர் அங்கு இனப்படுகொலை இடம் பெற்றுள்ளது என்பதை சர்வதேசம் இன்று உணர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அதை ஏற்றுக் கொண்டுள்ளது.இதனால் எமது இனத்தின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக இவை தற்போது கண்களைத் திறந்துள்ளன. எனவே இனப்படுகொலை எமது மக்கள் மீது நடந்துள்ளதை அறிவித்து இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எமது மக்களுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர சர்வதேசமும் ஐக்கியநாடுகள் சபையும் முன்வர வேண்டும்.இனியும் எமது மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழவோ இலங்கையில் ஒருநாட்டுக்குள் வாழவோ முடியாது. எமது மக்களுக்கு வடகிழக்கு இணைந்த தனிநாடே தேவை. அதுவே தனியான தமிழீழம். நாம் இதைப்பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேசமெங்கும் போராடுகின்றோம். சர்வதேச சமூகத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றோம்.இதைப்பார்த்து இன்று சிறிலங்கா அரசாங்கம் விழிபிதுங்கி பயந்துபோயுள்ளது, இன்னும் எமது பலத்தைக் காட்ட வேண்டும். எனவே எமது மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். இன்றுபோல் எதிர்வரும் காலங்களில் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்.எமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் எமது விடுதரைலப் போராட்டத்தை புலம்பெயர் மக்களிடம் ஒப்படைக்கின்றேன். அதிலும் இளையோர் புலம்பெயர் நாடுகளில் போராட வேண்டுமென மிகவும் தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்திருந்தார். அதை எமது புலம் பெயர் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.அதிலும் இளையோர் இதை புரிந்து கொள்ள வேண்டும். எமது போராட்டம் முள்ளிவாய்காலுடன் முடிந்துவிட்டதாக நினைத்தால் அது தவறு. எமது போராட்டம் இன்று சர்வதேச பரப்புவரை நீண்டிருக்கின்றது. ஊலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று அணிதிரண்டுள்ளனர். எமது தமிழக உறவுகள் ஒன்று திரண்டுள்ளனர்.இன்று சர்வதேசம் எமது போராட்டத்தை உணர்ந்திருக்கின்றது. அதன் நியாயப்பாட்டைப் புரிந்திருக்கின்றது. எனவே எமது தலைவர் இப்போராட்டத்தை சர்வதேசத்திற்கு வியாபித்திருக்கின்றார். எனவே புலம் பெயர் மக்கள் தொடர்ந்து அகிம்சை ரீதியில் போராட வேண்டும். இதை அனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும்.புலம் பெயர் நாடுகளில் அகிம்சை ரீதியில் போராடுகின்றோம். நாம் நடத்தி வரும் அகிம்சைப்போராட்டத்தின் மூலம் எமது இனத்தின் மீது நடத்தப்பட்ட இனஅழிப்பை சான்றாகக் கொண்டு சர்வதேசம் எமக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரத் தவறுமானால் மீண்டும் அடுத்த கட்டத்திற்கு நாம் செல்லவேண்டிய நிலை தோன்றும்.அவ்வாறானதொரு நிலை தோன்றினால் அதற்கு சர்வதேசமே பொறுப்புக்கூற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும். எமது தேசியத் தலைவர் ஏற்கனவே கூறியிருந்தார். “நாம் ஆயுதத்தை விரும்பியவர்களுமல்ல, ஆயுதத்தை நேசித்தவர்களுமல்ல, ஆனால் அது எம்மீது திணிக்கப்பட்டுள்ளது” என்று. எனவே நாம் அதை விரும்பவில்லை.எனவேதான் அவ்வாறான நிலை இனியும் தோன்றாமல் இருப்பதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மிகவும் உணர்வு பூர்வமாக உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று பொங்கு தமிழ் நடைபெறுதற்கு முன்னதாக காலையில் இருந்தே பலத்த மழை பெய்து கொண்டிருந்தது,ஆனால் பொங்குதமிழ் ஆரம்பமாகியதும் மழை ஒய்ந்து மறைந்திருந்த சூரியன் மீண்டும் தோன்றி ஒழியைத் தந்தான். அதுபோன்றே திடிரென எமது சூரியத்தேவனும் ஒருநாள் தோன்றுவான் அதை மக்கள் கண்டுகாணுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதுவரை நாம் ஓயக்கூடாது. எமது மக்களின் விடுதலைக்கான எமது கடமையைத் தொடர்ந்து செய்வோம்.இது ஒவ்வொருவரினதும் கடமையாகும். என்று தெரிவித்த nஐயானந்தமூர்த்தி எமது புலம் பெயர் மக்கள் ஒற்றுமையுடனும் பலத்துடன் இருக்க வேண்டும். அதுவே எமது காலத்தின் தேவையாகும். இன்றைய நிலையில் எமது பலத்தையும் ஒற்றுமையையும் குலைக்கும் வசையில் சில சக்திகளின் பின்னணியில் சதித்திட்டங்கள் நடக்கின்றன.இதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட அனைத்துலக அமைப்பு தொடர்ந்து இயங்குகின்றது. அதாவது முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னர் எவ்வாறான கட்டமைப்பு இருந்ததோ அதே கட்டமைப்பே இன்றும் உள்ளன.இதைவிட வேறு எக்குழுக்களுக்கும் மக்கள் ஆதரவை வழங்கத் தேவையில்லை. எனவே இதில் உறுதியாக இருந்து எமது இலட்சியத்தை வென்றெடுப்போம் என்றும் தனது சிறப்புரையில் தெரிவித்தார்.
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில் திரண்டது.பல்வேறு நாடுகளில் இருந்து பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டு உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தார்கள்.ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பித்த பேரணி ஐ.நா சபை முன்றல்வரை சென்றது. ஐ.நா சபை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நிகழ்வுகள் நடைபெற்றது.3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது. கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகள் என்பன அடுத்ததாக இடம்பெற்றன. சிறீலங்கா இறுதி யுத்தத்தை நிறுத்தக்கோரி, ஐ.நா முன்றலில் தன்னை தீயுடன் ஆகுதியாக்கிக்கொண்ட ஈகை பேரொளி முருகதாசன் உட்பட, தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தோரின் ஈகைச்சுடரொளி ஏற்றல் வைபவம் அடுத்து இடம்பெற்றது.




















அங்கே வலியுறுத்தப்பட்ட விடையங்களும் நிகழ்வுகளும் பின்வருமாறு...

1. தமிழரின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் ஒரு தனிநாட்டை இலங்கைத் தீவிற்குள் அமைப்பதற்கான வெகுசன வாக்கெடுப்பை ஐ.நாவின் கண்காணிப்பில் நடாத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

2. தற்காலிக முகாம்களில் உள்ள மக்களையும், சிறையில் உள்ள போராளிகளையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், நிபந்தனையின்றி சொந்த இடங்களில் உரிய அடிப்படை வசதிகளுடன் அவர்கள் குடியமர்த்த வேண்டும்.

3. தமிழரின் தாயகப் பிரதேசங்களில் இருந்து சிறீலங்கா படையினர் வெளியேற்றப்படுவதுடன், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

4. சனல்- 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய �சிறீலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தையும், மேலதிகமாகக் கிடைக்கப்பெற்ற ஆவணங்களையும், மற்றும் நேரடிச் சாட்சிகளையும் போர்க்குற்ற சாட்சியங்களாகக் கொண்டு, சிறீலங்கா அரசாங்கத்தினை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த சகல நாடுகளும் ஆலோசனை வழங்க வேண்டும்.

5. முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையைக் குறைத்து அவர்களின் கருணை மனுவை இந்திய அரச அதிபர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

6. சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளைப் புறந்தள்ளும் சிறீலங்கா அரசாங்கத்துடனான நட்புறவை அனைத்துலகமும் துண்டிக்க வேண்டும்.

7. மேற்க்கூறப்பட்ட கோரிக்கைள் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை புலம்பெயர் நாடுகளில் ஏதிலித் தஞ்சம் கோரியவர்களை திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும்.







ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட பொங்குதமிழ் உரிமைமுழக்கப் பேரணியில் பல்லாயிரக்கணக்கிலான தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.காலத்தின் தேவை இது கலங்கிக் கிடக்கும் தமிழர் அல்ல நாம் கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர்... என விடுக்கப்பட்ட ஒற்றை அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜெனீவா வீதிகளில் அணிதிரண்ட தமிழர் பெரும்படை கண்டு சிங்களம் சித்தம் கலங்கிப் போயுள்ளது.முள்ளிவாய்க்காலில் எல்லாமும் முடிந்துவிட்டதாக எதிரிகளும் துரோகிகளும் கொட்டொலி எழுப்பி கொண்டாடிய போது அழுது புரண்டெழும்பிய தமிழர்கள் அல்ல நாங்கள் என்று பலதடவை கடந்த 27மாதங்களில் நிரூபித்தாகிவிட்டது.இருந்தும் எதிர்காலமே சூன்யமாகிப் போய்விட்டதாக இன்னும் சில தமிழர் கூட்டம் முடங்கிக் கிடக்கின்ற இன்றைய நிலையில் கரிகாலன் காலத்து மறவர் படையென முரசு கொட்டி ஜெனீவா முன்றலில் திரண்ட தமிழர்படை சிங்களத்தை மட்டுமல்ல முடங்கிக் கிடந்த தமிழர் கூட்டத்தையும் சிந்திக்கவைத்துள்ளது.சிறிலங்கா மீது அனைத்துலக இராசதந்திர பொருளியல் நெருக்கடிகள் அதிகரித்துவரும் இன்றைய சூழலில் தமிழர்கள் ஒன்று கூடி உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் செய்திருப்பது சர்வதேசத்தை இறுத்தித் தீர்வு நோக்கி நிச்சயமாக நகர்த்தும் என்பது உறுதி.

அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க இராஜாங்க திணைக்கத்துக்கு இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் இழப்புகள் கூடிக்கொண்டு சென்றதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.போரின் போது போர் வலயத்துக்குள்ளும் வெளியிலும் நாள் ஒன்றுக்கு 63 பேர் கொல்லப்பட்டதாக இந்த தகவல் பரிமாற்றம் கூறுகிறது.2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதியன்று, ஐக்கிய நாடுகளின் தகவல்படி, ஜனவரி 20 முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை 4164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்காவுக்கு அறிவித்துள்ளார்.சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏப்ரல் 7 ஆம் திகதி இலங்கையின் படையினர் முல்லைத்தீவின் 17 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவான கரையோரப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கியிருந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள் ஒன்றுக்கு 33 பொதுமக்கள் போரினால் கொல்லப்பட்டனர்.அது பெப்ரவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் நாளொன்றுக்கு 63 ஆக உயர்ந்தது.2009 ஆம் ஆண்டு ஜனவரியில் நாள் ஒன்றுக்கு 184 பொதுமக்கள் வரை காயமடைந்தனர்.பெப்ரவரி மாதக்காலப் பகுதியில் அது 145 ஆகவும் மார்ச்சில் 115 ஆகவும் இருந்தது.இலங்கை அரசாங்கத்தினால், முல்லைத்தீவில் இரண்டாவது பாதுகாப்பு வலயம் பிரகடனப்படு;த்தப்பட்ட பெப்ரவரி 12 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் அங்கு 2452 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 5000 பேர் காயமடைந்தனர்.ஐக்கிய நாடுகளின் தகவல்படி பொதுமக்களின் இலக்குகள் மீது இலங்கைப் படையினர் நாளாந்தம்; எறிகனை தாக்குதல்களை நடத்தி வந்தனர்.அத்துடன் விமானக்குண்டு வீச்சுகளும் நடத்தப்பட்டன.ஏ 35 வீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் மாத்திரம், 860 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 3339 பேர் காயமடைந்தனர்.பலியானவர்களில் 23 சிறுவர்கள் உள்ளடங்குவர். 345 சிறுவர்கள் காயமடைந்தனர். கத்தோலிக்க தேவாலயத்தினால் சிறுவர்கள் பலாத்காரமாக படைகளில் சேர்க்கப்படுவதை தடுக்க முடியாமல் போய்விட்டதாகவும் விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.மன்னார் ஆயரின் தகவல்படி, பாதுகாப்பு வலயத்தில் சுமார் 400 சிறுவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் பிடிக்கப்பட்டு சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர் மறுநாள் காலையில் குறித்த குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களுடன் அப் பகுதியில் இருந்த வாழைத் தோட்டம் ஒன்றிலிருந்து  மீட்கப்பட்டு அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் ஈவினை கிழக்கைச் சேர்ந்த, தர்மலிங்கம் ஜெயந்திரன் என்ற 32 வயது குடும்பஸ்தரே மேற்படி வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு வீடொன்றில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் சிலரால் குடும்பஸ்தர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டார்.இவரது சடலம் தற்போது யாழ். போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழ் இனத்திற்கு ஆரோக்கியமான அரசியல் தலைமை கிடைக்கவில்லை என்பது மட்டுமே பெரும் குறைபாடு என்று யாரும் நினைத்து விடக் கூடாது. மாறாக ஈழத் தமிழ் இனத்திற்கு தியாக உணர்வு கொண்ட புத்திஜீவிகளும் கிடைக்க வில்லை என்பதே நிஜம். இதைக் கூறும்போது அர்ப்பணிப்போடு செயற்பட்ட சில புத்திஜீவிகள் மனவருத்தம் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாயினும் உண்மை நிலை, எங்களின் புத்திஜீவிகளும் சுயநலம் மிக்கவர்களாக இருந்தார்கள் - இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
உலக வரலாற்றை எடுத்து நோக்கும்போது இளைஞர்களை நோக்கி சோக்ரட்டீஸ் விடுத்த தர்க்க ரீதியான அழைப்பு முதல், இந்தியாவில் மிக அண்மையில் உண்ணாவிரதமிருந்த அன்னா ஹசாரே வரை புத்திஜீவிகளே தத்தம் நாடுகளின் அரசியல், நீதி, நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றை வளப்படுத்தியும், ஒழுங்கு படுத்தியும் செம்மைப்படுத்தியும் உள்ளனர் என்பதை கண்டறிய முடியும். ஆனால் எங்கள் மண்ணில் மட்டும் புத்திஜீவி என்பதற்கு வேறுவிதமான வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிரச்சினை இல்லாமல் பயபக்தியுடன் வாழ்ந்து முடிப்பது மட்டுமே ஒரு சிறந்த புத்திஜீவிக்கு அழகு என்று கருதப்படுகின்றது.இதன் காரணமாக எங்கள் இனம் இத் துணை உயிர்த் தியாகங்களைச் செய்தும் விடிவு பெற முடியாத இனமாகத் தவிக்கின்றது. இப்போது கூட தமிழ் மக்கள் தங்களின் உரிமை விடயத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய முடியாதவர்களாக இருக்கின்றனர். எங்கள் பிரச்சினைக்கு எது தீர்வு என்பதை உணரமுடியாத தமிழ் அரசியல் தலைமைகளின் பரிதாப நிலையை நினைக்க இதயம் சுக்கு நூறாகிறது. இவ்வாறு எக்காலத்திலும் இல்லாத மிகக் குழப்பமான சூழ்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் களம் இருக்கும்போது, தமிழ் அரசியல் தலைமைகளை அழைத்து இப்படித்தான் செயற்படுங்கள் என்று சொல்வதற்கு எங்களிடம் புத்திஜீவிகள் இல்லையா? அல்லது அறிவிலார்க்கு உரைப்பவர் அவரிலும் பேதை என்ற பழமொழிக்கு அமைவாகப் பேசாமல் இருக்கிறார்களா? எதுவுமே புரியாமல் உள்ளது.எதுவாயினும் அன்பு மிகுந்த தமிழ்ப் புத்தி ஜீவிகளே! உங்களுக்குள் ஒன்றுபட்டு எங்கள் அரசியல் தலைமைகளை வழிப்படுத்துங்கள். இலங்கை அரசின் போர் வெற்றியை ஆட்சியாளர்களின் திறன் என்பதாக மட்டும் பார்க்காதீர்கள். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய தென்பகுதி புத்திஜீவிகளின் வியூகங்கள், திட்ட முன்னெடுப்புகள், இராஜதந்திரோபாயங்கள் என்பனவற்றின் வலிமையை உணருங்கள். இன்னும் உறக்கம் வேண்டாம். எங்களுக்கு தரவருகிறது சர்வதேசம்.அதை வேண்டத் தெரிந்தால் போதும். உதவுங்கள். இது எல்லாவற்றையும் போரில் பறிகொடுத்த தமிழ் இனத்தின் மன்றாட்டமான கோரிக்கை.
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரிடையே சுயநிர்ணயம் பற்றிய தளம்பல் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் பேச வேண்டிய இடங்களில் பேசாமல் இருந்து விடுகின்றார்கள்.நாம் எதை எடுத்துக் கொண்டாலும் எமக்கு பின்னால் எமக்காக ஆயிரக்கணக்கான தியாகிகள் உயிர் கொடுத்துள்ளார்கள். இலட்சக்கணக்கான மக்கள் இரத்தம் சிந்தி உயிர் துறந்து போயுள்ளார்கள் என்பதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது. இன்று தமிழ் மக்களின் தலைவர்கள் என்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு சுயநிர்ணய உரிமை பற்றி தளம்பல்கள் இருக்கின்றது. சுயநிர்ணய உரிமை பற்றி பேசவேண்டிய இடங்களில் சிலர் மெளனம் காக்கின்றார்கள்.சுயநிர்ணய உரிமை, தாயகம், தேசியம் என்ற கோட்பாடுகளுக்காக மக்களால் தெரிவு செய்யப் பட்டவர்கள் அவர்கள். ஆனால் பேச்சுவார்த்தை மேடைகளில் தேசிய அபிலாசைகளை மனம் திறந்து பேச சில தலைவர்கள் வெட்கப்படுகின்றார்கள். மதில்மேல் பூனையாக இருக்கின்றார்கள். வடகிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணய உரிமை, தேசியம் என்ற விஞ்ஞாபனங்களுக்காக வாக்களித்த தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நழுவுகின்றவர்களை மக்கள் நிச்சயமாக தண்டிப்பார்கள்.நாம் சுயநிர்ணய கோட்பாடுகளில் இருந்து என்றும் மாறப் போவதில்லை. எமது தேசிய அபிலாசைகளுக்கான பயணம் தொடரும். வட்டுக்கோட்டை தீர்மானம் ஜனநாயக வழி உரிமைகளுக்கான அடி நாதமாக விளங்குகின்றது. எனவே பல்வேறு தலைமுறைகள் தலைமைகள் ஊடாக வந்தவர்களை ஒரே மேடையில் வைத்து தமிழ் மக்கள் பார்ப்பது சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையிலேயே என்பதை யாரும் மறக்கக்கூடாது. மக்கள் தந்திருக்கின்ற ஆணையின்படி வெளிப்படையான அரசியல் பயணம் நடக்க வேண்டும் என்றும் மனம் திறந்து பேசினார் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முள்ளிக்குளத்தைத் தவிர ஏனைய அனைத்துக் கிராமங்களிலும் மீள்குடியமர்வு நடைபெற்றுள்ளது. இதனால் இந்தக் கிராம மக்கள் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் வாழ்ந்துவருகின்றனர். இவ்வாறு மன்னார் அரச அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார். 
இந்த நிலையில் இவர்கள் தம்மை மீண்டும் தமது சொந்த இடமான முள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியமர்த்துமாறு கோரும் மனுவொன்றை ஜனாதிபதியிடம் வழங்கும் பொருட்டு என்னிடம் சமர்ப்பித்துள்ளனர். 
இதேவேளை அக்கிராமத்தைச் சேர்ந்த சில மக்களினால் காயாக்குளி என்ற கிராமம் அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த காயாக்குளிக் கிராமத்தில் குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன்தைத்துள்ளோம். 
அனுமதி கிடைத்தவுடன் காயக்குளி என்ற கிராமத்தில் விரும்பி மீளவும் குடியேறவுள்ள குடும்பங்களை மீள்குயமர்வு செய்யவுள்ளோம் என அரசஅதிபர் என். வேதநாயகன் தெரிவித்தார். 
குறித்த காயாக்குளி என்ற கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்தால் தங்களால் விவசாயம் செய்ய முடியும் என ஒரு பகுதி மக்கள் தெரிவிப்பதாகவும் ஏனையோர் முள்ளிக்குளம் கிராமத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் மீள் குடியமர்த்துமாறு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தரர்.   

நெதர்லாந்து நீதிமன்றத்தில் கொலைக்களம் வீடியோவைப்பார்த்து அதிர்ந்த வழக்கறிஞர்கள் !




டென்காக் நகரில் நடந்துகொண்டிருக்கும் இவ் வழக்கின் 2ம் நாள் அமர்வில் ஐரோப்பிய நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையில் சிறுவர் படை சேர்ப்பு கரும்புலிகள் தாக்குதல் சர்வதேச ரீதியில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டார்களா ? இல்லையா ? என்ற விடயங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன.கடந்த 16 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்ட 5 தமிழ் மனிதநேயச் செயற்பாட்டாளர்களின் வழக்கு விசாரணை கடந்த 15ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இக்காட்சியினை அங்கு வருகை தந்த வழக்கறிஞர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் பார்வையிட்டனர்.இந்த அமர்வில் ஐரோப்பிய நீதிமன்றில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி வழககுத் தாக்கல் செய்திருக்கும் பிரபல வழக்கறிஞர் திரு. விக்ரர் கொப்பே அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீதிபதியின் அனுமதியுடன் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இலங்கையின் கொலைக்களம் ஆவணக்காட்சி திரையிடப்பட்டது.இக்காட்சியினைப் பார்த்து அதிர்ந்து போன பல வழக்கறிஞர்கள் இவ் வழக்கினை இன்று மேற்கொண்டு நடத்த வேண்டாம் என்றும் இவ்வழக்கினை அடுத்த வாரம் நடத்த வேண்டும் என்றும் இது எம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் கூறினர்.இதைக்கேட்ட நீதிபதியவர்கள் இன்று ஒத்திவைக்க முடியாது எனவும் ஆனால் போதிய அளவு இடைவேளை விடுவதாகவும் கூறி, உடனடியாகவே இடைவேளையை அறிவித்தார்.அதன் பின்னர் போதிய அளவு இடைவேளை பெற்று மீண்டும் வழக்கு தொடர்ந்து இடம் பெற்றன.
ஆயினும் வழமையான நேரத்திற்கு முன்பாகவே நீதிபதி அவர்களால் இன்றைய அமர்வு முடிவிற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதே பிரச்சினைக்குத் தீர்வு !




பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் மாலை இலங்கை மற்றும் காஷ்மீர் நிலைமைகள் தொடர்பாக சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதே இலங்கையில் பிரச்சினை தீர்வதற்கான ஒரே வழி என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகச் சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.விவாதத்தில் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இல்போட், வடக்கு தொகுதி உறுப்பினர் லீஸ்கொட், இலங்கையில் உள்ள தமிழருக்கு நாம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.தொழிலாளர் கட்சி உறுப்பினர் இயன் ஒஸ்ன், கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் ஜொனாதன் லோட், அன் கிபத்ஸ் உள்ளிட்ட பலரும், இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமைகளை வழங்குவதே இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்று கூறினர்.ந்த விவாதத்தில் பதிலளித்துப் பேசிய பிட்டிஷ் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், இலங்கையில் நடந்த போரின் போது இருதரப்பினரும் புரிந்த போர்க்குற்றங்கள் குறித்தும், மனித உமை மீறல்கள் குறித்தும் தாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளார் என்று தெவித்தார்.
தமிழீழத் தேசியத் தலைவரின் மாமியாரும், 
நாட்டுப்பற்றாளருமான திருமதி ஏரம்பு சின்னம்மா காலமானார்!



சரவணையைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார்.இவர் கடந்த 06-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன - ஊடகவியலாளர்கள் 





















பிரஸ்தாப ஊடகவியலாளர்கள் இருவரும் காணொளி மூலமாக தெளிவாக எடுத்துரைக்கின்ற விளக்கங்கள் பற்றி பாருங்கள்.ஜெனிவாவில் நாளை 19.09.2011  திங்கட்கிழமை புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்படவுள்ள பொங்கு தமிழ் போராட்டம் பற்றிய நோக்கம், தேவைகள் குறித்து ஊடகவியலாளர்களான கனகரவி அவர்களும், சண் தவராசா அவர்களும் விளக்குகின்றார்கள்.பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நாளைய போராட்டத்தில் பங்குகொள்வது அவசியமாகும்.ஐ.நா.சபை முன்றலில் முற்றுகையிடப் போகும் பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு அனைத்து ஜரோப்பிய தமிழ் மக்களையும் அணி அணியாக திரளுமாறு தமிழக தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.


Powered By: TNPF

பார்வை