அரசினால் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் கடந்த 22 வருடங் களுக்கு மேலாக இந்தப் பிரதேசங்கள் இராணுவத்தினரின் பாவனையிலேயே உள்ளன.23 கிராம சேவகர் பிரிவுகளி லும் 7 ஆயிரத்து 273 குடும்பங் களைச் சேர்ந்த 26ஆயிரத்து 281 பேர் மீளக்குடியமர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். இடம்பெயர்ந்து நீண்டகாலம் ஆகையால் விண்ணப்பித்தவர்களை விட அதிகமான தொகையினரே அந்தப் பிரதேசங்களில் முன்னர் இருந்திருக்க வேண் டும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. 23 கிராம சேவகர் பிரிவுகளில் தெல்லிப்பழை (ஜே/ 228), பழைய வீமன்காமம் வடக்கு (ஜே/236), பழைய வீமன்காமம் தெற்கு (ஜே/ 237), கட்டுவன் (ஜே/238), வறுத்தலைவிளான்(ஜே/ 241), குரும்பசிட்டி கிழக்கு (ஜே/243), வசாவிளான் மேற்கு(ஜே/ 245) ஆகிய 7 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் மக்கள் பகுதி பகுதியாக மீள் குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் முற்றாக குடியமர்வதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.கே.கே.எஸ் மேற்கு (ஜே/233), கே.கே.எஸ். மத்தி(ஜே/234), கே.கே.எஸ் தெற்கு(ஜே/235), தென்மயில் (ஜே/ 240), குரும்பசிட்டி (ஜே/ 242), மயிலிட்டி வடக்கு (ஜே/ 246), தையிட்டி கிழக்கு (ஜே/ 247), மயிலிட்டித்துறை தெற்கு(ஜே/248), தையிட்டி வடக்கு(ஜே/ 249), தையிட்டி தெற்கு(ஜே/250), மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251), பலாலி தெற்கு (ஜே/ 252), பலாலி கிழக்கு (ஜே/ 253), பலாலி வடக்கு (ஜே/ 254), பலாலி வடமேற்கு (ஜே/ 255), பலாலி மேற்கு (ஜே/ 256) ஆகிய 16 கிராம சேவை யாளர் பிரிவுகளிலும் இதுவரை மக்கள் மீளக் குடியமர அனுமதி வழங்கப்படவில்லை.

Powered By: TNPF

பார்வை