தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக 1948ஆம் ஆண்டிலிருந்து பேச்சுகள் நடத்தி வருகின்றனர்.ஆனால் அதிகாரத்தில் இருந்த அரசுகள் சிங்கள மக்கள் அதிகாரக் கையளிப்புத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறி பேச்சுக்களைத் தோல்வியடையச் செய்தன.தமிழர்களின் மொழி, கலாசார, சமூக மற்றும் சமய அடையாளங் களையும் பொருளாதார வாழ்வையும் அழித்தெடுக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாகத் தமிழர்களைச் சொந்தக் காணிகளில் மீள்குடியமர விடாது தடை செய்துள்ளது.இந்த நிலையில் தமிழ் மக்கள் தமது இனத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியுடையவர்கள் ஆவர்.இதனை அனைத்துலக சமூகம் உணர்ந்து கொள்வதன் மூலம்தான் அரசுடன் பேச்சுக்கள் மேற் கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered By: TNPF

பார்வை