அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கரவெட்டியைச் சேர்ந்த அரசியல் கைதியின் மனைவி திருமதி சுமத்திரா தேவதாசன் என்பவர் யாழ் மாவட்டமூடாக மகிந்தவுக்கு மனு ஒன்றை நேற்று யாழ் மாவட்டச் செயலகத்தில் கையளித்திருந்த வேளை அங்கு சமூகமளித்த கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தழிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே நல்லிணக்கம் சாத்தியமாகும். இவ்வாறு முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இந்தநாட்டில் யுத்தம் நிறைவடைந்து விட்டது, ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்றால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணாமல்போனோருக்கான தீர்வொன்று வழங்கப்படவேண்டும். இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுடைய மனங்களை வென்றெடுக்க அரசாங்கத்தினால் முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.காணாமல் போனோர் தினம் இன்று திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்னால் கூடிய காணாமல் போனோரின் உறவினர்கள் தமது உறவினர்களின் விடுதலையை வலியுறுத்தி மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இங்கு மேலும் அவர் கருத்துரைக்கையில், யுத்தம் முடிந்து விட்டது, நாட்டில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என்றெல்லாம் அரசு பிதற்றிக் கொள்கிறது. ஆனால் இன்று வரைக்கும் காணாமல்போனோரிற்க்கு, கைதுசெய்யப்பட்டோரிற்க்கு எந்தவிதமான தீர்வு கிடைக்கவில்லை.காரணம் அவர்கள் அனைவரும் தமிழர்களாக இருப்பது மட்டுமே, அரசு தமிழரை எந்த நிலையில் வைத்திருக்கின்றது என்பதை இந்த ஒரு விடயத்திலிருந்து நாம் நன்றாக அறிந்து கொள்ளமுடியும்.ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களை எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்த அரசாங்கம் இன்று தமிழர்களை மட்டும் இன்னும் அடைத்து வைத்து சித்திரவதைப்படுத்துகின்றது. இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவது கிடையாது.இந்நிலையில்தான் அண்மையில் டில்லியில் நடைபெற்ற தமிழ்கட்சிகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையில் 7முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்த காணாமல் போனோர் மற்றும் கைதிகளின் பிரச்சினை இடம்பெற்றிருக்கின்றது.இது ஒரு கட்சியினுடைய கருத்துக் கிடையாது. இது ஒரு இனத்தின் கருத்து, எதிர்பார்ப்பு என்றார். இதன்போது காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Powered By: TNPF

பார்வை