9:43 PM | Posted by
Tamil National Peoples Front
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளா் மகாநாடு (17-09-2011) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது.அம் மகாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கட்சியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி. பத்மினி சிதம்பரநாதன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவா்களில் ஒருவருமான ஆனந்தராஐா, கட்சியின் பொருளாளா் தங்கராஐசிங்கம், காண்டீபன், கஜேந்திரகுமார் (வவுனியா) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனா்.மகாநாட்டில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் நேற்றய தினம் (16.09.2011) அரசாங்கத்துடன் பேச்சுக்களுக்குச் சென்றமைக்கான காரணம் சா்வதேச நெருக்கடியில் இருந்து சிறீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே என குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளா் மகாநாட்டில் கூறப்பட்ட விடயங்கள் வருமாறு
சா்வதேச அழுத்தங்களில் இருந்து கூட்டமைப்பை காப்பாற்றவே அரசுடனான பேச்சுக்களுக்கு கூட்டமைப்பு சென்றது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச் சாட்டு ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது சிறீலங்கா அரசு மீது சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் நேற்றயதினம் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.சர்வதேச நெருக்கடியில் இருந்து சிறீலங்கா அரசைக் காப்பாற்ற துணைபோயுள்ள கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு 20 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்பிற்குட்பட்ட மாகாண சபையை ஏற்றுக் கொள்ளுவதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்துடனான பேச்சுக்களுக்கு கூட்டமைப்பு சென்றமையானது சிறீலங்கா அரசு மீது பிரயோகிக்கப்படும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவேயாகும். தேர்தல் காலத்தில் தேசியம் பேசி வாக்குகளைப் பெற்று பதவியை கைப்பற்றிய கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை முற்றாகக் கைவிட்டு 13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபையை ஏற்று அதற்கு அதிகாரங்களைப் பெறும் பேச்சுக்களிலேயே ஈடுபட்டுவருகின்றனர்.தாம் அதிகாரப் பரவலாக்கல் பற்றிப் பேசுகின்றோமா, அல்லது அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகின்றோமா என்று மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக அதாவது சுயநிர்ணய உரிமையை தாம் கைவிட்டுள்ளோம் என்பதனை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றவகையில் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு காண அரசு இணங்கியுள்ளதாக அரசுடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிடுவதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர்.ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில் அத்தகைய விசாரணை ஒன்றில் இருந்து சிறீலங்கா அரசை காப்பாற்ற முயலும் கூட்டமைப்பு கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டு வந்துள்ள சிறீலங்கா அரசாங்கத்தை காப்பாற்ற முயல்கின்றது.தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் 13 ஆம் திருத்தச் சட்டத்தையும், அதன் அடிப்படையிலான மாகாண சபையையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது. எதிர்காலத்தில் இடம் பெறும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடப் போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் செயற்படும் எந்தவொரு தரப்பும் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும், அச்சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபையையும் நிராகரிக்க வேண்டும்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
September
(31)
- உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மகாநாட்டை புறக்கணித்த ...
- வெலிக்கடை சிறையில் விலங்குடன் இருக்கும் சிறுநீரக ப...
- வட-கிழக்கு மாற்றுத் திறனாளிகள் புனர்வாழ்வுக்கு மூன...
- புத்திஜீவிகள் யார் என்று தெரியாத கூட்டமைப்பு முக்க...
- இலங்கைப்படையின் போற்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமை...
- இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நக...
- அன்பான எம் புலம்பெயர் தமிழீழ நெங்சங்களே, எம் உறவுக...
- எமது மக்களின் விடுதலைக்கு தமிழீழ இலட்சியத்திலிருந்...
- ஜெனீவாவில் திரண்டது தமிழர்படை! சித்தம் கலங்கியது ச...
- இறுதிக்கட்ட போரின்போது படையினரின் தாக்குதலால் பொது...
- யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில். கடந்த 17.09.20...
- இன்னும் துயிலுதியோ பள்ளி எழ மாட்டீரோ !
- தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தல...
- முள்ளிக்குளம் மக்களை வேறு இடத்தில் குடியேற்ற முயற்...
- நெதர்லாந்து நீதிமன்றத்தில் கொலைக்களம் வீடியோவைப்...
- தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றுக்கொடு...
- தமிழீழத் தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்ப...
- பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன - ஊ...
- 17-09-2011 அன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்ன...
- யூதர்களுக்கு டயஸ்போறா தமிழர்களுக்கு பொங்குதமிழ் – ...
- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளா் மகாநாடு...
- தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் விடு...
- யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப...
- தழிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட...
- 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500...
- கிரிஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப...
- சுயநிர்ணய உரிமை என்பது கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம...
- வலிவடக்குப் பகுதியில் 40 சதவீதமான நிலப்பரப்பு இன்ன...
- புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது தயாரிக்க...
- வடக்குக் கிழக்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும்...
- தனித்துவமான தேசம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலேயே ...
-
▼
September
(31)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?
