இன்று காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகிய அமதிப் போராட்ட நிகழ்வு சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்றது. பல்கலைக்கழக அனைத்து பீட தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்களும் எதிர்ப்புப் பதாதைகளைத் தாங்கியவாறு அமைதியான முறையில் இவ் ஒன்று கூடலில் பங்குபற்றினர்.போராட்டத்தில் பங்குபற்றிய மாணவர்கள் தமது வாய்களைக் கறுப்புத் துணியினால் மூடிக்கட்டியிருந்தனர்.நிகழ்வில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் பலர் உரையாற்றினர். கிரீஸ் மனித செயற்பாட்டைக் கண்டிக்கும் வகையிலான பதாதைகளைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர். அவற்றில் “கிரீஸ் வரும் முன்னே ! பொலீஸ் வரும் பின்னே!!” , “கிரிமினலைப் பிடிப்பார் மக்களை் – அதை விடுவார் பொலீஸ்”, மனித உரிமை அமைப்புக்களே ! சமூகப் பிரதிநிதிகளே !! உங்கள் மனங்கள் என்ன மரணித்து விட்டனவா?”, அரசே! யார் இந்த மர்ம மனிதர்கள் ? தமிழர்கள் என்ன விளையாட்டுப் பொம்மைகளா? “, பெண்ணியம் மீது கண்ணியமற்ற முறையில் பண்பாட்டைச் சீரழிக்காதே!”, இறுதி எச்சரிக்கை ! தமிழ் பேசும் பெண்களின் புனிதத்தைக் கெடுக்காதே!” போன்ற வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தன.

Powered By: TNPF

பார்வை