போரின் இறுதிக் கட்டத்தில் அரசு அறிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது நடத்தப்பட்ட பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களால் மக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த தெளிவான ஒளிப்பட ஆதாரங்களை செய்மதி மூலம் ஐ.நா.  பெற்றிருந்தது என்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க ஆவணக் குறிப்பில் இருந்து தெரிய வந்திருக்கிறது.2009 ஏப்ரல் 3ஆம் திகதி கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் குறிப்பில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.ஐ.நா. வசம் இருக்கும் செய்மதிப் படங்கள், பாதுகாப்பு வலயத்தின் மீது நடத்தப்பட்ட எறிகணை மற்றும், விமானத் தாக்குதல்களால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுவதாக அவர் தனது குறிப்பில் கூறியுள்ளார். 2009 மார்ச் 6, 15, 23 மற்றும் 29ஆம் திகதிகளில் இந்த செய்மதிப் படங்கள் எடுக் கப்பட்டிருந்தன.  ஐ.நா திரட்டிய இந்தப் படங்களின் மூலம், பாதுகாப்பு வலயத்தில் பீரங்கி, விமானத் தாக்குதல்களால் 53 பிரதான கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதையும், 5 கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதையும் தான் அவதானித்தார் என்றும் பிளேக் தனது தகவல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.இதில் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் கணக்கிடப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.அத்துடன் ஜனவரி 20 தொடக்கம் மார்ச் 31 வரையான காலப் பகுதியில் கொல்லப்பட்டவர்களில் 78 வீதமானவர்கள் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே இறந்தார்கள் என்று ஐ.நாவின் புள்ளி விவரங்கள் கூறுவதாகவும் பிளேக் குறிப் பிட்டுள்ளார்.இந்தச் செய்மதிப் படங்களை இலங்கை அரசிடம் காண்பிக்குமாறு ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நீல் புனேயிடம் பரிந்துரைத்தார் எனவும் பிளேக் தெரிவித் துள்ளார். 

Powered By: TNPF

பார்வை