இதுவரை காலமும் வாக்களரக தம்மைப் பதிவு செய்து கொள்ளாதவர்கள் எதிர்வரும் மாதம் 30ஆம் திகதிவரை தமது வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள யாழ்உதவித் தேர்தல்கள் ஆணையாளர்தெரிவித்துள்ளார்.2011 ஆம் ஆண்டுவாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதாக 'எ' நிரலில் குறிப்பிடப்பட்டவர்கள் தமதுமுறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் வாக்காளராக தம்மைப் பதியத் தவறியவர்களும், நாட்டில் ஏற்பட்ட பல்பேறுபட்டஅசாதாரன சூழ்நிலை காரணமாக வேறு மாவட்டங்களிற்கு இடம் பெயர்ந்தவர்கள், அல்லதுவெளிநாட்டில் வசிப்பவர்பள் தமது வாக்காளர் பதிவுகளை எதிர்வரும் மாதம் 30 ஆம் திகதிவரையும்மேற்கொள்ள முடியும். இதேவேளை 2011 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்குவதாக'v' நிரலில் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் அடுத்த மாதம் 30 ஆம் திகதிவரை தமது மேன்முறையீடுகளை மேற்கொள்ளலாம்.மேற்படிச் சேவைகளை மக்கள் தமது கிராம சேவகர்கள் மூலமோ அல்லது நேரடியாக யாழ் உதவித்தேர்தல்கள் பணியகத்திலோ மேற்கொள்ள முடியம். இதுமட்டுமல்லாமல் கபே அமைப்பினால் வினையோகிக்கப்படும் வாக்காளர் பதிவுப் படிவங்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.நடைபெற்றுக் கொண்டிருக்கும் பதிவுகளின் 'v' நிரல் அடுத்த மாதம் 2 ஆம் திகதிவெளியிடப்படும்.சொந்த இடங்களில் உள்ள அவர்களது உறவினர்கள் அவர்களது கடவுச் சீட்டு இலக்கத்துடன் பதிவுகளை மேற்கொள்ளலாம். மக்களுக்கு வாக்காளர் பதிவு தொடர்பில் போதிய விளக்கம் வழங்கப்படாததாலேயே வாக்களர் பதிவில் தாமதம் காட்டுகின்றனர். மக்களுக்கான தெளிவான விளக்கத்தினைஒவ்வெரு கிராம சேவகர்களும் கட்டாயம் வளங்க வேண்டும்.இதுமட்டுமல்லாமல் உள்ளூராச்சி அதிகார சபைகளுக்குக் கீழ் தெரிவுசெய்யப்பட்ட புதியபிரதேச சபை உறுப்பினர்கள் சகலரும் எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தமதுசொத்துக்கள் தொடர்பான விபரங்களை அதற்குரிய படிவங்களின் மூலம் யாழ் உதவித் தேர்தல்கள் பணியகத்தினரிடம் கையளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Powered By: TNPF

பார்வை