வன்னியில் ஆரம்பித்துள்ள பருவமழையால் மீள்குடியேற்றப்பட்டு மரங்களின் கிழும் கூடாரங்களிலும் வசித்து வந்த 16 ஆயிரம் குடும்பங்கள் தொடங்கியுள்ள பருவ மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநெச்சியில் அதிகமானவர்களுக்கு இன்னமும் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்நிலையில கடந்த இருநாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பருவ மழை ஆரம்பித்திருக்கின்றது. இதனால் வீடுகள் இல்லாமல்கூடாரங்களுக்குள் வாழும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர். இதேபோன்று மீள்குடியேற்றத்தின்பூர்த்தியின்மையாலும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இதே போன்று சிறார்கள் மற்றும் வயதானவர்கள் உள்ள குடும்பங்கள் தற்போது உள்ளதை விடவும்எதிர்காலத்தில் தொடர்ச்சியான மழை பெய்யும் போது அதிகளவான சிரமங்களை எதிர்நோக்கநேரிடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்விடையம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிஉடனடியாக தற்காலிக மாற்று நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டமக்களில்பெருமளவானவர்களுக்கு வழங்கப்பட்ட அரைநிரந்நதர வீடுகளிலும் மற்றும் தற்காலிக வீடுகளிலும் வாழ்ந்துவரும் நிலையில்தற்போது வன்னியில் தொடங்கியுள்ள பருவமழையினை எதிர்கொள்ள முடியாத நிலையில் மக்கள் வாழ்இடங்கள்காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Powered By: TNPF

பார்வை