யாழ்ப்பாணம் முகாம்மாலை எழுதுமட்டுவாள் மற்றம் பளைப்பகுதிகளில் படையினரின் காவலரண்கள் வெடிபொருட்கள் அகற்றப்படாமல் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள்.முழுமையாக படைக்காவலரன்கள் அகற்றப்படாமல் அரசியல் நாடகம் அரங்கேற்றுவதற்காக எம்மைபலிக்கடாவாக மாற்றி அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அரச அதிகாரிகளால் மீள்குடியேற்றம் செயயப் பட்டுள்ளோம் என்று முகமாலை, எழுதுமட்டுவாள் மற்றும் பளைப் பகுதிகளில் மீள்குடியேறிய மக்கள்கவலை தெரிவித்துள்ளனர்.படைப்பதுங்கு குழிகளும், வெடிக்காத வெடிபொருட்களும், கூரைகள் இல்லாத வீடுகளுமாக எந்தவிதமான வசதிகளும் செய்துதரப்படாமல் நாம் இங்கு அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம். விசபூச்சிகளின் தொல்லை படையினரால் மேற்கொள்ளப்படும் எமது உடமைகள் திருட்டு என்பவற்றோடு செல்லிலடங்காத துயரங்களை அனுபவித்து வருகின்றோம். வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது, மற்றும் வீடுகளின் கதவு, ஜன்னல், கூரை என்பன அற்ற நிலையிலும் குடிநீர் பெற்றுக்கொள்ளும் கிணறுகள் கூட படையினரின் பதுங்குகுழிகளும் பாதுகாப்பு அரண்களும்மாக காணப்படும் எமது வாழ்இடத்தில் அரசியல் நலனிற்காக எம்மை மீள்குடியேற்றியுள்ளதாக மீள்குடியேறியுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.

Powered By: TNPF

பார்வை