8:28 AM | Posted by
Tamil National Peoples Front
யாழ்பல்கலைக்கழக மாணவதலைவன் தவபாலன் சிறீலங்காப்படையினரின் ஒட்டுக்குளுவினரால் தாக்கப்பட்டமைக்கு ஜக்கியராச்சி தமிழ்இளையோர் அமைப்பினர் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள்.
இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்!
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவ மன்றத் தலைவர் திரு தவபாலன் மீது 16.10.2011 அன்று பிற்பகல் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் பலமான தாக்குதல் நடாத்தி இருக்கின்றார்கள். சிறீலங்காப்படையினரும் அதனுடன் இயங்கும் ஒட்டுண்ணிகளும் என சந்தேகிக்கப்படும் இவர்கள் திரு தவபாலனை பின் தொடர்ந்து சென்று கூர்மையான இரும்புக் கம்பிகளால் யாழ்ப்பாணம் கந்தர்மடம் அருகே கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றார்கள்.திரு தவபாலன் அவர்கள் கிரிஸ் மனித அச்சுறுத்தலுக்கு எதிராக மாணவர்களை திரட்டி ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை சமீபத்தில் நடத்தி வந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வன்னி போர் முடிவுக்குப் பின்னர் கல்விச்சமூக நபர்கள் இரும்பு கம்பிகளால் தாக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இச் சம்பவங்களை பார்க்கும்போது இவையாவுமே மக்களின் குரல்வளையையும் மாணவர்களின் எழுச்சியையும் நசுக்கும் வகையில் நடாத்தப்படும் திட்டமிட்ட நாசகாரச்சதி என்பது புலப்படுகிறது. மாணவன் தவபாலன் மீது நடத்தப்பட தாக்குதலானது ஒட்டுமொத்த தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. மாணவர்களை தொடர்ந்து சீண்டி வருவதும் அவர்களின் குரல்வளையை திட்டமிட்டே நசுக்க நினைப்பதும் அன்று தொட்டு இன்று வரை சிறீலங்கா அரசு கையாளும் ஒரு பிரபல யுத்தி. சிறீலங்கா அரசின் சூழ்ச்சிகளை உலகிற்கு வெளிக்காட்டுவற்கும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை எடுத்துரைப்பதற்கும் தமிழ் மாணவர்கள் என்றுமே தயங்கியதில்லை என்பதற்கு கிரிஸ் மனித அச்சுறுத்தலுக்கு எதிராக நடந்த ஆர்பாட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நியாயத்திற்காக அற வழியில் போராட்டங்களை நடத்தும் தமிழ் மாணவர்களின் குரல் இவ்வாறு திட்டமிட்டு நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. முள்ளிவாய்க்கள் இனப்படுகொலையை பொறுக்க முடியாமலும் தமது சகோதர சகோதரிகளின் இழப்பை தாங்க முடியாமல் பல்கலைக்கழக சமூகம் மே 2009 தங்களது கல்வியை ஒரு வாரத்திற்கு நிறுத்தி இருந்தார்கள்இ அதே ஆண்டு நவம்பர் மாதம் நான்கு கலைப்பீட மாணவர்களை சிறீலங்காபடையின் உளவுப் பிரிவினரால் கூட்டி செல்லப்பட்டு உயிர் அச்சுறுத்தல் விடப்பட்டது பின்பு ஜனவரி 2010 மீண்டும் தமிழ் மாணவர்கள் உட்பட தமிழ் அமைச்சர்களுமாக 13 பேருக்கு சிறீலங்காபடையினராலும் அதன் ஒட்டுண்ணிகளாலும் உயிர் அச்சுறுத்தல் மே 2011 32 சிங்கள மாணவர்களை புதிதாக இணைத்து முள்ளிவாய்க்கள் நினைவு நாளை குழப்புமுகமாக புத்தரின் பிறந்த தினத்தை கொண்டாடியது கோத்தபாயவின் நேரடி உத்தரவில் மாணவர்களை கண்காணிக்கும் பிரிவு,வன்னியில் இருந்து வந்த மாணவர்களுக்கு வழங்க நினைத்த உதவிகளை ஒட்டுண்ணிகள் மூலம் தடுத்தல் ரோபர்ட் ஒ பிளேக் கல்வி சமூகத்தை சந்திக்கும் பொது இடையூறு விளைவித்தல் என பல சொல்லென்னா துயரங்களை சந்தித்து வருகிறது எமது இளைய சமுதாயம். கல்விபீடமனது பெரும் கெடுபிடிகளுக்கு நடுவே வன்னிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மே மாதம் 18ம் திகதி 2010ம் ஆண்டு நினைவஞ்சலியை நடத்தியிருந்ததுமாணவர் எழுச்சி நாள் அன்று பொன் சிவகுமாரன் அண்ணாவை நினைவில் நிறுத்தி அஞ்சலி செய்தார்கள். தொடர்ந்து இருந்துவரும் அழுத்தங்களுக்கு நடுவிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது திட்டவட்டமான கருத்துக்களை கூட்டங்களிலும்மாநாடுகளிலும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் வலியுறுத்தி வருகின்றார்கள்.இலங்கை அரசும் அதன் ஊதுகுழல்களும் பல்கலைக்கழக நிர்வாக விவாகரங்கள் மீது கட்டுப்பாடு செலுத்துவது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் எமது மாணவ சமுதாயம்பொதுமக்கள் மற்றும் இளையோர்கள் மீதும் நடக்கும் தாக்குதல்களை அனைத்துலகம் கண்டிப்பதோடு நில்லாமல் அவர்களுடைய பாதுக்காப்பையும் உறுதி செய்யவேண்டும். அதே நேரத்தில் புலத்தில் இருக்கும் இளையோர்கள் சார்பில் தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய நாம் இத் தாக்குதலை வன்மையாக கண்டிக்குறோம் அத்தோடு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். எந்த தடைகளும் எம்மை பணிய வைப்பதில்லைஇ புதிய விதிகள் எழுதி எமது தாயக விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம்.
தமிழ் இளையோர் அமைப்பு
ஐக்கிய ராச்சியம்
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
November
(56)
- தமிழரசுக் கட்சியினால் புனையப்பட்ட கூட்டமைப்பின் கட...
- போர்க்குற்றத்தோடு இனப்படுகொலையையும் அம்பலப்படுத்த ...
- சுயநிர்ணயமா? அதிகாரப்பகிர்வா? தமிழ் மக்கள் எதனைத் ...
- இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு சாத்தியமா? (ஆய்...
- இன்றைய சர்வதேச அரசியல் சூழ் நிலையில் தமிழ் மக்களின...
- வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு ஜனாதிபதிகளே காரணம் !
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித ...
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் மைல்கல் கடந்த தாயகம்...
- திருமுறிகண்டியில் மீள்குடியேறியுள்ள மக்கள் உரிய ஆவ...
- வன்னியில் தொடரும் மழையினால் மீள்குடியேறியுள்ள மக்க...
- படைகாவலரண்கள் அகற்றப்பாடாமல் முகாம்மாலையில் மக்கள்...
- கிளி கரைச்சி பிரதேசத்தில் காணமல் போனர்கள் 2841 பேர் !
- செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சி...
- வடக்கில் தென்னிலங்கை கடல்தொழிலாளர்களின் நடவடிக்கை ...
- திருமுறிகண்டி பிரதேச மக்களை காட்டிற்குள் குடியேற்ற...
- தமிழர் தாயக பூமி வடக்கு கிழக்கு இல்லையாம்-தமிழீழ ம...
- முல்லைத்தீவில் தொடரும் நிலஅபகரிப்பு !
- இந்திய அரசால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் மிதிவண்டிக...
- தமிழ் தேசியத்தின் அடையாளம் தந்தை செல்வாவின் சிலை உ...
- தமிழீழ மக்களுக்கு என்ன நடக்கப்போகிறது ?
- தமிழ்மக்களின் தேசியஎழுச்சியை எந்த சக்தியாலும் மழுங...
- வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவ...
- தமிழ் தேசிய கூட்டமைப்பை அமெரிக்க அழைத்தது எதற்காக?...
- வடக்கு கிழக்கு பிரச்சனைகள் தொடர்பில் ஹிலாரிகிளிண்ட...
- தமிழ் சிங்கள பாடசாலைகளை இணைத்து வெலிஓயா கல்விக்கோட...
- தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பன்னாடு...
- மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவை அமைப்பதற்கு இந்தி...
- யாழில் முச்சக்கரவண்டியினை இடித்துவிட்டு தப்பிசெல்ல...
- யாழ் பல்கலை. மாணவர் ஒன்றிய தலைவர் மீதான தாக்குதலை ...
- போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா வாழவைப்போம் அ...
- வன்னி தொண்டர் ஆசிரியர்கள்நியமத்தில் புறக்கணிப்பு !
- ஊடகவியலாளர் நிமலராஜனின் 11வது நினைவு தினம் யாழில் ...
- மன்னார் கடலில் இரண்டாம் கட்ட எண்ணைஅகழ்வுஆராச்சியில...
- இந்தியப்படையினரால் யாழ்ப்பாணத்தில் படுகொலைசெய்யப்ப...
- மாணவன் தாக்கப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப...
- தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் நடத்திய போராட்டத்தில்...
- முல்லைத்தீவில் மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாயஉபகரணங...
- மாணவன் மீதானதாக்குதல் ஜனநாயகபண்புகளை கேலிக்கூத்தாக...
- வெலிஓயா சிங்களபிரதேசம் முல்லைமாவட்டத்துடன் இணைப்பு !
- தமிழ் மாணவர் சமூகம் மீதான காட்டுமிராண்டிதனமான தாக்...
- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட...
- தவபாலன் தாக்கப்பட்டதற்கு ஜக்கியராச்சியதமிழ்இளையோர்...
- யாழில் படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர...
- தமிழ்தேசியத்திற்கான குரலை அடக்கும் அரசின் தொடர்ச்ச...
- யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்ததலைவர் மீது தாக்கு...
- இலட்சியத்திலிருந்து திசைதிருப்ப புதிய பிரச்சினைகளை...
- வன்னியில் புனரமைப்புச் செய்யப்படாத 79 பாடசாலைகள் !
- வன்னியில்தொடங்கியுள்ள பருவமழையினால் மீள்குடியேற்றி...
- முறிகண்டி மக்கள் சொந்த இடங்களில்குடியேறமுடியாது !
- யாழில் வாக்களராக பதிவுசெய்யாதவர்கள் பதிவு செய்யவேண...
- விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாத பாலியல் பல...
- ராஜீவ்காந்தி நிகழ்த்திய போர் குற்றங்களை எடுத்துகாட...
- அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் காலூன்றத...
- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சிங்களவர் உய...
- இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்ட...
- பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு வெற்றிகிடைத்துள்ளது !
-
▼
November
(56)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?