தமிழீழத்தில் ராஜீவ்கந்தியால் அனுப்பிவைக்கப்பட்ட இந்திய அமைதிப்படை என்ற பெயரிலான படையினர் நடத்திய போர்குற்றங்களை எடுத்துக்காட்டும் நடவடிக்கையில் புரட்சிப்பெரியார் முழக்கம் அமைப்பு ஈடுபட்டுள்ளது.ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகடிநத்திய போர்க் குற்றங்கள் இனப் படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு: அக்டோபர் 10 ஆம் தேதிக்கு முன்னரே முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைச் சுற்றி வளைத்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு முகாமை வெடி வைத்துத் தகர்த்தனர்.10.10.1987அன்று அதிகாலை 5 மணியளவில் யாழ்நகருக்குள் உள்ள ஈழ முரசுஇ முரசொலி ஆகிய 2 தினசரித் தமிழின பத்திரிகை அலுவலகங்களுக்குபுகுந்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்குவேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை ஆயுதமுனையில் கைது செய்ததுடன் அலுவலகங் களையும் அச்சு இயந்திரங்களையும் வெடிகுண்டுகள்வைத்துத் தகர்த்தனர்.அதே தினத்தில் கொக்குவில் என்னும் இடத்தில்இருந்த விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சிசேவையான 'நிதர்சனம்' தொலைக்காட்சி நிலையத்துக்குள் புகுந்து அங்கிருந்த தொலைக்காட்சிஒளிபரப்பு உபகரணங்களை அபகரித்துச் சென்றனர்.(விடுதலைப் புலிகள் திருட்டுத்தனமாக வைத்திருந்த ரேடியோ சாதனங்களைத் தாம் கைப்பற்றியதாகவும்இ இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத்தூண்டிப் பிரசுரங்களை வெளியிட்டு வந்தஅச்சகங்களைத் தாம் முடக்கி வைத்திருப்பதாகவும்இந்திய அமைதி காக்கும் படையினர் தம்நடவடிக்கைகள் குறித்து சமாதானம் கூறினர்.)
1.விடுதலைப் புலிகள் தங்களது ரேடியோஇதொலைக்காட்சி சேவைகளைப் பலஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். விடுதலைப்புலிகளின் 'நிதர்சனம்' தொலைக்காட்சிசேவையில் ஒளிபரப்பப்பட்ட பல நிகழ்ச்சிகளைஇந்திய அரசு அதிகாரிகள் வேண்டிப் பெற்று தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்கூட ஒளிபரப்பியிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்றுஎந்தவித தகவலும் கொடுக்காமல் தொலைக்காட்சி நிலையத்தினுள் புகுந்து அங்குள்ளசாதனங்களை அத்துமீறித் தூக்கிச் சென்றதானதுவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராகஎடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையேயாகும்.
2. இலங்கை அரசினால் செய்திப்பத்திரிகைகளாகப்பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த ஈழ முரசுஇ முரசொலி ஆகியபத்திரிகை அலுவலகங்களை இந்திய அமைதிகாக்கும் படையினர் தாக்கித் தகர்த்ததாவதுஇ தமதுஜனநாயக உரிமைகளை நசுக்கிய செயலாகவேஈழத் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

http://www.periyarthalam.com/2011/10/08/rajiv-gandhis-war-crime-in-eelam/

Powered By: TNPF

பார்வை