வன்னி மாவட்டங்களில் இந்திய அரசினால் புனரமைப்புச் செய்யப்படுவதாகக் கூறப்பட்ட 79 பாடசாலைகள் - இரண்டு வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் இன்றுவரை புனரமைப்புச் செய்யப்படவில்லை. அவற்றை இந்தியா பொறுப்பேற்றதால் வேறு நிறுவனங்களும் புனரமைக்க முன்வரவில்லை என்று கல்வி அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.ஏனைய பாடசாலைகளில் அனேகமான புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் இந்தியா பொறுப்போற்ற 79 பாடசாலை களையும் ஒரு வருடத்தில், 200 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் 190 மில்லியன் ரூபா செலவில் புனரமைத்துத் தருவதாகக் கூறப்பட்டது. இன்று வரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் அந்தப்பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கடந்த பருவகால மழைக் காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு இருந்தனர்.  இம்முறையும் மழை காலம் ஆரம்பித்துள்ளதால் இந்த இடையூறுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த வாரம் இலங்கைக்கு வருகைதந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலர் றஞ்சன் மாத்தாய் அடுத்த ஒரு வருடத்தினுள் 79 பாடசாலைகளும் புனரமைப்புச் செய்யப்படும் எனவும் இதற்கென 190 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Powered By: TNPF

பார்வை