வெலிஓயா உதவிஅரசாங்க அதிபர்பிரிவின் கீழ்உள்ள 9000 சிங்களமக்கள் முல்லைம வாட்டத்தின் கீழ்பதிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கள கிராமங்களை தமிழ்பிரதேசத்துடனும் தமிழ்கிராமங்களை சிங்கள பிரதேசத்துடனம் இணைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு அதாவது எல்லை மீள்நிர்ணய திட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது.அந்தவகையில் அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த மணலாறு எனப்படும் வெலிஓயா சிங்கள உதவிஅரசாங்கஅதிபர் பிரிவினை முல்லைத்தீவ மாவட்டத்துடன் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.தமிழ்மக்கள்வாழ் மாவட்டங்களில் சிங்கள மக்களை அத்துமீறி குடியேற்றி அவர்களுக்கான சிங்கள் அரச அதிகாரிகளை நியமித்து தமிழர்வாழ் இடங்களில் உள்ள அரச திணைக்களங்கள் மருத்துவமனைகள் உட்பட்ட அரச நிர்வாகங்களின் கீழ் உள்ள பொறுப்பு பணிகளுக்கு சிங்களவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு முனைப்புடன் ஈடுபட்டுள்ளதுநீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் எதிர்காலத்தில் சிங்கள மக்களை கொண்ட வெலிஓயா உதவிஅரசாங்க அதிபர்பிரிவின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைத்துறைபற்று தமிழ் கிராமங்கள் சிலவும் சேர்க்கப்படஉள்ளன இதில் கொக்குளாய் கிழக்கு மேற்கு கருநாட்டுக்கேணி கொக்குத்தொடுவாய் கிழக்கு மேற்கு மத்தி வடக்கு நித்தியாகுளம் குமுளமுனை முந்திரிகைகுளம் தண்ணீர்முறிப்புகுளம் கடற்கரை எல்லைப் பிரதேசம் தென்னைமரவாடி டொலர்பாம் கென்பாம் போன்ற பல பூர்வீக தமிழ் கிராமங்கள் எதிர்காலத்தில் சிங்கள பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் கொண்டுவரும் திட்டத்தில் இந்த நடவடிக்கையினை சிறிலங்கா அரசு முன்னெடுத்துள்ளது.

Powered By: TNPF

பார்வை