தமிழ் தேசியத்திற்காக எழும் குரலை அடக்கும் அரசின் தெடர்ச்சியான செயற்பாடு களின் ஒன்றே யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்ட சம்பவமாகும்.என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.நெற்று யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒண்றியத் தலைவன் தவபாலன் தாக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து வைத்தியவாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர் மேற்படித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊடகவியளாளர்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்.யாழ் பல்கலைக் கழக மாணவ பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்றனர். அந்த வகையில் நேற்றும் எமது கட்சியுடன் சந்திப்பொன்றை மேறுகொண்டார்.எமது கட்சியுடனான சந்திப்பை முடிதத்துக் கொண்டு பல்கலைக் கழகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்துபோதே பழம் வீதியில் வைத்து முகமூடி அணிந்த இனந் தெரியாத நபர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். மேற்படித் தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் சம்பவமாகும். பல்கலைக் கழக மாணவர்கள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியாககுரல் கொடுத்து வருகின்றனர். மர்மமனிதன் பிரச்சினை முதற்கொண்டு வேறு பாலபிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துள்ளனர். இதற்காக வேவ்வேறு அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுத்துள்ளனர். யாழ் பல்கலைக் கழகம் தமிழ் மக்களுக்கான உறுதியான நிலைப்பாட்டினை எடுப்பதனை தடுக்கும் நோக்கிலேயே ஒன்றியத் தலைவர் மீது தாக்குதல் இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

Powered By: TNPF

பார்வை