8:33 AM | Posted by
Tamil National Peoples Front
யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகம் தம்மீதான அடக்குமுறைகளிற்கு எதிராக, முக்கிய சில கோரிக்கைளை முன்வைத்து அகிம்சை வழியில் கிளர்ந்தெழ ஆயத்தமாக உள்ளதாக அறிக்கை (17-10-2011) வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழு விபரம்:
இலங்கை அரசு தமிழ் பேசும் மாணவர்களின் மீது அடக்கு முறைகளை அன்றைய காலகட்டங்களில் தரப்படுத்தல்களில் இருந்து ஆரம்பித்து, பின்னர் அவை படுகொலை என்ற வடிவத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இன்று எமது இனத்திற்கான தனித்துவ கலாசாரங்களை அழித்தும் இனந்தெரியாத தாக்குதல்கள் என்ற போர்வையிலும் தமிழ் மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
எமது பல்கலைக்கழகம் தமிழ் பேசும் மக்களால் என்றும் உயர்ந்த இடமாக பார்க்கப்படுவதுடன், இன்றுவரை தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரலாக உலகம் எங்கும் வியாபித்து நிற்கின்ற அதேவேளை, எங்கள் உரிமைக்குரலை நசுக்குவதற்கு கடந்த பல வருடங்களாக இலங்கை அரசுகள் முயன்று வருகின்றன. இது உலகத்திற்கே தெரிந்த உண்மை. அதன் ஒரு அங்கமாகவே இன்று எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் காடையர்களால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
ஒரு பல்கலைக்கழகத்தின் மாணவர்களை வழிநடாத்திச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பு பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் மற்றும் அதன் மாணவ ஒன்றிய உறுப்பினர்களையே சாரும். இது இலங்கையில் உள்ள அணைத்து பல்கலைக்கழகங்களிற்கும் பொதுவான ஒன்றே. ஆனால் எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆனது இன்றுவரை எமது மாணவர்களை மட்டுமன்றி அனைத்து தமிழ் பேசும் மக்களையும் வழிநடாத்தி சென்றுகொண்டிருக்கின்றது.
இந்த உயரிய இடத்தினை பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் எத்தனையோ விலைமதிப்பில்லா உயிர் தியாகங்கள் மற்றும் எம் ஒவ்வொருவரினதும் இனப்பற்றின் ஊடாகவே அடைந்தோம். இந்த உயரிய இடத்தில் இருக்கும் எமது மாணவ ஒன்றிய தலைவருக்கு 16-10-2011 ஞாயிறு மதியம் 1-30 மணியளவில் யாழ் பழம் வீதியில் உள்ள சிறீலங்கா படையினரின் காவலரனில் இருந்து சுமார் 50 மீட்டர் அருகில் வைத்து இனந்தெரியாத நபர்கள் என்று அழைக்கப்படும் அதேவேளை எமது மக்களால் கௌரவமாக இனந்தெரிந்த நபர்கள் என அழைக்கபடுவோரால் கோழைத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
இந்த கோழைத்தனமான தாக்குதலானது “நாங்கள் எங்கே வேண்டுமானாலும் எப்போதும் உங்களை தாக்குவோம் உங்களிற்கு கேட்பதற்கு யாரும் இல்லை”; என்ற ஒர் செய்தியை தமிழ் பேசும் மக்களாகிய எங்கள் எல்லோருக்கும் சொல்லி செல்கின்றது. இதற்கு தமிழ் பேசும் மக்களாகிய நாம் என்ன பதில் சொல்ல போகின்றோம்.
எங்கள் அமைதியை சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் குளிர் காய எண்ணுகின்றனர். இதை நாம் தெடர்ந்தும் அனுமதிப்பதா? இன்று எமது பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவருக்கு நடந்தது நாளை எங்கள் ஒவ்வொரு மாணவர்களிற்கும் நாடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் எங்களிடம் இருக்கின்றது? இதற்கு நாம் என்ன செய்ய போகின்றோம்?
நாட்டில் தற்போது ஜனநாயகம் நிலவி வருவதாகவும் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எந்த பிரச்சினைகளிற்கும் முகம் கொடுக்காமல் இருந்து வருவதாகவும் வெளி உலகத்திற்கு காட்டிக்கொள்ளுகின்றது இலங்கை அரசு. ஆனால் நேற்று எமது மாணவ ஒன்றிய தலைவர் மீதான தாக்குதல் மற்றும் இதற்கு முன்னர் நடந்த தாக்குதல்கள் வடக்கு கிழக்கில் ஜனநாயகம் இல்லை என்ற செய்தியோடு இராணுவ ஆட்சியே நடைபெறுவதை காட்டி நிற்கின்றது.
வட கிழக்கை இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அடக்கி வைக்கலாம் என இலங்கை அரசு நினைக்குமானால் எதிர் காலத்தில் இலங்கை அரசு பல எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவங்களில் இருந்து சர்வதேச சமூகம் நாங்கள் எவ்வாறான நிலைமைகளில் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எமது பல்கலைகழத்திற்கு பெரும்பான்மை இன மாணவர்களின் வரவு இன்று அதிகரித்துள்ள வேளையில் தமிழ் மாணவர்களின் தலைமைத்துவத்தை விரும்பாத சில தீய சக்திகளின் செயற்பாடே இந்த தாக்குதலாகும். இது போன்ற காட்டுமிராண்டி தாக்குதல்களை நடாத்துபவர்களை நாம் உடனடியாக இனங்கான வேண்டும். அவர்களை சட்டங்களிற்கு முன் நிறுத்தவேண்டும். இல்லையேல் இனிவரும் காலங்களிலும் எமது தமிழ் பேசும் ஒவ்வொரு மாணவர்களும் இந்த தாக்குதல்களுக்கு உள்ளவார்கள். எனவே யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகமாகிய நாம் மாணவ அடக்கு முறைகளிற்கு எதிராக முக்கிய சில கோரிக்கைளை முன்வைத்து அகிம்சை வழியில் கிளர்ந்தெழ ஆயத்தமாக உள்ளோம்.
• ஒவ்வொரு தமிழ் மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
• மாணவ ஒன்றியத் தலைவரினை தாக்கியவர்களை உடன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.
• மாணவர் ஒன்றிய தலைவருக்கு தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்திற்கு அருகில் சிறீலங்கா படைகளின் காவலரன் உள்ளது. எமது பாதுகாப்பிற்கு இல்லாத அது போன்ற பாடசாலை மற்றும் எமது பல்கலைக்கழகத்திற்கு மற்றும் மக்கள் செறிந்து வாழும் இடங்களிற்கு காவலரங்களை உடனே அகற்ற வேண்டும்.
• மாணவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளிற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.
•மாணவர்களின் தனித்தவமான செயற்பாடுகளில் இனந்தெரியாதோர் என அழைக்கப்படவோர் தலையிடுவது நிறுத்தப்பட வேண்டும்.
• மாணவர்களாகிய நாம் எங்கு செல்லவும் அனுமதியளிக்கப்பட வேண்டும்.
கோரிக்கைகளை வெற்று கோரிக்கைகளாக நாம் தெரிவிக்கவில்லை. அதனூடாக நாம் எமது அனைத்து தமிழ் பேசும் மாணாவர்களின் உரிமைகளாகவே தெரிவித்து கொள்கின்றோம். எங்கள் மாணவ உரிமை கோரிக்கைகளை நிலைநிறுத்தம் வரை நாங்கள் எங்கள் விரிவுரைகளை நிறுதியுள்ளோம்.
எனவே எங்கள் கோரிக்கைகளை விரைவாக செயற்படுத்தி அதற்கு தீர்வு வழங்குவதன் மூலம் கற்றலை சிறப்பாக முன்னெடுத்து செல்ல உதவிடுமாறு விரைவாக கேட்டுக்கொள்கின்றோம். இதற்கு விரைவான தீர்வினை பெறுவதற்கு எங்களுடன் எல்லா பாடசாலைகள் உயர் கல்விக்கூடங்கள் மற்றும் எங்கள் தமிழ் தேசத்தின் சமூக அமைப்புக்கள் ஒவ்வொன்றையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம்.
நாங்கள் அனைவரும் விரைவாக ஒன்றிணைவதன் மூலம் எங்கள் பலத்தினை நிரூபிப்போம். நாங்கள் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் எங்கள் உரிமைகளை ஒவ்வொன்றாக பெற்றுக்கொள்வோம். நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய காலம் எங்கள் முன் கனிந்துள்ளது. அதை நாம் சரிவர பயன்படுத்துவதன் மூலம் எமது இலக்குகளை விரைவு படுத்துவோம்.
மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
November
(56)
- தமிழரசுக் கட்சியினால் புனையப்பட்ட கூட்டமைப்பின் கட...
- போர்க்குற்றத்தோடு இனப்படுகொலையையும் அம்பலப்படுத்த ...
- சுயநிர்ணயமா? அதிகாரப்பகிர்வா? தமிழ் மக்கள் எதனைத் ...
- இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு சாத்தியமா? (ஆய்...
- இன்றைய சர்வதேச அரசியல் சூழ் நிலையில் தமிழ் மக்களின...
- வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு ஜனாதிபதிகளே காரணம் !
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித ...
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் மைல்கல் கடந்த தாயகம்...
- திருமுறிகண்டியில் மீள்குடியேறியுள்ள மக்கள் உரிய ஆவ...
- வன்னியில் தொடரும் மழையினால் மீள்குடியேறியுள்ள மக்க...
- படைகாவலரண்கள் அகற்றப்பாடாமல் முகாம்மாலையில் மக்கள்...
- கிளி கரைச்சி பிரதேசத்தில் காணமல் போனர்கள் 2841 பேர் !
- செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சி...
- வடக்கில் தென்னிலங்கை கடல்தொழிலாளர்களின் நடவடிக்கை ...
- திருமுறிகண்டி பிரதேச மக்களை காட்டிற்குள் குடியேற்ற...
- தமிழர் தாயக பூமி வடக்கு கிழக்கு இல்லையாம்-தமிழீழ ம...
- முல்லைத்தீவில் தொடரும் நிலஅபகரிப்பு !
- இந்திய அரசால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் மிதிவண்டிக...
- தமிழ் தேசியத்தின் அடையாளம் தந்தை செல்வாவின் சிலை உ...
- தமிழீழ மக்களுக்கு என்ன நடக்கப்போகிறது ?
- தமிழ்மக்களின் தேசியஎழுச்சியை எந்த சக்தியாலும் மழுங...
- வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவ...
- தமிழ் தேசிய கூட்டமைப்பை அமெரிக்க அழைத்தது எதற்காக?...
- வடக்கு கிழக்கு பிரச்சனைகள் தொடர்பில் ஹிலாரிகிளிண்ட...
- தமிழ் சிங்கள பாடசாலைகளை இணைத்து வெலிஓயா கல்விக்கோட...
- தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பன்னாடு...
- மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவை அமைப்பதற்கு இந்தி...
- யாழில் முச்சக்கரவண்டியினை இடித்துவிட்டு தப்பிசெல்ல...
- யாழ் பல்கலை. மாணவர் ஒன்றிய தலைவர் மீதான தாக்குதலை ...
- போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா வாழவைப்போம் அ...
- வன்னி தொண்டர் ஆசிரியர்கள்நியமத்தில் புறக்கணிப்பு !
- ஊடகவியலாளர் நிமலராஜனின் 11வது நினைவு தினம் யாழில் ...
- மன்னார் கடலில் இரண்டாம் கட்ட எண்ணைஅகழ்வுஆராச்சியில...
- இந்தியப்படையினரால் யாழ்ப்பாணத்தில் படுகொலைசெய்யப்ப...
- மாணவன் தாக்கப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப...
- தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் நடத்திய போராட்டத்தில்...
- முல்லைத்தீவில் மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாயஉபகரணங...
- மாணவன் மீதானதாக்குதல் ஜனநாயகபண்புகளை கேலிக்கூத்தாக...
- வெலிஓயா சிங்களபிரதேசம் முல்லைமாவட்டத்துடன் இணைப்பு !
- தமிழ் மாணவர் சமூகம் மீதான காட்டுமிராண்டிதனமான தாக்...
- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட...
- தவபாலன் தாக்கப்பட்டதற்கு ஜக்கியராச்சியதமிழ்இளையோர்...
- யாழில் படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர...
- தமிழ்தேசியத்திற்கான குரலை அடக்கும் அரசின் தொடர்ச்ச...
- யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்ததலைவர் மீது தாக்கு...
- இலட்சியத்திலிருந்து திசைதிருப்ப புதிய பிரச்சினைகளை...
- வன்னியில் புனரமைப்புச் செய்யப்படாத 79 பாடசாலைகள் !
- வன்னியில்தொடங்கியுள்ள பருவமழையினால் மீள்குடியேற்றி...
- முறிகண்டி மக்கள் சொந்த இடங்களில்குடியேறமுடியாது !
- யாழில் வாக்களராக பதிவுசெய்யாதவர்கள் பதிவு செய்யவேண...
- விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாத பாலியல் பல...
- ராஜீவ்காந்தி நிகழ்த்திய போர் குற்றங்களை எடுத்துகாட...
- அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் காலூன்றத...
- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சிங்களவர் உய...
- இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்ட...
- பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு வெற்றிகிடைத்துள்ளது !
-
▼
November
(56)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?