வடக்கில் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களுக்கென இந்தியஅரசால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் மிதிவண்டிகளில் பெருமளவான எண்ணிக்கையினை சிங்கள மக்களுக்கு வழங்கும் முயற்சியில் வடமாகாண ஆளுனர் சந்திரசிறி ஈடுபட்டுள்ளார்.பத்தாயிரம் மிதிவண்களில் யாழ்மாவட்டத்திற்கு 1500 மிதிவண்டிகளும்,முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1500 மிதிவண்டிகளும்,வவுனியா மாவட்டத்திற்கு 1750 மிதிவண்டிகளும் வடமாகாண ஆளுனரால் ஒதுக்கப்பட்டுள்ளது இவ்வாறே குறிப்பிட்ட தொகை மிதிவண்டிகளை கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களுக்கும் ஒதுக்கிவிட்டு ஏனைய மிதிவண்டிகளை சிங்கள மக்களுக்கு வழங்கும் செயற்பாட்டில் வடமாகாணஆளுனரும் அவருடன் அபிவிருத்தி நடவடிக்கையில் சேர்ந்தியங்கும் சிங்கள் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக அரசசெயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மக்களும் போரின் போது முழுமையான இடப்பெயர்விற்கும் சொத்து இழப்பிற்கும் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered By: TNPF

பார்வை