முல்லைத்தீவு திருமுறிகண்டிப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பிரதேசத்தில் 200 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்க நிறுவனம் ஒன்று முன்வந்துள்ள போதும் 64 குடும்பங்களுக்கே வீடுகள் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனையகுடும்பங்களுக்கு காணிகளுக்கான ஆவணங்கள் இல்லாததினால் இவ்வீட்டுதிட்டம் அமைத்துகொடுக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இம்மக்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தபோதும் போரின் போது அவை தவறிவிட்டதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்குஉள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered By: TNPF

பார்வை