சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் தொண்டர் ஆசிரியார் நியமனத்தில் வன்னி தொண்டார் ஆசிரியர்கள் புறக்கணிப்கக்பட்டுள்ளார்கள் பெருமளவான தென்பகுதி சிங்கள் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிதந்தரநியமனம் வழங்கப்பட்டுள்ளது வன்னியில் இடம்பெற்ற போர்நடவடிக்கையில் அனைத்து உடமைகளையும் இழந்து குடும்ப உறுப்பினர்களையும் இழந்த நிலையில் தறப்பாள் கொட்டகைகளில் வாழ்ந்து வருகின்றார்கள் இவ்வாறு துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஆசரியநிதந்தர நியமானம் வழங்காது புறக்கணித்து ஒதுக்குவதானது எந்தவகையில் நியாயமானது என்று வன்னி தொண்டர் ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். தொண்டர் ஆசிரியர் எவருக்கும் இனி நிதந்தர நியமனம் வழங்கப்படமாட்டாது என்று சிறீலங்காவின் பிரதி கல்விஅமைச்சர் பாராளமன்றத்தில் அறிவித்துள்ளதை இட்டு தொண்டர் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.இதுதொடர்பில் வன்னி தொண்டராசிரியர்கள் ஊடக அறிக்கை ஒன்றிi விடுத்துள்ளார்கள்.நாட்டில் ஏனையபகுதி தொண்டர் ஆசிரியர்களுக்கு கடந்த காலங்களில் நியமனம்வழங்கப்பட்டபோது வன்னிபகுதி ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை வன்னி ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டவர்களை போல புறக்கணிக்கப் பட்டுள்ளார்கள்.கிளிநொச்சி,முல்லைத்தீவு,துணுக்காய்,வவுனியாவடக்கு,மடு,வடமராட்சிகிழக்கு,ஆகிய ஆறுகல்விவலயங்களை சேர்ந்த தொண்டர்ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.பலஆசிரியர்கள் தமது குடும்பத்திற்கு உரிய வருமானம் இன்றி துன்பப்படுகின்றார்கள் இதனால் திருமணம்கூட செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் வன்னி தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Powered By: TNPF

பார்வை