முல்லைத்தீவ மாவட்டம் முறிகண்டிப்பிரதேசத்தைசேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வதைமுகாமில் தங்கியுள்ள நிலையில் அவர்கள் சொந்தஇடங்களில் குடியமர்த முடியாது எனஅரச அதிகாரிகள்தெரிவித்துள்ளார்கள்.இவ்வாறு முறிகண்டியினை சேர்ந்த 45 குடும்பங்கள்வதைமுகாம்களில் வாழ்ந்துவருகின்றார்கள் இவர்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தமுடியாதுஎன்றும் முறுகண்டிக்கு தெற்கு பக்கமாக உள்ள பகுதியில் குடியேற்றப்படுவதற்கு காணிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்த ஏற்பாடுமக்களின் விரும்ப மின்னையினை மீறி அரச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.தம்வாழ்ந்த சொந்த காணிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்ட பிரதேச மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளார்கள். தற்போது மீள்குடியேற்றப்படாமல் வதைமுகாமில் இருக்கும் மக்கள்தமது பரம்பரை பரம்பரையாக குடியிருந்தகாணிகளை விட்டுவிட்டு வேறு இடத்தில் குடியேற்றம் செய்வது நியாயமற்ற செயல் என முறிகண்டி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள். முறிகண்டி மற்றும் சாந்தபுரம் இரணைமடு அண்டிய பகுதிகளில் மக்களின் வாழ்இடங்களில் சிறீலங்காப்படையினர் நிலைகொண்டுபாரிய படைமுகாம்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered By: TNPF

பார்வை