வெலிஓயா கல்விக்கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கான பாடசாலைகளும் சிறீலங்காகல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதுமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வெலிஓயா உதவிஅரசாங்கஅதிபர் பிரிவில் தற்போது வெலிஓயா கல்விக்கோட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கல்வி வலயத்தின் கீழ் இந்தகோட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது  குமுழமுனை,ஆறுமுகத்தான்குளம்,தண்ணிமுறிப்பு தொடக்கம் சம்பத்நுவர வரையான பகுதிகளில்உள்ள பாடசாலைகள் இந்த கோட்டத்தினுள் உள்ளடக்கப்படுகின்றன 7 தமிழ்பாடசாலைகளும் 6 சிங்களபாடசாலைகளையும் உள்ளடக்கி இந்த வலயம் உருவாக்கப்பட்டுள்ளதுஇதில் அடங்கும் சிங்கள பாடசாலை காளாக நாயாறு சிங்கள வித்தியாலயம்,சம்பத்நுவர சிங்களவித்தியாலயம், எதவித்நுவேவ சிங்களவித்தியாலயம்,கிதுகஸ்வௌ சிங்கள வித்தியாலயம், கிரிபண்வௌ சிங்களவித்தியாலயம்,ஜனகபுர சிங்களவித்தியாலயம் என்பன சிங்கள பாடசாலைகள்ஆகும்,மற்றும் இதனுள் அனுராதபுரம் திருகோணமலை கல்வி வலயங்களில் இருந்து 5 பாடசாலைகளும் இணைக்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று கோட்டத்தில் இருந்து தமிழ் பாடசாலைகளாக கொக்கிளாய் அரசினர்தமிழ்கலைவன் பாடசாலை,கொக்குத்தொடுவாய் அரசினர்தமிழ்கலைவன் பாடசாலை,கருநாட்டுக்கேணி அரசினர்தமிழ்கலைவன் பாடசாலை ஆறுமுகத்தான்குளம்அரசினர்தமிழ்கலைவன் பாடசாலை,ஆண்டான்குளம் அரசினர்தமிழ்கலைவன் பாடசாலை,குமுழமுனை மகாவித்தியாலயம் ஆகிய தமிழ்பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.சிங்கள மக்களைதமிழ்மக்களுடன் இணைத்து உருவாக்கப்பட்டஇந்த இந்த கல்விக்கோட்டத்தினை தனிச்சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகளிலும் சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க செயலகத்திலும் சிங்களவர்களை இணைக்கும் முயற்சிக்கு அடித்தளம் இடும் செயற்பாடாக இந்தகல்விகோட்ட இணைப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered By: TNPF

பார்வை