கடந்தகாலபோரினால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்க வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட வெலி ஓயாபிரதேச சிங்களமக்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.வன்னியில் சிறீலங்காப் படையினரின் போரின் போது பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாய உபகரணங்களை சிங்கள இனத்தவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் சிங்கள ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள் அந்தவகையில் அண்மைக்காலத்தில் வவுனியா வடக்கு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் சிங்களமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னிலையில் சிங்களமக்களின்பிரதேசமாக காணப்படும் வெலிஓயா பிரதேசத்தினை முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சென்றடையும் உதவிகளை சிங்களமக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் சிங்கள ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.அண்மையில் முல்லைத்தீவு விவசாய மக்களுக்கு கமநலசேவைநிலையம் ஊடாக வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் வெலிஓயா சிங்கள மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered By: TNPF

பார்வை