இலங்கைத் தமிழர்களிற்குரிய பிரச்சினைகளிற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை வலியுறுத்தம் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  அமெரிக்கா அழைத்திருகின்றது .இவ் வேளையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கியமான சில சிவில் சமூகத் தலைவர்களால் திருமதி ஹிலரி கிளின்டனுக்கு தமிழர் பிரச்சனை தொடர்பாக 24.10.2011 அன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கங்கள் சில

1 . அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழர்களுக்கெதிராக இறுதி யுத்தத்திலும் அதற்கு முன்னரான யுத்தங்கள் பலவற்றின் போதிலும் இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் விட்டுக் கொடுக்கப்படக் கூடாது என அமெரிக்காவிடம் சிவில் சமூகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கு மிடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்குமாயின் போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேசம் விட்டுக் கொடுக்கலாம் என்றவாறாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் சிவில் சமூகத் தலைவர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு தமது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கின்றனர். வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் என்றால் என்ன என்ற கேள்வி ஒரு புறமிருக்க ஒரு போதும் நீதியை வேறு பயன் எதற்காக வேணும் பேரம் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

2 . 13ஆவது திருத்தத்தை தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளலாம் என அமெரிக்க உதவி இராஜாங்கச் செயாலாளர் ரொபேர்ட் பிளேக் இலங்கைக்கான தனது அண்மை விஜயத்தின் போது தெரிவித்துள்ளமை தொடர்பில் சிவில் சமூகத் தலைவர்கள் தமது கவலையை வெளியிட்டிருக்கின்றனர். 13ஆம் திருத்தம் ஒற்றையாட்சி அரசியல் வரையறைமைப்புக்கு உட்பட்டிருக்கின்ற தன்மைஇ வேண்டுமென்றே குழப்பகரமாக மொழியில் அவ்வரசியலைமைப்புத் திருத்தம் எழுதப்பட்டுள்ளமை நீதிமன்றங்களினால் இத்திருத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கக் கூடிய விளக்கங்கள் யாவுமே 13ஆம் திருத்தத்தின் பொருத்தமற்ற தன்மையை எடுத்தியம்புகின்றன. தற்போதைய அரசாங்கத்தைத் தவிர 1987க்குப் பின்னரான அனைத்து அரசாங்கங்களும் 13ஆவது திருத்தம் தமிழரது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்ற அடிப்படையிலேயே தமிழர் தரப்போடு பேச்சுவார்த்தைகளை நடாத்தின எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் 13ஆவது திருத்தம் என்ற வரையறைக்குள் நின்று கொண்டு படிப் படியாக மேலும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையையும் சிவில் சமூகத் தலைவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். 13ஆவது திருத்தத்தின் வரையறைகள் மிக இறுக்கமாக இருக்கும் தன்மையினால் இவ்வாறான படிப்பயான அதிகாரமெடுத்தலுக்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். எனவே அமெரிக்கா 13ஆவது திருத்ததiதைத் தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு  தமிழர்களுக்கு சுயாட்சிக்கான உரிமையுண்டு என்ற அடிப்படையை ஏற்றுக் கொள்ளளாத எந்த்த் தீர்விலும் பயனில்லை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இக்கடிதத்தின் பிரதி கூட்டமைப்பின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Powered By: TNPF

பார்வை