தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க பயணத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்க வேண்டும்! என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க பயணத்தை வைத்து தினமும் பல செய்திகளை காண்கிறோம்.இந்தியாவிற்கு பல தடவை அழைக்கப்பட்ட அல்லது இந்தியாவிற்கு பல தடவை சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்க கனடா போன்ற நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்கிறதுஇ அந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசின் கொடிய பிடியிலிருந்து விடுதலை கிடைக்கஇ தமிழீழ மக்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி வலியுறுத்தப்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைபிட்கு தமிழீழ மக்கள் ஆதரவு இருக்கும்.அதே நேரத்தில் நாம் ஒரு அரசியல் நிகழ்வை மறந்து விட கூடாது.முள்ளிவாய்காலில் நடைபெற்ற போர் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழு, சிறி லங்காவில் போர் குற்றங்கள் நடந்தது என்று ஒரு அறிக்கையை சமர்பித்தது. இந்த நேரதில் அண்மையில் நடைபெற்ற ஒரு போரின் முடிவில், செயப்பட்ட ஒரு விசாரணை கொமிசன் பற்றி நாம் சித்தித்து பார்க்கவேண்டிய நேரமிது.தாய் தமிழீழத்தில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் பாலஸ்தீனத்தின் காசா பிரதேசத்தில் இஸ்ரேல் ராணுவத்தால்  டிசம்பர் 27,2008 யில் அரம்பமாகி 18 ஜனவரி 2009யில் முடிவுற்ற யுத்தத்தில் பல்லாயிரம் மக்கள் இறந்தார்கள்.18 ஜனவரி 2009யில் காசா பிரதேசத்தில் அமைந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்தின் மேல் போடப்பட்ட குண்டிற்கு பிறகு பல நாடுகளின் கண்டனங்களுக்கு பின் அந்த போர் ஒரு முடிவிற்கு வந்தது .எமது தாயகத்தில் எவ்வாறு கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்றதோ, அதே போல் காசா பிரதேசத்திலும் இஸ்ரேல் நாட்டின் தரை படைகளாலும், வான்படைகளாலும் போர் சட்டங்களை மீறி தடை செய்யப்பட ஆயுதங்கள்இ போச்பெரௌஸ் கூண்டுகள் பாவித்து ஒரு மாபெரும் மனித பேரவலத்தை ஏற்படுத்தி ஆயிரத்திற்கு மேற்பட்ட பெரியவர்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் படுகொலை செயப்பட்டார்கள்.இந்த போரின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின்; வேண்டு கோளுக்கு இணங்க தென் ஆப்பிரிக்கவை சேர்த்த நீதவான் திரு Richard Goldstone தலைமையில் காசா பிரதேசத்தில் நடைபெற்ற போரில் நடந்த குற்றங்களுக்கு ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணையின் முடிவில் காசா பிரதேசத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அமைப்பு ஹமாஸ் ஆகியோரால் போர் குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையை கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் விசாரிக்கப்படலாம் என்று இந்த நீதவான் தனது அறிக்கையில் வெளியிட்டார். இந்த அறிகையைஇ குற்றசட்டை இஸ்ரேல் ராணுவ மந்திரியும்இ பிரதம மந்திரியும் கடுமையாக நிராகரித்தனர்.அப்படி இருந்தும் ஐக்கிய நாடுகள் சபையில் பல நாடுகளின் ஆதரவை பெற்ற பாலஸ்தீனர்கள் இந்த விசாரணை முன்னகர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.இஸ்ரேல் செய்வதறியாது நின்ற போது அவர்களுக்கு துணையாக வந்து நின்றது அமெரிக்க. இதே அமெரிக்காவின் தலைவராக திரு பாரக் ஒபாமா பல அராபிய நாடுகளுக்கு விஜயம் செய்த போது பாலஸ்தீனம் என்ற நாடு விரைவில் உருவாக அமெரிக்க அத்தனையும் செய்யும் என்று வலியுறுத்தி இருந்தார். அதே அமெரிக்க அதிபர் இந்த விடயத்தில் தலையிட்டு பாலஸ்தீன நிர்வாக கட்டமைப்பின் தலைவர் திரு  Mahmoud Abbasயை தொடர்பு கொண்டு திரு Richard Goldstone யின் அறிக்கையை தற்போதைக்கு தள்ளி வைக்கும் படியும்இ இந்த அறிக்கை பாலஸ்தீனம்- இஸ்ரேல் பேச்சவார்த்தைக்கு தடையாக இருக்கும் என்றும் பாலஸ்தீனம் என்ற நாடு உறவாக தாம் உதவ முடியும் என்ற நம்பிக்கைகளை கொடுத்து பாலஸ்தீன தலைவர் திரு ahmoud Abbas  மூலமாக அந்த அறிக்கையை முறம் தள்ளி வைத்தார்கள்.அதன் பின் பாலஸ்தீனர்களும் மிகவும் நம்பிகையுடன் இருத்த நேரத்தில் இஸ்ரேல் பாலஸ்தீன பிரதேசங்களில் தமது காலணிகளை உருவாக்கும் செயல்திட்டங்களை தொடர்ந்தார்கள். பாலஸ்தீனம் என்ற நாட்டின் உருவாக்கத்தில் நம்பிக்கை அற்ற நிலையில் பாலஸ்தீன தலைவர் ஐக்கிய நாடுகள் சபையில் தமக்கு இருந்த ஆதரவு மூலமாக ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற முற்பட்டார். அமெரிக்க, பிரான்சுஇ பிரித்தானிய போன்ற நாடுகள் இவரின் முயற்சிக்கு தடையாக, இப்போது வேண்டாம்இ இப்படியான அங்கீகாராம் நீண்டகால அமைதிக்கு பங்கமாக இருக்கும் என்றும், இஸ்ரேல் உடன் பேச்சுவார்த்தை மூலமே பாலஸ்தீன நாட்டின் அங்கிகாரம் வர வேண்டும் என்று மிக முக்கியமாக அமெரிக்க வலியுறுத்தியது.அந்த நேரத்திலும் கூட பாதுகாப்பு சபையில் இருக்கும் நாடுகளில்,முக்கியமாக அமெரிக்காவின் மேல் நம்பிக்கை அற்ற நிலையில் திரு மொதமேது அப்பாஸ் பாலஸ்தீன நாட்டின் உருவாக்கத்தின் முக்கியதுவத்தை ஐக்கிய நாடு சபையில் 193 நாடுகளின் முன்னிலையில் வலியுறுத்தி தமது அங்கத்துவத்தை வலியுறித்தினார்.ஆனால் அவர் முயற்சிக்கு தடையாக பாதுகாப்பு சபையில் அமெரிக்காவே நிற்கிறதுஇ அதை அடுத்து பாரிசை தலைமை பீடமாக இயங்கும் UNESCO வில் பாலஸ்தின் நாட்டுக்குரிய அங்கத்துவத்தை பெறுவதற்கு அமெரிக்காவே தடையாக இருந்தது.இந்த விஷத்தை இந்த நேரத்தில் எழுதுவதற்கான காரணம், நாமும் இவ்வாறான வலை பின்னலில், நம்பிக்கை ஊட்டலில் நாமும் சிக்கி விட கூடாது என்பதே.சர்வேதேச அதிகாரவர்க்க நாடுகள் பிற மக்களின் நலன்களுக்கு முன்னதாக தமது நாட்டு நலன்னிலையே முக்கிய கவனம் செலுத்துவார்கள். பூலோக அரசியல், பூலோக நலன்கள் கொண்டு தமது நாட்டு நலன்களே முக்கியமாக இவர்கள் பார்ப்பார்கள்.பேச்சுவார்த்தை பொறிக்குள் சிக்காதிருக்க முழுமையான அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்பதையே கூட்டமைப்பிடம் தமிழீழ மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.அதே போல் நாமும் எமக்கு நீதிஇ எமது நீண்டகால நிரந்தர அமைதி வாழ்க்கைகான நலன் கருதியே எமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதையே நாம் எமது அரசியல் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்கிறோம்.எமது தாயகம் - தேசியம்- தன்னாட்சிக்கு பாதகம் இல்லாமல் செயல்படுபவர்களுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும்.

Powered By: TNPF

பார்வை