பொதுநலவாய அங்கத்துவ நாடுகளில் மனித உரிமைகள் ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை கண்காணிப்பதற்காக கண்காணிப்புக் குழுவொன்றை அமைக்கும் முயற்சிக்கு இந்தியா எதிர்க்கவுள்ளது
54 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பிற்கு வழங்கப்பட்ட ஆணையில் இவ்வாறான கண்காணிப்புக் குழுவுக்கு இடமில்லை என்பதை வலியுறுத்துவதில் ஏனைய அங்கத்துவ நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு இந்தியா முயன்று வருகின்றனது.
இது மேற்லகை சேர்ந்த பொதுநலவாய நாடுகளான பிரிட்டன் கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் முரண்பட வேண்டிய நிலைமைக்கு இந்தியாவைகொண்டுசெல்லலாம். பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 11 அங்கத்தவர்கள் கொண்ட முக்கியஸ்தர்கள் சிபாரிச் செய்துள்ள 106 விடயங்களில் பல விடயங்கள் குறித்து இந்தியா திருப்திகொண்டுள்ளது.ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவைக்கு உள்ள ஆணைதாராளமாக போதுமானதாக இருக்கையில் இன்னுமொரு மனித உரிமைகள் அமைப்பு அமைவதை இந்தியா எதிர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் இந்திய சாதியமைப்பை இனவெறி என்பதனுள் கொண்டு வரும் முயற்சியை அடுத்த வருட மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.சகல தெற்காசிய நாடுகளினதும் சில ஆபிரிக்க நாடுகளினதும் ஆதரவு இந்தியாக்கு கிடைக்கும்நிலையில் பொதுநலவாய மனித உரிமை கண்காணிப்பு குழு மேற்குநாடுகளால் இலங்கைக்கு எதிராக பயன் படுத்தப்படலாம் என்ற கவலையும் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளதுஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது.இந்த விழுமியங்கள்வெளியிலிருந்து திணிக்கப்படுவதையும் இந்தியா கடுமையாக எதிர்க்கும். ஏன எதிர்பக்கப்படுகின்றதுஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான பாகுபாடு காட்டும் நாடுகள் கண்டிக்கப்பட வேண்டும் அல்லது தண்டிக்கப்பட வேண்டுமென்ற சிபாரிசையிட்டு இந்தியா அதிருப்தியடைந்துள்ளது.  ஓரின சேர்க்கையை குற்றச்செயல் என இந்தியாவில் வரையறை செய்யாத போதும் பொதுநலவாயத்தை சேர்ந்த 40 நாடுகள் ஓரின சேர்க்கையை குற்றச்செயலென பிரகடனப்படுத்தியுள்ளன. இந்த பிரச்சினை பொதுநலவாய உச்சிமாநாட்டில் பாரிய பிரச்சினைகளை ஆராய்வதற்கு இடைஞ்சலாக அமையக்கூடும் எதிர்பாக்கப்படுகின்றது.

Powered By: TNPF

பார்வை