தமிழ் இளையோர் அமைப்பு – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் சுப்ரமணியம் தனபாலசிங்கம் மீது இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் நடாத்தப்பட்ட தாக்குதலை யிட்டு கனடாவும்,கனேடிய பல்கலைக்கழகங்களை தளமாகக் கொண்டியங்கும் தமிழ் மாணவர் அமைப்புகளும் ஆழ்ந்த கவலையும், அக்கறையும் கொள்கின்றன.இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால், வடக்கு கிழக்கை தமது தாயகமாக கொண்டு வாழும் தமிழ் மக்களின் மத்தியில் பயத்தை உண்டு பண்ணுவதற்காக அவிழ்த்து விடப்பட்டுள்ள “கிறீஸ் புதம்” நடவடிக்கைக்கு எதிராக மாணவர் சமூகத்தை திரட்டுவதில் இருபத்து நான்கு வயதை யுடைய தனபாலசிங்கம் முக்கிய பங்காற்றி வருகிறார். அதேசமயம், தமிழர்களின் பாரம்பரிய நிலங் களை அபகரிக்கும் உத்தியாகவும், இலங்கை இராணுவத்தின் பிடியை தமிழர் தாயகப் பகுதிகளில் நிரந்தரமாக்குவதற்கும் “கிறீஸ் புதம்” நடவடிக்கையை இலங்கை இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.இதைப்பற்றி கார்ல்ரன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர் அனோஜன் தங்கவேல் கூறுகையில், “இந்த நாளானது எங்கள் எல்லோருக்கும் சோகமான நாளாகும். எங்களுடைய சகோதர சகோதரிகள், மாணவர்களுக்கு உரித்தான அடிப்படை உரிமைகள் கூட இல்லாதவர்களாய்
இருக்கின்றார்கள். ஓழுங்குபடுத்தும் உரிமை, ஒன்றுதிரட்டும் உரிமை கனேடியர்களாகிய நாங்கள் பெருமையாக கொண்டாடும் ஜனநாயக விழுமியங்கள் ஆகும்.”
“ஒட்டுமொத்த மாணவர் சமூகமும் இந்த வெறுக்கத்தக்க செயலினால் அருவருப்படைந்துள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பும், அடாவடித்தனமும் தமிழர் தேசியப் பிரச்சனைக்கான தீர்வுகள் அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.” என்று தமிழ் இளையோர் அமைப்பின் பேச்சாளர் பிரியந் நல்லரட்ணம் தெரிவித்தார்.கனேடிய அரசாங்கமும் ஜனநாயகத்தின் ஆதரவாளர்களும் இந்த கொடூர தாக்குதலைக் கண்டிக்கவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் கொண்டுவரவும், இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தின் நடைபெறுவதைத் தடுக்கவும்சர்வதேச சமூகம் ஆக்கபுர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.இத்தருணத்தில், மாணவன் தனபாலசிங்கம் மீதான இலங்கை புலனாய்வுப் பிரிவின் கொடூர தாக்குதலை உடனடியாக கண்டித்த கனேடிய மாணவர் பேரவைக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஒன்றுபட்ட மாணவர் சக்தியை யாராலும் தோற்க்கடிக்க முடியாது!

ஆதரவாக, தமிழ் இளையோர் அமைப்பு – கனடா
புறொக் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு
கார்ல்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு
ஒன்டாரியோ பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு
குவல்ப் கம்பர் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு
மக்மாஸ்ரர் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு
றையர்சண் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு
ரொரன்ரோ பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு (மிஸ்ஸிசாகா)
ரொரன்ரோ பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு (ஸ்கார்புரோ))
வில்பிறிட் லோறியர் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு
யோர்க் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பு

Powered By: TNPF

பார்வை