மக்களின் கவனத்தை முக்கிய இலட்சியத்திலிருந்து திசைதிருப்புவதற்காக காணிப் பதிவு, கிறிஸ் மனிதன் போன்ற புதிய புதிய பிரச்சினைகளை அரசு கிளப்பிவிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்களை உள்வாங்குவது, கிறிஸ் மனிதன், காணிப்பதிவு, கலாசார சீரழிவு என புதிய புதிய பிரச்சினைகளைக் கிளப்பி மக்களின் கவனத்தை முக்கிய விடயங் களிலிருந்து திசை திருப்புவதே அரசின் நோக்கம்.2004 சமாதான காலத்தில் திருமலையில் ஒரு புத்தர் சிலை திருமலையில் வைக்கப்பட்டது இதன் மூலம் அப்போதைய சமயத்தில் மக்களின் விடுதலை உணர்வு திசைதிருப்பப்பட்டது.இதன் மூலம் மக்களின் போராட்ட குணாம்சங்களும் நாடிபிடித்துப் பார்க்கப்படுகின்றது. கிறிஸ் மனிதன் பிரச்சினை ஓய்ந்துபொனாலும் இது வேறு வேறு வடிவங்களில் தொடரும் என்றும் சிறிதரன் தெரிவித்தார்.

Powered By: TNPF

பார்வை