அமைதிப்படை என்ற போர்வையில் வந்த இந்தியப்படையினர் தமிழர்தாயகத்தில் படுகொலைகளை அரங்கேற்றி தமிழ்மக்களை அழித்தார்கள் அந்தவகையில் யாழ்பொது மருத்துவமனையில்1987ம் யாழ் போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் நோயாளர்கள் என 68ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு 24ஆம் ஆண்டு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. படுகொலையில் வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம் வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர் வைத்திய கலாநிதி கணேசரத்தினம் திருமதி பா.வடிவேல் செல்வி இ. மங்கயற்கரசி செல்வி மு. லீலாவதி திரு கே.செல்வராசா திரு கே. கிருஸ்ணராஜா திரு மு. துரைராசா திரு எம். சண்முகலிங்கம் திரு வி. வரதராசன் திரு கே. வேதாரணியம் திரு யோன்பீற்றர் திரு இசுகுமார் திரு க. சிவயோகநாதன் திரு கே. சிவராசா திரு கோ. உரித்திரன் திரு க. மார்க்கண்டு திரு இ. இரத்தினராசா. திரு க. நவரத்தினம் ஆகியோர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம்இ 22ம் நாட்களில் இந்திய படையினருடைய மிலேச்சத்தனமான தாக்குதலில் பலியான போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் இருபத்தொருபோர்.நோயாளிகளின் நலனுக்காக தம் உயிரைத் தியாகம் செய்த இவர்களது 24வது ஆண்டு நினைவு நிகழ்வு 21.10.2011 காலை யாழ்பொது மருத்துவமனை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.

Powered By: TNPF

பார்வை