6:17 AM | Posted by
Tamil National Peoples Front
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நிதானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கி விடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்துவிடும். இவ்வாறு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.எந்த அறிக்கையும் வரலாம்; போகலாம். எந்தப் பேச்சுகளும் நடைபெறலாம். ஆனால், எமது அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரவுள்ள ஒரு புறச்சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை ஆரம்பித்திருக்கும் அரசு, இதற்கு அதீத முக்கியத்துவத்தையும் வழங்கிவருகிறது.ஆணைக்குழு அறிக்கையால் ஏற்படும் சர்வதேச ரீதியிலான தாக்கத்தை ஈடுகட்டும் வகையில் அரசின் போக்குகள் அமைந்துள்ளதால், இது விடயத்தில் தமிழர் தரப்பில் பெரும் அதிருப்தியான நிலை ஏற்பட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில் வடக்கு கிழக்குத் தமிழ்ப்பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். அதனை எந்தவிதத்திலும் ஆட்டங்காண வைக்க இடமளிக்கக்கூடாது. ஆனால், அக்கட்சி மிக்க நிதானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கிவிடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமை சீர்குலைந்துவிடும்.நிதானத்துடனும், எச்சரிக்கையுடனும் அக்கட்சி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறுவதற்குக் காரணம் உள்ளது. சென்ற 60 வருடங்களாக பெரும்பான்மை இன அரசியல்கட்சிகள், "அதைத் தருகின்றோம். இதைத் தருகின்றோம் என்று கூறிவிட்டு எதையுமே முறைப்படி சட்டரீதியாகக் கொடுக்கவில்லை. 13ஆவது திருத்தச்சட்டம் கூட அமுல்படுத்தப்படவில்லை.பண்டாரநாயக்கா செல்வநாயகம் உடன்பாடு கிழித்தெறியப்பட்டது. டட்லி சேனநாயக்கா செல்வநாயம் உடன்பாடு கைவிடப்பட்டது. சட்டவலுவுள்ள பிரதேச சபைகள் உருவாக்கித் தரப்படும் என ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறிவிட்டுப் பின்னர் அதிலிருந்தும் அவர் நழுவிக்கொண்டார். ஆகவே, கண்ட மிச்சம் தமிழ்பேசும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதுவுமே அரசியல் ரீதியாக வழங்கப்படாததுதான்.ஆயுதமேந்திய பிரபாகரன் காலத்தில் பிரபாகரன் மிஞ்சியமையால் அரசுகள் கெஞ்சின. இன்று நாங்கள் கெஞ்சி அரசு மிஞ்ச இடமளிக்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. எமது கோரிக்கைகள் தார்மீக அடிப்படையிலானது, சட்டரீதியானவை, சர்வதேச சமூகம் ஏற்கும் தன்மையுடையன.ஆகவே, எமது அடிப்படைக் கொள்கைகளில் நாங்கள் பற்றுறுதியுடன் இருக்கவேண்டும். ஆனால், அதேநேரத்தில் நிதானத்துடன் செயற்படவேண்டும். "எதையாவது தாருங்கள் அதையே ஏற்றுக்கொள்வோம்" என்று நாங்கள் நினைத்தால் எம்மவர் இத்தனை பேர் சித்திரவதைப்பட்டதற்கும், உயிர்களைத் தியாகம் பண்ணியதற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.அதுமட்டுமல்ல, ரயில் பாதைகள் அமைத்துத் தந்துள்ளோம், துறைமுகம் நிர்மாணித்துத் தருவோம், புதிய பாதைகள் அமைப்போம் என்று கூறி எமக்கு ஏதோ சலுகைகள் தருவதுபோல் அரசுகள் பேசினால் அதில் அர்த்தமில்லை.இவை யாவும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒருகாலத்தில் நடைமுறையில் இருந்து அவற்றைச் செப்பனிடாது அரசுகள் செயல்பட்டதினால்தான் போக்குவரத்து வசதியின்மையை எமது மக்கள் இதுவரை சந்தித்து வந்துள்ளார்கள். எமக்கு வழங்கவேண்டியவற்றை வழங்காதிருந்துவிட்டு, இப்பொழுது வழங்குகின்றோம். நாங்கள் உங்கள் மீது கரிசனை கொண்டுதான் இவ்வாறு செய்கின்றோம் என்றால் அது நகைப்புக்கு இடமானது.அடிப்படைக் கொள்கைகள் என்று கூறும்போது பாரம்பரியமாகத் தமிழ் பேசிவந்த மக்களின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையவேண்டும். அதனுள் முஸ்லிம்களுக்கு ஒரு அலகை ஏற்படுத்துவது தமிழ் மக்களும், முஸ்லிம்களும் கிழக்கிலுள்ள மக்களும் சேர்ந்து தமக்குள் எடுக்கவேண்டிய ஒரு தீர்மானம். அதில் மத்திய அரசு தலையீடு செய்யவேண்டிய அவசியமில்லை.தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் சேர்ந்து தம்மைத் தாமே ஆள்வதற்கு வழிவகுப்பதுதான் மத்திய அரசின் கடமை. பெரும்பான்மையினரான தமது மொழி, மதம், கலாசாரம் என்பவற்றை சிறுபான்மையினரும் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்ப்பது சர்வதேச நியமங்களுக்கு முரணான ஒரு எதிர்பார்ப்பு.வடக்கு, கிழக்கை இணைப்பதால் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ப்பேசும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஏன் பௌத்த மக்களின் தனித்துவம் கூடப் பாதுகாக்கப்படும். இந்தியாவில் சமஷ்டி முறையைப் பின்பற்றியதால் அந்நாடு எத்தனையோ விதமான மொழியுடைய மக்கள் கூட்டங்களை வைத்துக்கொண்டும் இன்றுவரையில் பிரிந்துவிடவில்லை.இலங்கையிலும் சமஷ்டி முறை அனுசரிக்கப்பட்டால் நாடு பிரிந்துவிடாது, ஒற்றுமைக்குத்தான் அது வழிகோலும். தற்போதைய சூழலில் சமஷ்டி ஒன்றே எமக்கு விடிவைத் தரவல்லது. சமஷ்டியே எமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தவல்லது. இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டுதான் அரசுடனான பேச்சு நடைபெறவேண்டும்.இந்திய அரசமைப்பைப் போன்று சமஷ்டி என்று கூறாமலே சமஷ்டியின் கீழ் பெறக்கூடிய நல உரித்துகளை நாம் பெற இடமளிக்கலாம். சமஷ்டி என்ற பதத்தைப் பாவிக்காமலேயே மாகாணசபைகளுக்குரிய அதி உச்ச அதிகாரங்களை வழங்கலாம். வடக்கு, கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமைகளையும் வலியுறுத்தலாம்.சில அரசியல் கருத்துகள் சிங்கள மக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் எங்கள் பாரம்பரிய உரிமைகளையும், தனித்துவங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது. சமஷ்டி என்ற பதத்திற்கு பிழையான அர்த்தம் கற்பித்தவர்கள் பெரும்பான்மை அரசியல்வாதிகளே. இப்பொழுது அதனுடைய உண்மையான அர்த்தத்தை மக்கள் விளங்கிக்கொள்ள சிங்கள அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.எந்த அறிக்கையும் வரலாம், போகலாம் எந்தப் பேச்சும் நடைபெறலாம். ஆனால், எங்கள் அடிப்படைக் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருந்து ஸ்திரத்தன்மையுடன் கூட்டமைப்பினர் அரசுடன் பேசவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதுதான் எனது கருத்து. இவ்வாறு முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
November
(56)
- தமிழரசுக் கட்சியினால் புனையப்பட்ட கூட்டமைப்பின் கட...
- போர்க்குற்றத்தோடு இனப்படுகொலையையும் அம்பலப்படுத்த ...
- சுயநிர்ணயமா? அதிகாரப்பகிர்வா? தமிழ் மக்கள் எதனைத் ...
- இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு சாத்தியமா? (ஆய்...
- இன்றைய சர்வதேச அரசியல் சூழ் நிலையில் தமிழ் மக்களின...
- வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு ஜனாதிபதிகளே காரணம் !
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித ...
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் மைல்கல் கடந்த தாயகம்...
- திருமுறிகண்டியில் மீள்குடியேறியுள்ள மக்கள் உரிய ஆவ...
- வன்னியில் தொடரும் மழையினால் மீள்குடியேறியுள்ள மக்க...
- படைகாவலரண்கள் அகற்றப்பாடாமல் முகாம்மாலையில் மக்கள்...
- கிளி கரைச்சி பிரதேசத்தில் காணமல் போனர்கள் 2841 பேர் !
- செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சி...
- வடக்கில் தென்னிலங்கை கடல்தொழிலாளர்களின் நடவடிக்கை ...
- திருமுறிகண்டி பிரதேச மக்களை காட்டிற்குள் குடியேற்ற...
- தமிழர் தாயக பூமி வடக்கு கிழக்கு இல்லையாம்-தமிழீழ ம...
- முல்லைத்தீவில் தொடரும் நிலஅபகரிப்பு !
- இந்திய அரசால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் மிதிவண்டிக...
- தமிழ் தேசியத்தின் அடையாளம் தந்தை செல்வாவின் சிலை உ...
- தமிழீழ மக்களுக்கு என்ன நடக்கப்போகிறது ?
- தமிழ்மக்களின் தேசியஎழுச்சியை எந்த சக்தியாலும் மழுங...
- வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவ...
- தமிழ் தேசிய கூட்டமைப்பை அமெரிக்க அழைத்தது எதற்காக?...
- வடக்கு கிழக்கு பிரச்சனைகள் தொடர்பில் ஹிலாரிகிளிண்ட...
- தமிழ் சிங்கள பாடசாலைகளை இணைத்து வெலிஓயா கல்விக்கோட...
- தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பன்னாடு...
- மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவை அமைப்பதற்கு இந்தி...
- யாழில் முச்சக்கரவண்டியினை இடித்துவிட்டு தப்பிசெல்ல...
- யாழ் பல்கலை. மாணவர் ஒன்றிய தலைவர் மீதான தாக்குதலை ...
- போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா வாழவைப்போம் அ...
- வன்னி தொண்டர் ஆசிரியர்கள்நியமத்தில் புறக்கணிப்பு !
- ஊடகவியலாளர் நிமலராஜனின் 11வது நினைவு தினம் யாழில் ...
- மன்னார் கடலில் இரண்டாம் கட்ட எண்ணைஅகழ்வுஆராச்சியில...
- இந்தியப்படையினரால் யாழ்ப்பாணத்தில் படுகொலைசெய்யப்ப...
- மாணவன் தாக்கப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப...
- தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் நடத்திய போராட்டத்தில்...
- முல்லைத்தீவில் மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாயஉபகரணங...
- மாணவன் மீதானதாக்குதல் ஜனநாயகபண்புகளை கேலிக்கூத்தாக...
- வெலிஓயா சிங்களபிரதேசம் முல்லைமாவட்டத்துடன் இணைப்பு !
- தமிழ் மாணவர் சமூகம் மீதான காட்டுமிராண்டிதனமான தாக்...
- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட...
- தவபாலன் தாக்கப்பட்டதற்கு ஜக்கியராச்சியதமிழ்இளையோர்...
- யாழில் படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர...
- தமிழ்தேசியத்திற்கான குரலை அடக்கும் அரசின் தொடர்ச்ச...
- யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்ததலைவர் மீது தாக்கு...
- இலட்சியத்திலிருந்து திசைதிருப்ப புதிய பிரச்சினைகளை...
- வன்னியில் புனரமைப்புச் செய்யப்படாத 79 பாடசாலைகள் !
- வன்னியில்தொடங்கியுள்ள பருவமழையினால் மீள்குடியேற்றி...
- முறிகண்டி மக்கள் சொந்த இடங்களில்குடியேறமுடியாது !
- யாழில் வாக்களராக பதிவுசெய்யாதவர்கள் பதிவு செய்யவேண...
- விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாத பாலியல் பல...
- ராஜீவ்காந்தி நிகழ்த்திய போர் குற்றங்களை எடுத்துகாட...
- அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் காலூன்றத...
- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சிங்களவர் உய...
- இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்ட...
- பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு வெற்றிகிடைத்துள்ளது !
-
▼
November
(56)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?