விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கலாச்சார சீரளிவுகள் நடந்ததே இல்லை என்றுயாழ்மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார்தெரிவித்துள்ளார்முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டுக்குள் பணியாற்றியது ஒரு சுகமான அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவில் நான் அரசஅதிபராக கடமையாற்றும் போது இப்போது யாழில் நடைபொறுவது நடந்ததாக நான் அறிந்ததே இல்லை. முல்லை மக்கள் பாலியல் பலாற்காரம் என்பதையே அறியாமல் இருந்தார்கள். அதற்கு காரணம் விடுதலைப் புலிகளின் ஆட்சியே என்பதை யாரும்மறுத்துவிட முடியாது. ஆனால் யாழில் நாளுக்கு நாள் புதுப் புது வடிவத்தில் பெண்களுக்கு எதிரான பலக்காரங்கள் அதிகரித்துச் செல்லுகின்றது.பெண்கள்கல்வி கற்கும் இடற்களில் ஆரம்பித்து வேலைபுரியும் இடங்கள் வரை பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளது. அவற்றில் அனேகமான முறைப்பாடுகள் என்னிடம் கிடைத்துள்ளன. அவர்கன் மீது தகுந்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான தனியான ஒரு செயற்றிட்டம் முன்நெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

Powered By: TNPF

பார்வை